அடுத்த சுற்று


கர்ப்ப வாசல் தாண்டி
முதல் சுவாசத்தை இழுத்தபோதே
காற்றில் ஒலித்தது பெரியம்மாவின் இடி முழக்கக் குரல்
இப்பவும் பொண்ணுதானா?

பாவாடையை தூக்கி சொருகி
ஓட்டாஞ்சில்லை தூர வீசி
நொண்டியபடி கட்டங்களை கடக்கையில்
பக்கத்து வீட்டிற்கு ஊரிலிருந்து வந்திருந்த
பத்மாக்கா சத்தமாய் அம்மாவிடம் கேட்டாள்
இன்னுமா பெரியவளாகல?

பாவாடை தாவணி போடத் துவங்கியது முதல்
போகும் எல்லா விசேஷத்திலும்
பார்க்கும் எல்லோரும் தவறாது கேட்டார்கள்
இன்னுமா வரன் அமையல?

திருமணமான மறு மாதத்திலிருந்து
வீட்டிற்கு வரும் எல்லோரும் மறக்காது கேட்டார்கள்
இன்னும் விசேஷமில்லையா?

இதோ – நானும் பிரசவ அறையை நோக்கிப் போகிறேன்.
இன்றும் ஒரு வேளை முதல் கேள்வியிலிருந்து
ஆரம்பிக்கப் பட்டுவிடலாம் என்ற பயத்தோடு .

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

27 Responses to அடுத்த சுற்று

  1. PPattian : புபட்டியன் says:

    நல்லாயிருக்கு… பெரியம்மா, பத்மாக்கா… பெண்களேதான்…. 🙂

  2. ஆழியூரான். says:

    //கர்ப்ப வாசல் தாண்டிமுதல் சுவாசத்தை இழுத்தபோதேகாதில் விழுந்தது பெரியம்மாவின் இடி முழக்கக் குரல்இப்பவும் பொண்ணுதானா?//அந்த சின்ன வயசுலயே எவ்வளவு ஷார்ப்பா கவனிச்சிருக்கீங்க இதையெல்லாம்..

  3. குருத்து says:

    நல்ல கவிதை. வசன கவிதையாக இருக்கிறது. இன்னும்கொஞ்சம் மெனக்கெட்டால், கவிதையாக மாறிவிடும். ஏன் மெனக்கெட மாட்டேன் என்கிறீர்கள் லட்சுமி?

  4. லக்ஷ்மி says:

    பாராட்டுக்கு ரொம்ப நன்றி புபட்டியன். பெண்களேதான் அப்படின்னு இல்லை பெண்களும்தான் 🙂 ஆழியூரான், ஆமா நான் தெரியாமதான் கேக்கறேன், கவிதைன்ற குறிச்சொல் போட்டாலே இப்படி தாளிக்கறீங்களே, என்ன ப்ரச்சனை? ஆஃப்லைன்ல பேசி தீத்துக்குவோம்பா, பொதுவுல மானத்தை வாங்காதீங்க… 🙂

  5. லக்ஷ்மி says:

    சாக்ரடீஸ், சோம்பல் ரத்தத்துலயே ஊறிடுச்சுன்னு நினைக்கிறேன். 🙂 ஆனா, கண்டிப்பா மாத்திக்க முயற்சி பண்றேன். பாராட்டுக்கு நன்றி.

  6. ஜே கே | J K says:

    நல்லா இருக்குங்க…

  7. உமையணன் says:

    //இதோ – நானும் பிரசவ அறையை நோக்கிப் போகிறேன்.இன்றும் ஒரு வேளை முதல் கேள்வியிலிருந்துஆரம்பிக்கப் பட்டுவிடலாம் என்ற பயத்தோடு//கவிதை என்று நிரூபித்தனகடைசி வரிகள்.(இதுகூட கவிதை மாதிரி இருக்குல்ல)

  8. கையேடு says:

    ஒரு சுற்றுல நிறைய விசயங்கள் சொல்லிட்டீங்க – ranjith

  9. கோபிநாத் says:

    நல்லாயிருக்கு 🙂

  10. லக்ஷ்மி says:

    JK,உமையணன், கோபிநாத், கையேடு – அனைவருக்கும் நன்றி.

  11. ஜெஸிலா says:

    கவிதையைவிட கருப்பொருள் நல்லா இருக்கு. பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு வெளிச்சம் போட்டிருக்கீங்க. 🙂

  12. லக்ஷ்மி says:

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெஸிலா. ஆனால் புபட்டியனுக்குச் சொன்ன அதே விளக்கம்தான் – பெண்களின் துன்பத்துக்கு எல்லாம் ஒட்டு மொத்தமாய் பெண்கள் மீதோ அல்லது ஆண்கள் மீதோ பழி போடும் எண்ணம் நிச்சயமாய் எனக்கில்லை. இன்னொரு பெண்ணை இழிவு செய்கையில் அது மல்லாந்து படுத்து எச்சில் துப்பிக் கொள்வதைப் போன்ற முட்டாள்த் தனமென்கிற உணர்வில்லாத பெண்களும், தன்னைப் பெற்ற, தன்னோடு பிறந்த, தன்னை மணந்த, தனக்குப் பிறந்த சக மனிதர்களை இழிவு செய்வது கேவலமென்றுணராத ஆண்களும் – இருவருமே இதற்குப் பொறுப்பாளர்கள் என்பதே என் கருத்து.

  13. ஆடுமாடு says:

    நல்லா இருக்கு.ஆனா,பழைய தீம். தொடர்ந்து எழுதுங்கள். நிறைய வாசியுங்கள். இதே கருத்தைக்கொண்டு கவிஞர் இளம்பிறை அருமையான கவிதை எழுதியிருக்கிறார். முடிந்தால் படியுங்கள்.

  14. லக்ஷ்மி says:

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆடுமாடு. நீங்கள் சொன்ன கவிதையை தேடிப்பிடிக்கப் பார்க்கிறேன். சுட்டியதற்கு நன்றி.

  15. வித்யா கலைவாணி says:

    //பெண்களின் துன்பத்துக்கு எல்லாம் ஒட்டு மொத்தமாய் பெண்கள் மீதோ அல்லது ஆண்கள் மீதோ பழி போடும் எண்ணம் நிச்சயமாய் எனக்கில்லை. இன்னொரு பெண்ணை இழிவு செய்கையில் அது மல்லாந்து படுத்து எச்சில் துப்பிக் கொள்வதைப் போன்ற முட்டாள்த் தனமென்கிற உணர்வில்லாத பெண்களும், தன்னைப் பெற்ற, தன்னோடு பிறந்த, தன்னை மணந்த, தனக்குப் பிறந்த சக மனிதர்களை இழிவு செய்வது கேவலமென்றுணராத ஆண்களும் – இருவருமே இதற்குப் பொறுப்பாளர்கள் என்பதே என் கருத்து.//ஆழமான உணர்வுள்ள கவிதைக்கு யதார்த்தமான உண்மையான பதில்

  16. லக்ஷ்மி says:

    நன்றி வித்யா.

  17. காரூரன் says:

    நல்ல கவிதை ‍‍,கவிதையின் கேள்விகள் எல்லாம் இன்னொரு பெண்ணின் பிரதி பலிப்பு.

  18. மங்களூர் சிவா says:

    1980களில் வந்திருக்க வேண்டிய கவிதை இது கொஞ்சம் காலம் தப்பி 2007ல் வந்திருப்பதாக படுகிறது.இருந்த போதும் சொல்ல வந்த கருத்து ‘வலிக்குது’

  19. .:: மை ஃபிரண்ட் ::. says:

    வாவ்.. சூப்பர். 🙂

  20. உதயதேவன் says:

    மண்னிலே வருமையும்மனதிலே பேராசையும்(வரதட்சனை)மறைந்தால் அன்றி இந்நிலை முற்றிலும் மாறாது………………………..கருப்பொருள் நல்லாயிருக்கு

  21. லக்ஷ்மி says:

    காரூரன், சிவா, மை ஃபிரண்ட், உதயதேவன் – அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  22. நொந்தகுமாரன் says:

    என்னாங்க நீங்க பதிவு போட்டு, 20 நாளாச்சுங்க!ஞாபகப்படுத்திட்டு போகலாம்னு வந்தேன்!

  23. லக்ஷ்மி says:

    ஆகா, வாங்க நொந்தகுமாரன். வலைச்சரம் தொடுத்துகிட்டிருந்தேன் போன வாரம். அதுக்கும் முன்னாடி ஊருக்குப் போயிருந்தேன். கொஞ்சம் அலுவலகத்திலும் நெருக்கடி. எல்லாப் பக்கமும் இழுத்துப் பிடிச்சதுல இங்க எட்டிப்பாக்கலை. இல்லாட்ட மட்டும் கிழிச்சிருப்பேனான்னா இல்லைதான். 🙂

  24. இறக்குவானை நிர்ஷன் says:

    உண்மையில நல்லாருக்கு லக்ஷ்மி. இன்னும் பெண்கள் பாதிக்கப்படும் பல்வேறு சந்தர்ப்பங்கள கவிதையா எழுதுங்க. வாழ்த்துக்கள். நான் இலங்கை தோழர்களுக்கும் சொல்கிறேன். மின்னஞ்சல் முகவரியை அனுப்புங்கள்.

  25. Arulappa says:

    hello, lakshmi!Very interesting kavithai.Thanks.

  26. லக்ஷ்மி says:

    நிர்ஷன், அருளப்பா – நன்றி.

  27. ரமணன்... says:

    நிதர்சன உண்மை 🙂

Leave a reply to ஜெஸிலா Cancel reply