கேள்விகள்


ஓவ்வொரு முறையும் எதையோ சொல்ல எண்ணி ஆரம்பிக்கிறோம்.
எதையெதையோ பேசித் தீர்க்கிறோம்.
எதையுமே புரிந்து கொள்ளாது பேச்சு முடிகிறது.
என்னிடம் பதிலில்லாத கேள்விகளாய் தொகுத்து வைத்திருக்கிறாய் நீ.
அதிலிருந்து ஒவ்வொன்றாய் என் முன் இடுகிறாய்.
என் கையாலாகாத மௌனம் கண்டு இரங்கி
பதில்களை நோக்கி என்னை செலுத்துவதற்காய்
நீ மேலும் சில துணைக் கேள்விகளை இறைக்கிறாய்.
அவைகளுக்கும் கூட எனக்கு விடைகள் தெரியவில்லை.
இருவருமே தோல்விகளை ஒப்புக்கொண்டு
மௌனத்தில் தலையை புதைத்துக்கொள்கிறோம்.
இருதரப்பும் தோல்வியடைவதான
இந்த வினோத விளையாட்டை
எப்படிக் கண்டடைந்தோம் நாம்?
எப்போது கரையேறப்ப்போகிறோம் ?
எனக்கு பதில் தெரிந்த ஒரு கேள்வியை நீயோ
இல்லை உன்னிடமிருக்கும் ஏதேனும் ஒரு கேள்விக்கான பதிலை நானோ
கண்டுபிடித்துவிட்டால் போதும்.
முடியுமா?

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

18 Responses to கேள்விகள்

 1. ஆழியூரான். சொல்கிறார்:

  என்கிட்டயும் சில கேள்விகள் இருக்கு..1.மினி குவாட்டர் மறுபடியும் போடுவாய்ங்களா..?2. காந்தி செத்துட்டதா சொல்லிக்கிறாங்க. உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா..?3. இருண்மையின் கரங்கள் பிரஞ்ஞையற்ற பெருவெளியினூடாக கட்புலனாகும்போது தாவு தீருமா.. தீராதா..?4.அன்புத்தோழி எப்ப ரிலீஸ்..?5.அர்ஜெண்டா கடன் கேட்டா தருவீங்களா..?6. ekalappai என்பதை இ கலப்பை என்று வாசிக்க வேண்டுமா..? எ கலப்பை என்று வாசிக்க வேண்டுமா..? 7. பள்ளிப்படிப்பை ஏன் +2 வுடன் நம்மூரில் நிறுத்திவிட்டார்கள்..? இதன்மூலமாக ‘நான் +3 படிக்கிறப்போ..’ என்று பிளாஷ்பேக் சொல்லும் வாய்ப்பு ஒரு குடிமகனாக எனக்கு கிடைக்காமல் போகிறது என்று சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா..? 8. NOKIA 7790 மாடல் என்ன விலை..?9. நான் நல்ல மன நிலையோடு இருப்பதாக சொன்னால் நம்புவீர்களா..?10. ஒரு கவிதைக்கு இப்படி ஒரு கமெண்ட் வருமென எதிர் பார்த்தீர்களா..?11. இதற்கு மேலும் தனியாக டிஸ்கி போட்டு, ‘சும்மா.. தமாசு’ என்று எழுத வேண்டுமா..?

 2. கோபிநாத் சொல்கிறார்:

  \\ஓவ்வொரு முறையும் எதையோ சொல்ல எண்ணி ஆரம்பிக்கிறோம்.எதையெதையோ பேசித் தீர்க்கிறோம்.எதையுமே புரிந்து கொள்ளாது பேச்சு முடிகிறது.\\சில நேரங்களில் சிலர்யிடம் பேசும் போது எனக்கும் இந்த எண்ணம் வந்ததுண்டு.

 3. பொற்கொடி சொல்கிறார்:

  உங்க கவிதை பல தாக்கங்களை ஏற்படுத்தியது. கேள்விகளால் நிரம்பியதுதானே வாழ்கை. பதில் கிடைக்கும்போது வாழ்கை முடிந்துவிடுகிறது.இன்னும் எனக்கு புரியாமல் இருப்பது, மனிதன் முதன்முதலில் என்ன கேள்வி கேட்டிருப்பான் என்பது. ஒரு சின்ன பதிவு கூட போட்டுருக்கேன். படிச்சுப்பாருங்க.

 4. லக்ஷ்மி சொல்கிறார்:

  ஆழியூரான், உங்க #3வது கேள்விய படிச்சதுமே தெரிஞ்சுடுச்சு உங்க #9வது கேள்விக்கு பதில் ‘இல்லை’ அப்படின்றதுதான்னு. 😉 அப்புறம், என்கிட்ட ஒரே ஒரு கேள்வியிருக்கு – உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா, இல்லையா?(ஏதோ கவிதைன்னு இதை வகைப்படுத்தின சின்ன தப்புக்காக இப்படியாய்யா கலாய்க்கறது? வேணாம், அழுதுடுவேன், சொல்லிட்டேன்… )கோபி, பொற்கொடி – ஏதோ நீங்க ரெண்டு பேருமாவது இதை கவிதைன்னு ஒத்துகிட்டு கருத்து சொல்லியிருக்கீங்களே, ரொம்ப நன்றிப்பா. 🙂

 5. வல்லிசிம்ஹன் சொல்கிறார்:

  lakshmi,kavithaithaan oththukkaREn.KeLvikalUKKUP pathilum kidaiththaal thevalai.

 6. லக்ஷ்மி சொல்கிறார்:

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் வல்லி அம்மா. நானும் பதில்களை தேடிகிட்டேதான் இருக்கேன், கிடைத்ததும் நிச்சயமா சொல்றேன். 🙂

 7. கையேடு சொல்கிறார்:

  enakku ore oru kelvithaanga” yethu kavithai, yethu kavithai alla enru eppadith theermaanippathu..?” enakku nijamaavey bathil theriyaathunga.ungal pathivu kavithaiyairunthaalum sari siru paththiyaai irunthaalum sari -annaal poruladakkam nanraaha ullathu – ranjith

 8. லக்ஷ்மி சொல்கிறார்:

  ரஞ்சித், இதுதான் கவிதைன்னு யாரும் நாலு கோடு போட்டு வரையரை செஞ்சுட முடியாதுன்றது என் கருத்து. படிக்கும்போது நம்மால அது கவிதைன்னு உணர முடியனும் – உள்ளுணர்வுன்னு சொல்லுவாங்களே, அது சொல்லணும் இது கவிதைதான்னு. அப்படித்தான் நான் என் வரையில் கவிதைக்கு இலக்கணம் வச்சிருக்கேன். சில சமயம் ஆட்டோ பின்னால எழுதியிருக்கற ரெண்டு வரி கூட அற்புதமான கவிதையா தோணியிருக்கு. அப்புறம், நான் எழுதியிருக்கற ஏதோ ஒன்னையும் புரிஞ்சு பாராட்டினதுக்கு நன்றி. நீங்க தமிழ்லயே எழுத முயற்சிக்கலாமே?

 9. tharuthalai சொல்கிறார்:

  நீங்க அவங்களுக்கு புரியற மொழில கேள்வி கேட்கனும், பதில் சொல்லனும். அப்படியும் புரியலையா ஆள மாத்துங்க. எங்கிட்டயும் எக்கச்சக்க கேள்விகள் இருக்கு. கேட்க ஆரம்பிச்ச தாங்காது வலைப்பூ.-தறுதலை(தெனாவெட்டுக் குறிப்புகள்-’07)என் வாழ்க்கை இணயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

 10. பூனைக்குட்டி சொல்கிறார்:

  //அப்படியும் புரியலையா ஆள மாத்துங்க. //நெத்தியடி!!!

 11. லக்ஷ்மி சொல்கிறார்:

  தறுதலை, மோகனா – வருகைக்கு நன்றி. புரியறா மாதிரி – அது எந்த மாதிரின்னு தெரிஞ்சா அப்படி கேட்டுட மாட்டோமா? வச்சுகிட்டாய்யா வஞ்சனை பண்றோம்…. அப்புறம் ஆளை மாத்துறது – கொஞ்சம் சிக்கலான விஷயம். கடைசிகட்ட நடவடிக்கையாதான் இருக்க முடியும், இல்லையா?

 12. பொற்கொடி சொல்கிறார்:

  இதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க அக்கா. நாலு பேர் நாலுவிதமா சொல்லுவாங்க. இது கவிதை தான். அதுக்கு நான் கியாரண்டி.ஒருத்தர் ஒரு பதிவுல கவிதைன்னு ஒன்னு போட்டிருந்தார். அதுக்கு ஒருத்தர் கமெண்ட் போட்டிருக்கார்“ஆச்சரியக்குறி!” ன்னு.. ஒரே காமெடிதான் போங்க

 13. அய்யனார் சொல்கிறார்:

  இந்த கவிதை எந்த பின்புலத்தில் எழுதப்பட்டிருக்குமெனத் தெரியவில்லை.ஆனால் ஒரு சிறுமி/சிறுவனிடம் ஏதாவது ஒரு கேள்வி கேட்டு அவன் தெரியாதென விழிக்கத் துப்பு கொடுக்கும் கேள்விகள் மேலும் சிக்கலாக்க அவள்/அவன் விழிக்கும் மனச்சித்திரம் கண்முன் விரிகிறது..ஒரு அழுத்ததை உருவாக்க நினைத்து எழுதப்படும் கவிதைகள் கூட சில சமயங்களில் வேறொரு சன்னலை திறந்து வைப்பது எவரின் தோல்வியுமில்லை.அவரவர் உள்ளங்கைக்கேற்றார்போல் அள்ளிக்கொள்ள வேண்டியதுதான்

 14. பழூர் கார்த்தி சொல்கிறார்:

  லஷ்மி, கவிதை சுமாராகத்தான் இருக்கிறது, இருந்தாலும் முயற்சிக்கு பாராட்டுகள்!!< <>>ஆழியூரான், ரிப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :-)))))கலக்கிட்டீங்க 🙂 இருந்தாலும் லஷ்மியை இந்த பாடு படுத்தக்கூடாதுதான் :-))))லஷ்மி,//ஏதோ கவிதைன்னு இதை வகைப்படுத்தின சின்ன தப்புக்காக இப்படியாய்யா கலாய்க்கறது? வேணாம், அழுதுடுவேன், சொல்லிட்டேன்… )//லஷ்மி, இப்படியெல்லாம் சொல்லப்புடாது, ஆவ்வ்வ்வ் :-)))< <>>அப்புறம் எல்லாரும் கவிதைக்கு இலக்கணம் சொல்றதுனால நானும் என் பங்குக்கு ஏதாவது சொல்றேன் :-)))அதாவதுங்க, இப்ப கோயிலுக்கு போறப்ப பிரகாரத்திலேயே ஒரு பிகரை பார்க்கிறோம், அழகா தாவணி, பொட்டு, மல்லிகைப்பூவோட… இது ஒரு சம்பவம்.. இப்ப இதை கவிதையா மாத்தறேன் பாருங்க :-)))தேவதைகள் கோயில்களில்உலாவுவதெல்லாம்புராணத்தில் மட்டும்தான்என்று நினைத்திருந்தேன்உன்னைதரிசுக்கும் வரை…இதுதாங்க கவிதைக்கான பார்முலா… இதை இன்னும் கொஞ்சம் புரியாத வார்த்தையெல்லாம் போட்டு எழுதினா அது பின்நவீனத்துவ கவிதையாயிடும் :-)))அப்புறம் கவிதை யாருக்கும் புரியலன்னா கவலைப் படாதீங்க.. பலசமயம் கவிதையாசிரியருக்கே கவிதை புரியாமப் போயிடும் :-))) கவிதையையெல்லாம் ஆராயக்கூடாது, அனுபவிக்கனும்ங்க :-)))))

 15. லக்ஷ்மி சொல்கிறார்:

  //அவரவர் உள்ளங்கைக்கேற்றார்போல் அள்ளிக்கொள்ள வேண்டியதுதான்// கவிதைகளை உணர்வது குறித்தான் எனது புரிதலும் இதுவே அய்யனார். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.பொற்கொடி, ஆகா இது கவிதைதான்றதுல என்னை விட ரொம்ப உறுதியா இருக்க போலிருக்கே? ரொம்ப டாங்ஸ்பா…பழூர் கார்த்தி – வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 16. குருத்து சொல்கிறார்:

  மிக நெருக்கமான உறவுகளில் எழும் சிக்கல்கள் நிறைய ரணமானவை. அதை தீர்க்கும் வரைக்குமான காலங்கள் மிகுந்த மன உளைச்சல்மிக்கவை.சிலர் எளிதாய் சொல்வது போல, ஆளை மாற்றுதல் மிக எளிதானதில்லை. இந்தியா போன்ற நிலப்பிரபுத்துவ பண்பாட்டில், மிக மிக கடினமானது.எளிய உதாரணமாய் சொல்வதனால், முள்ளில் சிக்கிய சேலைப்போல தான்.நம்பிக்கையானவர்கள், அனுபவம், நிதானம் உள்ளவர்களோடு விவாதியுங்கள்.இதே போல, எனக்கொரு காலமும், உறவு சிக்கலும் இருந்தது. அப்பொழுது, அப்துல்ரகுமானின் ‘முற்றுப்புள்ளி’ என்றொரு உரைநடை கவிதை நிறைய தெளிவைத் தந்தது. பலவிசயங்களுக்கு முற்றுப்புள்ளி எத்தனை அவசியம் என்பதை எனக்கு உணர்த்தியது.முடிந்தால், உங்களுக்காக தேடிப்பிடித்து ஒரு பதிவிடுகிறேன்.வடிவத்தை பொறுத்த வரையில், திருத்தி எழுதிய பிறகு, ஒரு வார்த்தை எடுத்தால் கூட கவிதை புரியக்கூடாது. அதற்கு முன்நிபந்தனை – மெனக்கெடலும், மொழி ஆளுமையும் அவசியம்.உங்களுக்கு நெருக்கமான பதிவர்கள், கவிதை உணர்த்துகிற ரணம் புரியாது, ஜல்லி, கும்மி அடிப்பதை நீங்கள் எப்படித்தான் தாங்கி கொள்கிறோர்களோ, என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

 17. உமையணன் சொல்கிறார்:

  எனக்கு கூட ஒரு கேள்வி இருக்கு. இதை (நான் உங்களோடத மட்டும் சொல்லல)ஏன் எல்லோரும் கவிதைனு சொல்றாங்க? இதுக்கு ஏன் வேற பெயர் வைக்கக்கூடாது? இலக்கியத்துல கதை, கவிதையை தவிர இது ஏன் மூணாவது வகையா இருக்கக்கூடாது? உங்களுடைய முந்தைய இடுகையில் நான் சொல்ல நினைத்து விடுபட்ட எங்கோ எதிலோ எப்போதோ படித்த ஒரு வாக்கியம். “நீயும் நானும் பேசிக்கொண்டிருக்கும்போது உண்மையில் நீயும் நானும் பேசிக்கொண்டிருப்பதில்லை. உன்னுடைய நீயும், என்னுடைய நானும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க உன்னுடைய நானும் என்னுடைய நீயும் பேசிக்கொண்டிருக்கிறோம்.”இது இங்க எதுக்குன்னு கேக்கிறீங்களா? எனக்கும் தெரியல. இத எங்கேயாவது எழுதனும்னு தோனுச்சு. சரி இதுக்காக ஒரு இடுகைய வீணாக்க வேணாம்னு இங்க போட்டேன்.

 18. மங்களூர் சிவா சொல்கிறார்:

  ஆஹா கமெண்ட் போடலாம்னு வந்தா இதுக்கு முன்ன போட்டிருக்குற கமெண்ட்டெல்லாம் பாத்து மலைச்சு போயிட்டேன். ரொம்ப அருமையான் கமெண்ட்ஸ்//ஓவ்வொரு முறையும் எதையோ சொல்ல எண்ணி ஆரம்பிக்கிறோம்.எதையெதையோ பேசித் தீர்க்கிறோம்.//‘சொல்லவந்ததை தவிர ‘இல்லையா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s