Muthal Muyarchi


About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கவிதை and tagged . Bookmark the permalink.

13 Responses to Muthal Muyarchi

 1. வெங்கட்ராமன் says:

  கவிதை நன்றாக இருந்தது.தமிழில் பதிய சிரமப் ப்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.http://tamilinblogs.blogspot.com சென்று பார்வை இடுங்கள் Using UNICODE fonts முறையில் முயலுங்கள்http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 சென்று Download Now!eKalappai 2.0b (Anjal) பதிவிறக்கம் செய்து உபயோகிக்கவும், மேலும் விவரங்கள் தேவைப் பட்டால் தயங்காமல் தொடர்பு கொள்ளவும்

 2. லக்ஷ்மி says:

  வருகைக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி வெங்கட்ராமன்.

 3. செல்வநாயகி says:

  மிக எளிமையானதென்றாலும் நிறையச் சொல்கின்றன இந்தப் பதிவின் வரிகள். உங்களின் வலையுலக வரவுக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

 4. லக்ஷ்மி says:

  நன்றி செல்வநாயகி அவர்களே.

 5. மகா says:

  ஒரு ஆண் பற்றிய உறவு குறித்தான கவிதையாக என் அறிவுக்குப்படுகிறது.கவிதை சிறப்பாக இருந்தது.அதென்ன ‘மிக எளிமையானதென்றாலும்’ என்று செல்வநாயகி சொல்கிறார்கள். எளிமையாக எழுதுதல் சிறப்பான பண்பு. தொடர்ந்து எழுதுங்கள். எளிமையாக எழுதுங்கள்.

 6. லக்ஷ்மி says:

  ஆம் மகா. தொடர்ந்து சிக்கல்களையே தந்து வரும் ஒரு உறவின் முறிவு தரும் ஆசுவாசத்தை பற்றியது அது. தங்களின் புரிதலுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

 7. செல்வநாயகி says:

  அடடா, சிலநேரங்களில் மனம் நினைப்பதைச் சொற்கள் அப்படியே வெளிப்படுத்திவிடுவதில்லை. அதுதான் “மிக எளிமையானது” என்ற என் சொற்பிரயோகம் சரியானபடி நான் நினைத்ததைச் சொல்லாது விட்டிருக்கிறதென நினைக்கிறேன்.மகா,எளிமையாக எழுதுவதை ஒரு குறையாகச் சொல்ல வரவில்லை. என்னுடையதே பெரும்பாலும் அப்படியானவைதான். கவிதைக்கான வடிவங்களில் பல உள்ளன இல்லையா? அதில் பூடகமான பல்பொருள்களை நுழைக்கும் அடர்த்தியான வடிவம், ஒரு பொருளை நேரடியாக எளிமையாக வாசகருக்குச் சொல்லும் வடிவம் என. இதில் இரண்டாவது வடிவத்தில் அமைந்தது இது என்பதையும் அவ்வடிவத்திலேயே நிறைவான பொருளைச் சொல்ல முயல்கிறது என்பதையும் குறிக்கும் வண்ணமே அப்படி எழுத நினைத்தேன். மற்றும்படி குறைத்து மதிப்பிடவில்லை. அப்படி நீங்களோ, லட்சுமியோ நினைக்கும்படி என் சொல்லின் தொனி இருக்குமானால் வருந்துகிறேன். நன்றி.

 8. Satsabesan says:

  ThanksWhat a nice poem. This poem will be applied in most of the ppl’s life. Real relationship between the ppl. Thanks again.Satsabesan

 9. உமையணன் says:

  இன்றுதான் உங்கள் பதிவை கூக்ள் ரீடரில் இணைத்தேன். கவிதை நன்றாக இருக்கிறது. அதிலும் முதல் வரி மிகவும் அருமை.

 10. லக்ஷ்மி says:

  உமையணன் – பாராட்டுக்கு நன்றி. ரீடரில் இணைத்து ரெகுலர் விசிட்டுக்கு உத்ரவாதம் தந்ததுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

 11. ஜ்யோவ்ராம் சுந்தர் says:

  1. மொழி நடை சரியாகக் கைகூட‌வில்லை இந்தக் கவிதையில் என்றே தோன்றுகிறது.2. கற்றாழையைச் செடி என்று நம்பி வளர்த்த சோகம் சரியாகப் பதிவாகவில்லை.3. ‘என்’ எதிர்பார்ப்பிற்கிணங்க வராத நட்பை / உறவை ‘அனைவரையும்’ கிழிக்கும் முள்ளாக உருவகப் படுத்த முடியுமா.?

 12. வாக்காளன் says:

  லக்ஷ்மி அவர்களே,நல்ல கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்

 13. லக்ஷ்மி says:

  வருகைக்கும் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கும் நன்றி திஸ் அன்ட் தட்.சுந்தர், உண்மையில சொல்லணும்னா இதை எழுதினப்ப ஒரு கவிதை எழுதணும்ன்ற எண்ணமும் எனக்கில்லை. பதிவு ஆரம்பிச்சு எழுதிக் கிழிக்கணும்ன்ற லட்சியமும் இருந்திருக்கவில்லை. இந்த கவிதை மாதிரியான விஷயத்தை எழுதினது ஒரு மன அழுத்தம் மிகுந்த நாளில். அப்படியே உணர்ச்சிக் கொந்தளிப்பில் தோணின சில வரிகளை அப்பத்தான் நான் கணிணில நிறுவியிருந்த முரசை இயக்கி எழுதி வைத்தேன், தலைப்பு கூட கிடையாது. இது முதல் நாள். மறுநாள் எந்த சாத்தானோ ஆசீர்வாதம் பண்ணிய ஒரு புண்ணிய சுபயோக சுபமுகூர்த்தத்தில் ப்லாக் ஒன்னையும் ஆரம்பிச்சுட்டேன். அப்புறம் அடுத்த பிரச்சனை இது யுனிகோடில் இல்லையே என்ன பண்ணலாம்ன்றது. திரும்பின பக்கமெல்லாம், தடுக்கி விழுற இடத்திலெல்லாம் யுனிகோடில் எழுத உதவிகள் தமிழ்மணம் பூராவும் இறைந்து கிடக்கும் நிலையிலும் ஒரு மேலோட்டமான தேடுதலுக்கு கூட தயாரான மனநிலையில அப்ப நான் இல்லை. அதுனால, முரசை இயக்கிட்டு அந்த வோர்ட் கோப்பைத் திறந்து அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதை ஒரு இமேஜா போட்டுதான் முதல் இடுகைய ஒப்பேத்தினேன். அதை மாத்த மனசில்லாததாலதான் இப்பவும் அதை அப்படியே விட்டு வச்சிருக்கேன். அதுனால இதுல ஒரு கவிதையோட சர்வ லட்சணங்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். அதுனால உங்களோட முதல் மற்றும் இரண்டாவது கேள்விகளுக்கு எதும் விளக்கம் கைவசம் இல்லை.உங்க மூனாவது கேள்விக்கு மட்டும் ஒரு சின்ன விளக்கம் – என் எதிர்பார்ப்பிற்கிணங்க மட்டுமில்லை எந்த உறவிலும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளுக்குக் கூட உட்பட்டு வராத ஒரு உறவோடு நாம போராடறதை எந்த உதவியும் செய்ய முடியாம வெறுமனே பார்க்க நேர்வதே நெருங்கின நட்பு/உறவு வட்டத்துக்கு ஒரு தண்டனைதான் இல்லையா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s