கையெட்டும் தூரம்


உதிரத்தொடங்கிவிட்ட சுவற்றுச்சுண்ணாம்பு
காட்டுகின்ற தெளிவற்ற ஓவியமாய்
மாறியபடியிருக்கின்றன என் முடிவுகள்.
பெரியதொரு பந்தில் விழுந்த ஊசித்துளை வழி
ஒரு சீராய் குறைகின்ற காற்றுப்போல்
இறங்கியே வருகிறது என் மனவுறுதி.
உன் பார்வை எறும்புகள் ஊர்ந்ததில்
நம்மிடையிலான பாறைத்தடைகள் தகர்கின்றன.
நம்மிருவருக்கும் இப்போது
அப்படியொன்றும் இடைவெளி அதிகமில்லை.

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கவிதை and tagged . Bookmark the permalink.

10 Responses to கையெட்டும் தூரம்

  1. வல்லிசிம்ஹன் says:

    லக்ஷ்மி,பார்வையாலே பாறை தகர்கிறதா.நல்ல வரிகள்.

  2. Deva Udeepta says:

    கவிதைத்தனமான சிந்தனை. நல்ல வரிகள். சித்தன்னவாசல் சென்றிருக்கிறீரா?

  3. லக்ஷ்மி says:

    ரொம்ப நன்றி வல்லி அம்மா. ‘எறும்பு ஊற கல்லும் தேயும்’ இல்லையா? அதான் பார்வை எறும்புகள் பாறைத்தடைகளை தேய்க்கறதா சொல்லி இருக்கேன். பெரியவங்க எல்லாம் பாராட்டறதை பார்த்தால் நிஜமாவே நான் எதோ கொஞ்சம் சுமாரா எழுதறேன் போல இருக்கே. சந்தோஷமா இருக்கு.நன்றி திரு.தேவ உதிப்தா. பேர் ரொம்ப புதுமையா இருக்கே. நிஜப்பேரா இல்லை எதும் புனைப்பெயரா?

  4. Deva Udeepta says:

    ஏன் நல்ல பெயரேவைக்க மாட்டார்களா என்ன?எல்லாம் பெற்றோர் வைத்த பெயர்தான். அதுசரி அது என்ன நிஜப்பெயர்? பொய்ப்பெயர் என்று ஏதேனும் உண்டா?

  5. துளசி கோபால் says:

    நான் கவிதை ஆளு இல்லைங்க.ஆனாலும் படிச்சுப் பார்த்தேன்.‘எறும்பு ஊறக் கல்லும் தேயும்’ சரிதாங்க.ஆமாம்.இப்ப ஊற இல்லே ஊர எது சரி?ஊர்ந்து போகுதல் அப்படின்னு சொல்றோம். அது ஊரஅரிசி ஊற வச்சுருக்கு. இது ஊறதெரிஞ்சவுங்க சொல்லுங்க:-)

  6. லக்ஷ்மி says:

    ஆமாங்க துளசி மேடம். ஊர்வன, ஊர்வலம் மாதிரி எறும்பும் ஊர்ந்துதான் இருக்கணும். அதுனால இடையினத்துக்கு மாறிட்டேன். (இப்போதான் புரியுது ஏன் உங்களை எல்லாரும் டீச்சர்ன்னு சொல்றாங்கன்னு.)

  7. சேதுக்கரசி says:

    இந்த அறிவிப்பைப் பாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:நீங்க கவிதையெழுதுவீங்களான்னு தெரியலியே.. இதைப் பாருங்க.. உங்க நண்பர்களுக்கும் சொல்லுங்க:< HREF="http://groups.google.com/group/anbudan/t/b1e9089129a64843" REL="nofollow">அன்புடன் கவிதைப் போட்டி<>< HREF="http://priyan4u.blogspot.com/2007/03/2.html" REL="nofollow">ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்<>பங்கேற்று வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  8. மகா says:

    புரியாத கவிதைகள் படித்து, படித்து, புலம்பி கொண்டு திரிந்தேன். இப்போ இரண்டு கவிதைகள் புரிந்துவிட்டன. ரெம்ப மகிழ்ச்சி. இப்ப இந்த கவிதை சரியா புரியவில்லை. திரும்ப புலம்ப வச்சுட்டுங்களே லக்ஷ்மி.

  9. சேதுக்கரசி says:

    நினைவூட்டல்: < HREF="http://groups.google.com/group/anbudan/web" REL="nofollow">அன்புடன் கவிதைப் போட்டி<> – கடைசி நாள் ஏப்ரல் 14 இந்திய நேரப்படி இரவு 12 மணி!

  10. Deepak Vasudevan says:

    லக்ஷ்மி: ஒரு சந்தேகம். வலைப்பூவில் லேபல் உள்ளதல்லவா? இது Template automatica வர வழி இருக்கிறதா அல்லது ஒவ்வொரு லேபல் போட்ட பிறகும் நாம் தான் Template update பண்ண வேண்டுமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s