இப்ப ஒரு பெண் ஜனாதிபதி ரொம்ப முக்கியமா?


முதல் பெண் பிரசிடென்ட் அமையவிருப்பது, ராஷ்டிரபதிபவன் அதிகாரிகளையும் இந்தி மொழி பண்டிட்டுகளையும் இப்போது மூளையை கசக்க வைத்திருக்கிறது. பிரதீபாவை எப்படி ராஷ்டிர’பதி’ – தேசத்தின் கணவர் என்று அழைக்க முடியும்? ராஷ்டிரபத்தினி என்று சொல்வதா? ராஷ்டிர நேத்தா என்பதா? ‘பதி’ என்பதற்கு வெறுமே உரிமையுடையவர், அதிபர் என்று பொருள் இருந்தாலும், இந்தி மொழி இலக்கணப்படி அது ஆண்பால் சொல்!
பெண்கள் மேலும் பொது வாழ்க்கையில் முக்கிய இடங்களுக்கு வரும்போதுதான் நம் மொழிகளும் ஆண் மொழிகளிலிருந்து மனித மொழிகளாக மாறும்.

கைம்பெண்ணுக்கு ஆண் பால் இல்லை என்பது போன்ற சிக்கல்கள் தமிழுக்கும் உண்டு. எனினும் தற்போதைய பிரச்சனையில் தமிழில் சிக்கல் இல்லை. ஆணாக இருந்தால் குடியரசுத் தலைவன். பெண்ணானால், குடியரசுத் தலைவி. மரியாதையாக இருவருக்கும் பொதுவான குடியரசுத் தலைவர். வாழ்க தமிழ்!

மேலே இருப்பது ஞானி இந்த வார விகடனில் அவரது பத்தியான ஒ பக்கங்களில் எழுதியிருக்கும் கட்டுரையின் கடைசிப் பகுதி. ஏதோ தலைப்பிலிருக்கும் கேள்விக்கு இது ஒன்றுதான் பதில் என்று அவர் சொல்லியிருப்பதாய் நினைத்துவிட வேண்டாம். நிறைய காரணங்களை தன்னுடைய கட்டுரையிலே கொடுத்திருக்கிறார் ஞானி. முக்கியமாய் அவர் குறித்திருப்பது – இது வரை அவர் மேல் எந்த பெரிய ஊழல் குற்றச்சாட்டுமில்லை என்பதுதான். உண்மைத்தமிழன் அவரது பயோடேட்டாவை சிறப்பாக தொகுத்து தந்துள்ளார். அவரது தகுதிப் பட்டியலை விரும்புவோர் அங்கே சென்று சரி பார்த்துக்கொள்ளலாம்.

எல்லாம் சரி, ஏன் ஒரு பெண் வேட்பாளர் என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஏன் ஒரு பெண் வேட்பாளர் கூடாது என்ற எளிமையான எதிர் கேள்வி ஒன்றே போதுமான பதில் என்ற போதும்(என்ன கவுண்டமணி ஸ்டைலில் இருக்கும். அவ்ளோதான்) மேலும் சில விளக்கங்கள்.

1. பெரிய அளவிலான அதிகாரங்கள் ஏதுமற்ற பதவிதானெனினும், உலக நாடுகளிடையே இந்தியாவின் முகமாக தென்படப் போகிறவர். இன்னும் அமெரிக்காவே கூட தன் அதிபராய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்திராத போது நாங்க எல்லாம் ரொம்ப முற்போக்குவாதிகளாகும், பெண்ணுரிமை பேணுபவர்களாகும் என்றெல்லாம் காண்பித்துக் கொள்ளலாம். (உடனே அதென்ன அமெரிக்காவே கூட என்று யாரும் என்னிடம் சண்டைக்கு வர வேண்டாம். இன்னமும் நம் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்காதான் பூலோக சொர்க்கம். எதெற்கெடுத்தாலும் அமெரிக்காவிலெல்லாம் என்று ஆரம்பிப்பவர்கள் கணிசமான அளவில் உள்ளதால்தான் அப்பேர்ப்பட்ட பெரியண்ணனே கூட இன்னும் செய்யாத விஷயமாக்கும் இது என்று சுட்ட விழைகிறேன்.)

2. யானை கேட்டு அழும் குழந்தைக்கு குச்சி மிட்டாய் வாங்கி தந்து சமாளிப்பது போல, ஆட்சி அதிகாரத்தின் அடிப்படையான பாராளுமன்ற மற்றும் சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீட்டை கேட்டு வரும் மகளிர் முன்னேற்ற அமைப்புகளின் வாயை இந்த டம்மி பதவியைக் கொண்டு இன்னும் சிறிது காலத்திற்கு அடைத்துவிடலாம் -அதென்ன சிறிது காலம் என்கிறீர்களா? குச்சி மிட்டாய் தீர்ந்தவுடன் குழந்தைக்கு மீண்டும் யானை நினைவு வந்துவிடுமே? அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். எத்தனை ஆயிரம் வருடங்களாக சமாளித்து வருகிறோம் நாங்கள் என்கிறீர்களா, அதுவும் சரிதான்.

3. எனக்கு தெரிந்தவரை குடியரசுத் தலைவருக்கு இருக்கும் ஒரு உருப்படியான அதிகாரம், கருணை மனுக்களை பரிசீலனை செய்து, மரண தண்டனையை ரத்து செய்வது ஒன்றுதான். ஒரு பெண் என்கிற அடிப்படையில் இவர் நிச்சயம் சற்று அதிகமான கருணையோடு நடப்பார் என நம்பலாம். – அதெப்படி? பெண் என்றால் மட்டும் கருணை அதிகமிருக்கும் என்று எப்படி சொல்லப்போச்சு என்றால் – சதவிகித கணக்குப் படி பொதுவாய் பெரும்பாலான பெண்கள் கருணைமிக்கவர்கள், தாய்மையுணர்வோடு இருப்பவர்கள். இவரும் அப்படியேயிருப்பார் என்றே நம்புவோமே..

இப்போதைக்கு இவ்வளவு காரணங்கள் போதுமென்று நினைக்கிறேன்.

பின் குறிப்பு : தலைப்பு உபயம் – மோகன் தாஸ்.

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

27 Responses to இப்ப ஒரு பெண் ஜனாதிபதி ரொம்ப முக்கியமா?

 1. மதி கந்தசாமி (Mathy Kandasamy) சொல்கிறார்:

  //2. யானை கேட்டு அழும் குழந்தைக்கு குச்சி மிட்டாய் வாங்கி தந்து சமாளிப்பது போல, ஆட்சி அதிகாரத்தின் அடிப்படையான பாராளுமன்ற மற்றும் சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீட்டை கேட்டு வரும் மகளிர் முன்னேற்ற அமைப்புகளின் வாயை இந்த டம்மி பதவியைக் கொண்டு இன்னும் சிறிது காலத்திற்கு அடைத்துவிடலாம் -அதென்ன சிறிது காலம் என்கிறீர்களா? குச்சி மிட்டாய் தீர்ந்தவுடன் குழந்தைக்கு மீண்டும் யானை நினைவு வந்துவிடுமே? அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். எத்தனை ஆயிரம் வருடங்களாக சமாளித்து வருகிறோம் நாங்கள் என்கிறீர்களா, அதுவும் சரிதான்.//athu!!! 🙂

 2. பங்காளி... சொல்கிறார்:

  கிடைக்கிற வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்…..அதைக் கொண்டு மேலும் உயரங்களை எட்டுவது சாமர்த்தியம்…..நாட்டின் பிரதமரை ஆட்டிவைப்பதும் ஒரு பெண்தான், இனி இந்த குடியரசுதலைவியையும் ஆட்டுவிக்க போவதும் அதே பெண்தான்…..அறுபது வருடம் கடந்து கிடைத்திருக்கும் அடையாளம்….இதை நினைத்து எனக்கு பெருமையாயிருக்கிறது.நீங்கள் இன்னமும் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறீர்கள்……என்னத்தச் சொல்ல….

 3. லக்ஷ்மி சொல்கிறார்:

  நன்றி மதி. பங்காளி, என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்கறீங்களே… நானும் என்னத்தை சொல்லனு தெரியலீங்கோவ்… 😉

 4. பூனைக்குட்டி சொல்கிறார்:

  எனக்கு Credit’s கிடையாதா?

 5. லக்ஷ்மி சொல்கிறார்:

  மோகனா, பின்குறிப்புல உங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துட்டேன். நன்றி.

 6. அய்யனார் சொல்கிறார்:

  லக்ஷ்மி உங்களை எட்டு எழுத கூப்டு இருக்கேன்

 7. சுல்தான் சொல்கிறார்:

  “என்ன பெண்களுக்கு இன்னும் முழு உரிமை இல்லை என்று பேத்துகிறீர்கள். நாட்டின் குடியரசுத்தலைவரே பெண்தானே!” என்று நாளை சொல்லலாம்லே.

 8. கண்மணி/kanmani சொல்கிறார்:

  லஷ்மி இங்க கொஞ்சம் வந்து ஒரு எட்டு போடுங்களேன்.விபரங்களுக்கு< HREF="http://kouthami.blogspot.com/2007/06/blog-post_9340.html" REL="nofollow">இங்கே பார்க்கவும் <>

 9. துளசி கோபால் சொல்கிறார்:

  ஆமாம்

 10. லக்ஷ்மி சொல்கிறார்:

  சுல்தான், அடுத்த காரணத்தை கரெக்டா பிடிச்சுட்டீங்க. நன்றிங்க.டீச்சர், நறுக்கு தெரிச்சா மாதிரி ஒரே வார்த்தை சொல்லிட்டு போயிட்டீங்க. நன்றிகள்.அய்யனார், கண்மணி – அழைப்புக்கு நன்றி. ஆனா கொஞ்ச நேரமெடுக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா, நம்மைப்பத்தி நல்லதா ஒரு விஷயம கண்டுபிடிக்கணும்னாலே மூச்சு முட்டுது. இதுல எட்டுன்னா, கொஞ்சமில்லை ரொம்பவே கஷ்டம் ;). சோ கொஞ்சம் டைம் கொடுங்க.

 11. Deepak Vasudevan சொல்கிறார்:

  டெல்லியின் நிலைமை தற்போது தமிழ்கத்தின் பிடியில் மற்றும் கருணையில். கோபாலபுரம் அம்மையார் யாரைத் தேர்வு செய்கிறார்களோ மற்றும் டெல்லி அம்மையாருக்கு யாரு ஜால்ரா தட்டுகிறார்களோ அவர்களுக்கு தான் இப்போது முதல் மரியாதை 🙂 🙂

 12. லக்ஷ்மி சொல்கிறார்:

  வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றி தீபக்.

 13. மருதநாயகம் சொல்கிறார்:

  //சதவிகித கணக்குப் படி பொதுவாய் பெரும்பாலான பெண்கள் கருணைமிக்கவர்கள், தாய்மையுணர்வோடு இருப்பவர்கள்//இது ரொம்ப…ரொம்ப…ரொம்ம்ம்ம்ப ஓவர் கான்பிடண்ஸ்

 14. மாலன் சொல்கிறார்:

  இது குறித்த்கு நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். பார்க்க:http://jannal.blogspot.com/பி.கு: தில்லி வாழ்க்கையில் நான் ஆனந்த விகடன் படிப்பதில்லை.(வலையில் கூட)அன்புடன்மாலன்

 15. பூனைக்குட்டி சொல்கிறார்:

  ////சதவிகித கணக்குப் படி பொதுவாய் பெரும்பாலான பெண்கள் கருணைமிக்கவர்கள், தாய்மையுணர்வோடு இருப்பவர்கள்//இது ரொம்ப…ரொம்ப…ரொம்ம்ம்ம்ப ஓவர் கான்பிடண்ஸ்//உங்க காலைக் கொஞ்சம் காட்டுங்க தல. நான் சொன்னா உதைக்க வருவாங்கன்னு நான் விட்டுட்டேன்.//பி.கு: தில்லி வாழ்க்கையில் நான் ஆனந்த விகடன் படிப்பதில்லை.(வலையில் கூட)அன்புடன்மாலன்//மாலன் நீங்க எதையும் மிஸ் செய்றீங்கன்னு நான் நினைக்கலை. 😉

 16. பத்மா அர்விந்த் சொல்கிறார்:

  லஷ்மிஆடும்வரை ஆட்டுவார், மூடுதிரை போடுவார், மேடை அவர் மேடையல்லவோ?

 17. லக்ஷ்மி சொல்கிறார்:

  மாலன், விகடன் பற்றிய உங்களது குறிப்பில் நீங்கள் சொல்ல வருவதை நான் புரிந்துகொள்கிறேன். உங்களை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு நீங்கள் இதை சொல்லவே தேவையில்லை.நீங்கள் சொல்வது சரியே பத்மா. மருதநாயகம், மோகனா இருவருக்கும் நன்றி முதலில் – வருகைக்கும் கருத்து சொன்னதுக்கும்.மருதநாயகம், எதுங்க Over confidence?? தாய்மையுணர்வும் கருணையும் பெண்களுக்கு பொதுவாவே அதிகமிருக்கும்னு சொன்னதா? இதை விட நல்ல காமெடி நான் சமீபத்திலெதுவும் படித்ததில்லை. நீங்க சீரியஸாத்தான் சொல்றீங்கன்னா, ஒரே ஒரு விஷயம்தான் சொல்ல முடியும் – கருணையுணர்வு மட்டும் பெண்களுக்கு அதிகமில்லையெனில் நாட்டுல பெரும்பாலான பெண்கள் கணவனோடு இருந்து குடித்தனம் நடத்த முடியாது. மோகனா, பொண்ணுங்க எல்லாம் Double minded – ஆகத்தான் வண்டி ஓட்டுவாங்க அப்படின்னு பொத்தாம்பொதுவா நீங்க ஒரு ஸ்டேட்மென்ட் அடிச்சீங்களே, கொஞ்ச நாள் முன்னாடி, அப்போ நான் கூட இப்படித்தான் ஒதுங்கி போயிட்டேன் – மொத்தலுக்கு பயந்து இல்லை. உங்களோடு மல்லுகட்ட நேரமின்மையால்.

 18. நந்தா சொல்கிறார்:

  //மோகனா, பொண்ணுங்க எல்லாம் Double minded – ஆகத்தான் வண்டி ஓட்டுவாங்க அப்படின்னு பொத்தாம்பொதுவா நீங்க ஒரு ஸ்டேட்மென்ட் அடிச்சீங்களே,//அது சரின்னா இதுவும் சரிதான்.//சதவிகித கணக்குப் படி பொதுவாய் பெரும்பாலான பெண்கள் கருணைமிக்கவர்கள், தாய்மையுணர்வோடு இருப்பவர்கள்//

 19. லக்ஷ்மி சொல்கிறார்:

  நன்றி நந்தா.

 20. ச.மனோகர் சொல்கிறார்:

  ஒரு பெண் ஜனாதிபதி ஆவதில் எந்த பிரச்சனையும் இல்லைதான்…ஆனால் அவர் இன்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.. ‘நான் உயர் பதவியில் அமர்வேன் என்று எனக்கு அருள்வாக்கு கிடைத்தது’அதுதான் சற்று கவலையாய் உள்ளது.பார்க்க:-http://babumanohar.blogspot.com/2007/06/blog-post.html

 21. லக்ஷ்மி சொல்கிறார்:

  பாபு மனோகர், தனிப்பட்ட முறையில் பிரதீபா ஒரு தகுதியான வேட்பாளரா இல்லையா என்பது வேறு விவாதம். அதில் எனக்கும் மாற்று கருத்துக்கள் உண்டு. ஒரு பெண் என்பதற்காக அவரை ஆதரிக்க கூடாதென்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த காரணத்திற்காகவே அவர் மட்டந்தட்டப்படுவதும் தகாது. இதுவே என் நிலை. தங்கள் வருகைக்கும் கருத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி.

 22. பொன்ஸ்~~Poorna சொல்கிறார்:

  //பொண்ணுங்க எல்லாம் Double minded – ஆகத்தான் வண்டி ஓட்டுவாங்க அப்படின்னு பொத்தாம்பொதுவா நீங்க ஒரு ஸ்டேட்மென்ட் அடிச்சீங்களே, கொஞ்ச நாள் முன்னாடி, அப்போ நான் கூட இப்படித்தான் ஒதுங்கி போயிட்டேன் – மொத்தலுக்கு பயந்து இல்லை. உங்களோடு மல்லுகட்ட நேரமின்மையால். // நான்கூட.. நேரமின்மையால் இல்லை.. ஒரு பயனும் இருக்காதுன்னு கண்டிப்பாக தெரியும் என்பதால்..

 23. லக்ஷ்மி சொல்கிறார்:

  வாங்க பொன்ஸ். எனக்கு எப்பவும் என்னான்னா, அவங்க ஒத்துக்கறாங்களோ இல்லையோ நம்மளோட கருத்துக்களையும் பதிவு செஞ்சுடனும்னு ஒரு எண்ணம். ஏன்னா இது ஒரு பொதுத் தளம். இதுல எதிர்கேள்வியே இல்லாம சில அபத்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுட்டா நாளைக்கு பின்ன படிக்கறவங்க அது சரியோன்னு கூட நினைச்சுடக் கூடுமில்லையா? ஆனா அப்போ எனக்கு கொஞ்சம் நேரமில்லை. அதுனால விவாதத்துல இறங்காம ஒதுங்கி நின்னுட்டேன்.

 24. முத்துலெட்சுமி/muthuletchumi சொல்கிறார்:

  ரொம்ப கஷ்டங்க லக்ஷ்மி..வேறென்ன சொல்லறது.

 25. pulliraja சொல்கிறார்:

  “கைம்பெண்ணுக்கு ஆண் பால் இல்லை என்பது போன்ற சிக்கல்கள் தமிழுக்கும் உண்டு”.யாரு சொன்னான்?தபுதாரன்.புள்ளிராஜா

 26. pulliraja சொல்கிறார்:

  “கைம்பெண்ணுக்கு ஆண் பால் இல்லை என்பது போன்ற சிக்கல்கள் தமிழுக்கும் உண்டு”.யாரு சொன்னான்?தபுதாரன்.புள்ளிராஜா

 27. லக்ஷ்மி சொல்கிறார்:

  முத்துலெட்சுமி, என்ன நினைக்கிறீங்கன்னு புரியலை. தனிமடலில் பேசுகிறேன் உங்களிடம். புள்ளிராஜா – ஏதோ ஒரு அகராதியோட மூலைல அந்த வார்த்தை இருக்கலாம். ஆனா அது புழக்கத்திலிருக்கா? எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து இன்று வரை இப்படி ஒரு வார்த்தை எங்கும் எப்போதும் உபயோகிக்கப் பட்டதில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s