ஒரு வருடம் ஒடிப் போச்….


ஆமாங்க, நானும் இந்த ப்லாகை ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆயிடுச்சு. பொதுவாகவே எனக்கு இந்த நவம்பர் மாதம் கொஞ்சம் ஆகாது – சென்டிமென்ட் எல்லாம் இல்லைங்க. ஒவ்வொரு வருடமும் ஏதாவது துரதிர்ஷ்டவசமான அல்லது இத்தோடு என் ஆட்டம் க்ளோஸ் என்று சுற்றியிருப்பவர்களை எண்ணவைக்குமளவிலான சம்பவங்கள் நடப்பது வாடிக்கை. ஒவ்வொரு வருடமும் இப்படியே நடந்து கொண்டிருந்தால் என்னாவது? நாம் பெற்றதை சமூகத்துக்கு திருப்பித் தருவது என்பதல்லவா உயர்ந்த மனிதப் பண்பு?? இப்படி ஒரு எண்ணம் மனசுக்குள்ள வந்தபோதுதான் இந்த முடிவு – வலைப்பதிவு துவங்குதல் என்ற முடிவை எடுத்தாக வேண்டிய காலக்கட்டாயம் உருவானது. 🙂

ரொம்ப பெருசா எதையும் எழுதிக் கிழிச்சுடலைதான். இருந்தாலும் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள் வட்டம் ஒன்னு கிடைச்சிருக்கு. கூடவே வரிகளுக்கு இடைல படிச்சு தனக்குத் தேவையான வார்த்தைகளை எங்கேர்ந்தாவது உருவி எடுத்து அதை நம்ம கருத்தா மாத்தும் மாயவித்தைக்காரர்கள் சிலரது அறிமுகமும் கிடைத்திருக்கிறது. அப்புறம் விவாதம்ன்ற பேர்ல வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் சிலரது நட்பு. இப்படி நிறைய வகைப்பட்ட மனிதர்களை இந்த வலையுலகம் அறிமுகம் செய்திருக்கிறது. பெரும்பாலும் மகிழ்ச்சியூட்டும் வகையிலான அறிமுகங்கள்தான். அதுனால இந்த வலைப்பதிவு வாழ்க்கை மகிழ்வையே தருகிறது. இன்னும் சில வருடங்களுக்காவது தொடர முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. பதிவுலக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் – குறை, நிறைகளைத் தொடர்ந்து அங்கங்கே சொல்லி ஆதரவு அளிக்கணும். பொதுப்படையா என்னோட எழுத்தில் எதுனா குறை இருக்கறதா நினைச்சா, இந்தப் பதிவோட பின்னூட்டத்துல சொல்லுங்க. முடிந்த அளவு திருத்திக்க முயற்சிக்கறேன்.

பி.கு: பார்க்கப் போனா முதல் பதிவு போட்டதென்னவோ நவ.4தான். ஆனா அன்னிக்கு ஞாயிறுன்றதால கொஞ்சம் முன்னாடியே கொண்டாடிலாம்னு இன்னிக்கே பதிவ பப்ளிஷ் பண்ணியாச்.

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

30 Responses to ஒரு வருடம் ஒடிப் போச்….

 1. பூனைக்குட்டி சொல்கிறார்:

  முதலில் வாழ்த்துக்கள்.ஒத்த எண்ணமுடைய நண்பர்கள் கிடைப்பது அரிது, உங்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள். வார்த்தைகளுக்கு இடையில் தேடுபவர்களைப் பற்றிய கவலைகளை அறவே ஒழித்துவிடுங்கள், முன்னேற்றத்துக்கான வழி அவர்களிடம் இருந்து கிடைத்துவிடமுடியாது.

 2. லக்ஷ்மி சொல்கிறார்:

  வாழ்த்துகளுக்கு நன்றி மோகன். வார்த்தைகளுக்கு இடையே தேடுபவர்களைப் பற்றி இரண்டு விஷயம் – ஒன்று அவர்களைப் பற்றி கவலையெதுவும் எனக்கில்லை. அடுத்தது, அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள சில விஷயங்கள் கிடைக்கின்றன என்றே நான் நம்புகிறேன் – அதாவது அடுத்தமுறை இன்னும் கவனமாக வார்த்தைகளைக் கோர்க்கத் தோன்றுகிறது. இவர்களிடம் ஒரே ஒரு பிரச்சனைதான் – நம் கருத்து என்று புதிதாக ஏதேனும் ஒன்றை நமக்கே அறிமுகம் செய்துவைத்து அதிர்ச்சியளிப்பதுதான். அதைத் தாண்டும் முன்னரே இவர்கள் அந்தப் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ‘நம்’ கருத்துக்கு சில எதிர்கருத்துகளைச் சொல்லி விவாதத்தைத் துவக்கி நம்மிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதுதான் கொடுமை… இதெல்லாம் அரசியலில் சகஜமப்பான்னு கவுண்டர் ஸ்டைலில் தாண்டிப் போக வேண்டியதுதான்… 🙂

 3. இ.கா.வள்ளி சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் 🙂அன்புடன்,வள்ளி

 4. லக்ஷ்மி சொல்கிறார்:

  நன்றி வள்ளி.

 5. பொற்கொடி சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்

 6. ramachandranusha(உஷா) சொல்கிறார்:

  லஷ்மி! இது என்ன இப்படி சொல்லிட்டீங்க? ஒத்த சிந்தனையுள்ளவங்க நட்பு எனக்கு கிடைச்சதே இல்லை. நட்பு வேறு, கருத்துக்கள் வேறு . இதில் நான் குழப்பிக் கொள்வதேயில்லை. சரிதானே தாசு 🙂

 7. லக்ஷ்மி சொல்கிறார்:

  வாழ்த்துகளுக்கு நன்றி பொற்கொடி.உஷா – எல்லா விஷயத்துலயும் என்னைப் போலவே சிந்தித்து ஒரே மாதிரியான கருத்தை வெளியிடறது பத்தி சொல்லலை உஷா. சில அடிப்படை சிந்தனைகள் ஒத்துப் போறதைப் பத்திதான் சொல்றேன். இப்ப ஒரு விஷயம் இருக்கு – பெண்ணியமோ இல்லை கடவுள் மறுப்புக் கொள்கையோ இல்லை வர்க்க பேதம் பத்தியோ, எதை எடுத்துகிட்டாலும் அதுல உங்களுக்கும் எனக்கும் வேறு வேறு கருத்துகளிருக்கலாம். நேரெதிர் கருத்தாக் கூட அது இருக்கலாம். ஆனா அதை வெளியிடும் போது எதிர் கருத்தை மட்டும் தாக்குறது(எதிர் கருத்தைச் சொன்னவங்களை அவங்க ஜாதியவோ இல்லை பாலியல் அடிப்படைய வச்சோ மட்டம் தட்டாம/அவைகளைப் பொறுத்து இதுனாலதான் நீ இப்படி பேசியிருக்கணும்னு முத்திரை குத்தாம), விவாதங்களின் போது முன் முடிவோட பேசாம திறந்த மனதோடு கருத்துகளை முன் வைப்பது (எதிர் தரப்பினர் சுட்டுவது உண்மைன்னு புரிஞ்ச உடனே மீசைல மண் ஒட்டலை கதையா வெத்து சால்ஜாப்பெல்லாம் சொல்லாம ஈகோ பாக்காம அதை ஒத்துக்கறது) இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு. அந்த வகைல ஒத்த சிந்தனைப்போக்குள்ள நண்பர்களைத்தான் நான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

 8. முத்துலெட்சுமி/muthuletchumi சொல்கிறார்:

  ஓ லக்ஷ்மி என்ன பொருத்தம் இப்பொருத்தம் நானும் நவம்பர் தான்..ஆரம்பிச்சேன்.. .. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.🙂

 9. லக்ஷ்மி சொல்கிறார்:

  வாழ்த்துக்களுக்கு நன்றி முத்து. அப்படியே உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்.

 10. PPattian : புபட்டியன் சொல்கிறார்:

  ஓராண்டு எழுத்துக்கும், அப்படியே அவள் விகடனின் இணையத்து இளவரசி பட்டத்துக்கும் வாழ்த்துக்கள்… அப்படி என்னதான் நடக்குது நவம்பர் மாதத்தில?

 11. Sridhar V சொல்கிறார்:

  உங்கள் எழுத்துக்களை நிறைய படித்திருக்கின்றேன். நிறைய சிந்தைனைகளில் ஒற்றுமையும் பார்த்திருக்கிறேன்.உங்களுடைய எழுத்து மிகவும் பண்பட்டதாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் பல!

 12. பினாத்தல் சுரேஷ் சொல்கிறார்:

  நல்லா இருங்க(இன்னொரு ஒத்த கருத்து 🙂

 13. லக்ஷ்மி சொல்கிறார்:

  ஸ்ரீதர் வெங்கட், சுரேஷ் – வாழ்த்துக்களுக்கு நன்றி.

 14. வாக்காளன் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் லக்ஷ்மி அவர்களே, தொடர்ந்து எழுதுங்கள்…. பதிவுக்கு பதிவு வந்து கருத்து போடுகிறேன்.. ( கருத்து வேறுபாடு இருந்தால் வெறும் கருத்து மோதல் மட்டுமே இருக்கும்…. தாக்குதல்கள் இல்லாமல்) This and That

 15. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  //இருந்தாலும் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள் வட்டம் ஒன்னு கிடைச்சிருக்கு.//எல்லா விதத்தில் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களா? போர் அடிக்கலை? சத்தியமா நான் இந்த கேட்டகரி இல்லை. //கூடவே வரிகளுக்கு இடைல படிச்சு தனக்குத் தேவையான வார்த்தைகளை எங்கேர்ந்தாவது உருவி எடுத்து அதை நம்ம கருத்தா மாத்தும் மாயவித்தைக்காரர்கள்//இதுவும் நான் இல்லைன்னு நினைக்கிறேன். //அப்புறம் விவாதம்ன்ற பேர்ல வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் சிலரது நட்பு.//நல்லவிதமா சொல்லறீங்களா? இல்லை திட்டறீங்களா? ஒண்ணும் புரியலை. //நட்பு வேறு, கருத்துக்கள் வேறு . இதில் நான் குழப்பிக் கொள்வதேயில்லை.//உஷாக்கா, ரிப்பீட்டேய். ஆனா சில ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தும் ஆத்மாக்களை கண்டால் மட்டும் விலகிடறது. லக்ஷ்மி, ஒராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் திட்ட, சாரி எழுத வாழ்த்துக்கள்! 😉

 16. பூனைக்குட்டி சொல்கிறார்:

  //நட்பு வேறு, கருத்துக்கள் வேறு . இதில் நான் குழப்பிக் கொள்வதேயில்லை. சரிதானே தாசு :-)//உஷாக்கா இதையெல்லாம் தாண்டியும் மனிதர்களிடம் நட்பு இருக்க முடியுமென்பது லக்ஷ்மிக்கு புரியாது 😉 என்ன சொல்ல புரிஞ்சிப்பாங்க அப்படிங்கிறதைத் தவிர.//உஷா – எல்லா விஷயத்துலயும் என்னைப் போலவே சிந்தித்து ஒரே மாதிரியான கருத்தை வெளியிடறது பத்தி சொல்லலை உஷா. சில அடிப்படை சிந்தனைகள் ஒத்துப் போறதைப் பத்திதான் சொல்றேன். இப்ப ஒரு விஷயம் இருக்கு – பெண்ணியமோ இல்லை கடவுள் மறுப்புக் கொள்கையோ இல்லை வர்க்க பேதம் பத்தியோ, எதை எடுத்துகிட்டாலும் அதுல உங்களுக்கும் எனக்கும் வேறு வேறு கருத்துகளிருக்கலாம். நேரெதிர் கருத்தாக் கூட அது இருக்கலாம். ஆனா அதை வெளியிடும் போது எதிர் கருத்தை மட்டும் தாக்குறது(எதிர் கருத்தைச் சொன்னவங்களை அவங்க ஜாதியவோ இல்லை பாலியல் அடிப்படைய வச்சோ மட்டம் தட்டாம/அவைகளைப் பொறுத்து இதுனாலதான் நீ இப்படி பேசியிருக்கணும்னு முத்திரை குத்தாம), விவாதங்களின் போது முன் முடிவோட பேசாம திறந்த மனதோடு கருத்துகளை முன் வைப்பது (எதிர் தரப்பினர் சுட்டுவது உண்மைன்னு புரிஞ்ச உடனே மீசைல மண் ஒட்டலை கதையா வெத்து சால்ஜாப்பெல்லாம் சொல்லாம ஈகோ பாக்காம அதை ஒத்துக்கறது) இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு. அந்த வகைல ஒத்த சிந்தனைப்போக்குள்ள நண்பர்களைத்தான் நான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.//

 17. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  //ஓ லக்ஷ்மி என்ன பொருத்தம் இப்பொருத்தம் நானும் நவம்பர் தான்..ஆரம்பிச்சேன்.. .. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.//ஓ லக்ஷ்மி, மு.லக்ஷ்மி, ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்!!

 18. கண்மணி/kanmani சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் லக்ஷ்மி!!!நான் அடுத்த மாதம்;)இணையம் [வலைபதிவு]நம் சொந்தக் கருத்துக்களின் தளம்.ஒத்துப் போவதும் மறுக்கப் படுவதும் இயல்பு.அதற்காக நாம் நிறுத்திவிடவாப் போகிறோம்?;)

 19. Boston Bala சொல்கிறார்:

  🙂

 20. வாக்காளன் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் லக்ஷ்மி அவர்களே.. !தொடர்ந்து எழுதுங்கள்… மாற்றுக்கருத்து இருந்தால், கருத்து மோதலாக மட்டுமே பின்னுட்டமிடுகிறேன்.

 21. லக்ஷ்மி சொல்கிறார்:

  பு.பட்டியன், இலவச கொத்தனார், கண்மணி, பாலா, திஸ் அன்ட் தட் – அனைவருக்கும் நன்றி.//மாற்றுக்கருத்து இருந்தால், கருத்து மோதலாக மட்டுமே பின்னுட்டமிடுகிறேன்.// திஸ் அன்ட் தட், இது இது இதைத்தாங்க நானும் எதிர்பார்க்கிறேன். கருத்து மோதலா மட்டும் இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா இங்க பல பேருக்கு ஆரோக்கியமான விவாதம்னா கிலோ என்ன விலைன்னு கேக்கற அளவுக்குதான் பரிச்சயம். அதுதான் என்னக்கு கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியிருக்கு. //அதற்காக நாம் நிறுத்திவிடவாப் போகிறோம்?;)// அதேதான் கண்மணி. //எல்லா விதத்தில் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களா? போர் அடிக்கலை? சத்தியமா நான் இந்த கேட்டகரி இல்லை. // இ.கொ, நிச்சயமா நான் என்னைய மாதிரியே யோசிக்கிற இல்லை நான் சொல்றதெல்லா சரின்னு சொல்றா மாதிரி யாரையும் சொல்லலை. சொல்லப் போனா அப்படி யாரையும் நான் சந்திச்சதேயில்லை இது வரை – எங்க அப்பாவைத் தவிர 😉 ஒத்த சிந்தனைன்ற வார்த்தைய எந்த அர்த்தத்துல பயன் படுத்தினேன்றதை உஷாவுக்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கேன். சிந்தனைப் போக்குன்னு சொல்லியிருந்தா இன்னும் கொஞ்சம் தெளிவா இருந்திருக்கும் போல. //உஷாக்கா இதையெல்லாம் தாண்டியும் மனிதர்களிடம் நட்பு இருக்க முடியுமென்பது லக்ஷ்மிக்கு புரியாது 😉 என்ன சொல்ல புரிஞ்சிப்பாங்க அப்படிங்கிறதைத் தவிர.// இப்படி தான் ஏதோ சிகரத்துல உக்காந்திருக்கறதா நினைச்சுகிட்டு ஒரு சாமியார் மனோநிலைல அடுத்தவங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணி தன் ஈகோவைத் தானே சொறிஞ்சு கொடுத்துக்கற உங்களை மாதிரி ஆளுங்களோட கூட நான் கருத்து மோதல்களைத் தாண்டியும் நட்போட இருக்கறதாத்தான் நினைச்சுகிட்டிருக்கேன். அதுனால இதுல புதுசா புரிஞ்சுக்க எனக்கு எதுவும் இல்லை. வேணும்னா நான் உஷாவுக்கு கொடுத்திருக்கற விளக்கத்தை ஒரு முறை படிச்சுப் பாருங்க – எதுனா புரியுதான்னு….நான் இதுல எனக்கு இணையம் மூலமா கிடைச்ச சில தொடர்புகளை – அவங்களோட குணாதிசயங்களையும் அது எனக்கு ஏற்படுத்தற மகிழ்ச்சி அல்லது சலிப்பை பத்திதான் சொல்லியிருக்கேன். ஆனா எந்த இடத்துலயும் நான் பயந்துட்டேன் இல்லை என் கருத்துகளை வெளியிடாம இருக்கப் போறேங்கற அர்த்தத்திலேயோ ஒரு வார்த்தையும் நான் சொல்லலை. அவ்வளவு பயந்தாங்கொள்ளியும் நான் இல்லை. ஆனா ஒரு சிலர் என்னவோ நான் அழுதுகிட்டிருக்காப்போல கற்பனை பண்ணிகிட்டு ஆறுதல் வேற சொல்லிகிட்டிருக்கறதை பார்க்கறப்ப சிரிப்புதான் வருது. போவுது, அவுங்களுக்கு அந்தக் கற்பனைல சந்தோஷம்னா, ஐயோ பாவம் அதுலயாவது சந்தோஷிச்சுட்டுப் போகட்டும்.

 22. வவ்வால் சொல்கிறார்:

  ஒரு வருஷம் ஓடிப்போச்சுனு சொல்றிங்களே தனியா ஓடிப்போச்சா, இல்லை துணைக்கு யாரையாவது இஸ்துகிணு ஓடிப்போச்சானு விசாரிச்சிங்களா :-))வலைப்பதிவிற்கு வந்து ஒரு வருஷம் ஆனதிற்கெல்லாம் நான் வாழ்த்து சொல்ல மாட்டேன், 100 வருஷம் ஆனதும் சொல்லுங்க வாழ்த்த வருகிறேன்!//அப்புறம் விவாதம்ன்ற பேர்ல வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் சிலரது நட்பு.//தலைகீழாக தொங்குவதால் என்னை சொல்லி இருக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்! :-))

 23. அய்யனார் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சீனியர் 🙂வலையின் பிற பெண் பதிவர்களை விட பரபரப்பான ஒரு அடையாளத்தை நீங்கள் தக்கவைத்துக் கொள்வதற்கு அடிப்படை காரணம் உங்களுக்கென்றே தனித்துவமாக அமைந்திருக்கும் நண்பர்கள் மட்டும்தான் என்பது என் அவதானம்.எனவே உங்களுக்கான அடையாளம் உங்கள் வாசிப்பு,சிந்தனை, வெளிப்படுத்துதல்,பொங்கிஎழுதல் இவைகளை காட்டிலும் பிரத்யேக நண்பர்களே என்பதை இங்கே சுட்ட விரும்புகிறேன் 🙂ஒரு வருடம் ஓடிப்போச்சுன்னு எழுதுனாலும் பரபரப்பாயிடுதே 😦ஒருவேளை டிஆர்பி ரேட்டிங்க் உள்குத்து ஏதாவது இருக்கா 😀

 24. லக்ஷ்மி சொல்கிறார்:

  வவ்வால், //வலைப்பதிவிற்கு வந்து ஒரு வருஷம் ஆனதிற்கெல்லாம் நான் வாழ்த்து சொல்ல மாட்டேன், 100 வருஷம் ஆனதும் சொல்லுங்க வாழ்த்த வருகிறேன்!// எனக்கு இவ்ளோ பெரிய தண்டனையத் தரணும்னா உங்களுக்கு அப்படியென்ன என் மேல விரோதம் வவ்வால்? 100 வருஷம் உயிரோடிருக்கறதே பெரிய தண்டனை, அதுல அவ்ளோ நாளும் வலையுலகத்துல குப்பை கொட்டணும்ன்றது… அய்யோ…… நினைக்கவே பயம்மா இருக்கு… ப்ளீஸ் இவ்ளோ பெரிய சாபமெல்லாம் வேணாம்பா…அய்யனார், வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி.//ஒருவேளை டிஆர்பி ரேட்டிங்க் உள்குத்து ஏதாவது இருக்கா :D// எனக்குத் தெரிஞ்சு அப்படியெதுவும் இல்லை. நான் இப்படி ஒரு பதிவு போட்டது ,அந்தந்தப் பதிவுல சம்பந்தப்பட்ட கருத்துகளை ஆதரிச்சோ எதிர்த்தோ பேசுவாங்க. ஆனா பொதுப் படையா எதுனா அப்சர்வேஷன் இருந்தா அதைச் எல்லாரும் சொல்றதுக்கு ஒரு இடம் வேணுமில்லையா, அதுக்காகத்தான் போட்டேன். நம்புங்க சாமி….

 25. ஜே கே | J K சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் மேம்…

 26. பத்மா அர்விந்த் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் லஷ்மி. உங்களின் படித்ததில் பிடித்தவை பற்றிய பதிவுகள் எனக்கு பிடித்தவை. பின்னூட்டங்களில் விவாதம் செய்யும் உங்களின் பொறுமை என்னை அதிசயிக்க வைக்கிறது.

 27. லக்ஷ்மி சொல்கிறார்:

  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஜே.கே.வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்கும் நன்றி பத்மா.

 28. ♠ யெஸ்.பாலபாரதி ♠ சொல்கிறார்:

  ஒரு வருசம் ஆகிடுச்சா.. பரவாயில்லை. அதற்குள்லாகவே நீங்க பரவலாக அறியப்பட்டு விட்டீர்கள். வாழ்த்துக்கள்!

 29. லக்ஷ்மி சொல்கிறார்:

  யெஸ்.பா, ரொம்ப நன்றி – வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம்பாங்களே,அப்படியிருக்கு. 🙂

 30. செல்வநாயகி சொல்கிறார்:

  மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும். தொடர்ந்து எழுதுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s