பழைய நினைப்பு…


சென்ற வாரயிறுதியில் ஊருக்குச்சென்று திரும்பும்போது எனது பழைய கவிதைகள் சில என்னிடம் கிடைத்தன. என் தோழி ஒருவர் அவ்வப்போது நான் கிறுக்கிய கவிதைகள் சிலவற்றை பதிந்து வைத்திருந்தார். அவரிடம் வலைப்பதிவைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தபோது இவற்றையும் அதில் சேர்க்கலாமே என்று சொல்லி எடுத்து தந்தார். இதில் பெரும்பாலானவை நான் இளநிலை கணிப்பொறியியல் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதியவை. இப்போது படித்து பார்க்கையில் சற்றே சிறுபிள்ளைத்தனமாய் தோன்றினாலும், படிக்கையில் அவை நினைவு படுத்தும் அந்த கல்லூரி வாழ்க்கையும் இதில் பெரும்பாலான கவிதைகளை நான் எழுதக்காரணமாயிருந்த என்னுடைய அப்போதைய ஒருதலைக்காதலும் என் வாழ்வின் மறக்கவியலாத இனிய கணங்கள். அவற்றை இங்கே வலையேற்றி எப்போதாவது இந்தப்பக்கம் வந்து போகும் சிலரையும் பயமுறுத்துவதாக முடிவு செய்துள்ளேன். மேற்கொண்டு தொடர்வது தங்களது தாங்கும் சக்தியைப்பொறுத்தது. அவ்வப்போது நான் என் குறிப்பேடுகளின் ஓரத்தில் எனக்கே பெரும்பாலான நேரத்தில் புரியாது போய்விடுகிற என் அற்புத கையெழுத்தில் கிறுக்கியிருந்ததை பொறுமையாய் படியெடுத்து சேமித்து வைத்திருந்த என் அன்புத்தோழிக்கு என் நன்றி.

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம். Bookmark the permalink.

2 Responses to பழைய நினைப்பு…

  1. கனவின் பயணம் சொல்கிறார்:

    இந்த வாரயிறுதியில் ஊருக்குச்சென்று திரும்பும்போது…….உமது பதிவில் காலப் பிழை உள்ளது……..

  2. லக்ஷ்மி சொல்கிறார்:

    ஐயா தூ.க.ஒ, இப்போ திருத்திட்டேன். பார்த்து சொல்லுங்க. திருவிளையாடல்ல ஒரு வசனம் வரும் – “பாட்டெழுதி பேர் வாங்குகிற புலவர்களும் உண்டு. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் உண்டு. இதில் நீர் எந்த வகையென்று உமக்கே தெரியுமென்று நினைக்கிறேன்” அப்படின்னு நாகேஷ் சொல்வார் நக்கீரரைப்பார்த்து. ஆமா, நீங்கள் இதுல எந்த வகைன்னு உமக்கே தெரியும்தானே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s