சென்னை பதிவர்களே, உதவி தேவை


சென்னை வாழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி – பார்வை இழந்தவர். ஒரு கல்லூரியில் ஆங்கிலப் ஆசிரியையாகப் பணிபுரிவதோடு முனைவர் பட்டத்துக்கும் ஆய்வு செய்து வருகிறார். அவருக்கு உதவியாளராகப் பணிபுரிய ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு பெண் தேவை. இதுவரை அவரிடம் பணிபுரிந்து வந்த பெண் அஞ்சல் வழிக்கல்வியில் பயின்றுகொண்டு இவரோடே தங்கி இவருக்கு உதவிக் கொண்டிருந்தார். அவரது படிப்பும் முடிந்து அவருக்கு திருமணமும் நிச்சயமாகி விட்டது. எனவே இவருக்கு உதவிக்கு வேறு ஒருவரைத் தேடித் தருமாறு அவரது சகோதரி சமீபத்தில் என்னிடம் சொல்லியிருந்தார். நான் தெரிந்தவர்கள் மூலம் மட்டுமே தேடிக்கொண்டிருந்தேன், இப்போதுதான் திடீரென ஒரு யோசனை உதித்தது – பதிவர்களின் உதவியை நாடலாமே என்று.

பொருத்தமான ஆட்கள் யாரையும் தெரியுமேயானால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். தோழியின் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளச் சொல்கிறேன். வேலை இரு பகுதிகளாக இருக்கும். காலையில் இவருடன் கல்லூரிக்குச் சென்று ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு அழைத்துச் செல்வது போன்ற செயல்களுக்கும், கையெழுத்திடுவது போன்ற சிறு செயல்களுக்கு உதவ வேண்டும்(தோழி கார் வைத்திருக்கிறார் என்பதால் கல்லூரிக்குச் சென்று வருவதில் சிரமம் ஒன்றும் இருக்காது). மதியம் வீட்டிற்கு வந்த பின் அவரது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கட்டுரை சம்பந்தமான உதவிகள்(படித்துக் காட்டல் அல்லது அவர் சொல்பவற்றை எழுதி ஒழுங்கு செய்து தருதல்) இவையே மொத்தமாகச் செய்ய வேண்டிய வேலைகள். வேலை செய்ய ஆர்வமுள்ள நபரது தொடர்பு எண், எதிர்பார்க்கும் சம்பளம் போன்ற விவரங்களையோ இல்லை தொடர்புக்கான முகவரி மட்டுமோ கூட அளித்தால் போதும். அவர்களையே நேரடியாகப் கலந்து பேசிக் கொள்ளச் செய்யலாம். வரப்போகும் உதவிகளுக்கு அட்வான்ஸ் நன்றிகள். 🙂

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

9 Responses to சென்னை பதிவர்களே, உதவி தேவை

 1. Aruna சொல்கிறார்:

  Srivats என்பவர் இப்பிடி பார்வை இழந்தவர்களுக்கு உதவிக் கொண்டு இருக்கிறார்.அவரைத் தொடர்பு கொண்டுள்ளேன் …கண்டிப்பாக உதவி கிடைக்கும் என்றும் நம்புகிறேன்….விபரம் தெரிந்தவுடன் தெரிவிப்பேன்.அன்புடன் அருணா

 2. அமுதா கிருஷ்ணா சொல்கிறார்:

  pls, tell about college and location… am in tambaram..

 3. லக்ஷ்மி சொல்கிறார்:

  அருணா, அம்மு கிருஷ்ணா – உங்கள் இருவரது ஆர்வத்துக்கு நன்றி. நான் இடையில் ஊருக்கு செல்ல வேண்டியிருந்ததால் சரியான படி உங்கள் இருவருக்கும் reply செய்ய முடியாது போனது. மன்னிக்கவும். தோழி வேலை செய்வது குவீன் மேரீஸ் கல்லூரியில், வசிப்பது கோபாலபுரத்தில். இப்போது ஒரு பெண் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதி முடித்தவர் அவருக்கு உதவ முன்வந்திருப்பதாக இன்று காலை தொடர்பு கொள்கையில் சொன்னார்கள். அப்பெண் தொடர்ந்து corres-ல் தான் பட்டப் படிப்பு சேர்வதாக இருப்பதால் அப்பென்ணையே தொடர்ந்தும் உதவச் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளதாக அவரது சகோதரி சொன்னார். இப்போதைக்கு நம்முடைய உதவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையைச் சொல்லி ஆர்வத்தோடு உதவ முன்வந்த உங்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவிக்கச் சொன்னார்கள். என் சார்பிலும் உங்களிருவருக்கும் மறுபடியும் நன்றி.

 4. N Suresh சொல்கிறார்:

  அன்புள்ள Ms. லக்ஷ்மி அவர்களுக்கு,உதவுகின்ற உங்கள் உள்ளத்தை போற்றுகிறேன்.தோழமையுடன் – என் சுரேஷ்

 5. லக்ஷ்மி சொல்கிறார்:

  சுரேஷ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நட்சத்திர வாரம் சிறக்க வாழ்த்துகள்.

 6. ♠ யெஸ்.பாலபாரதி ♠ சொல்கிறார்:

  முடிந்தால் தங்களின் தொலைபேசி எண்ணைத் தாருங்கள்.தோழன்பாலபாரதி9940203132

 7. Deepak Vasudevan சொல்கிறார்:

  சிவானந்த குருகுலம் நிறுவனருக்கு நிறைய பேர் தெரியும். குருகுலத்தின் ஒரு பிரிவு படித்த மற்றும் நிராதரவாக உள்ள பெண்களுக்கு ஆதரவு தந்து வருகிறது. இந்த வேலைவாய்ப்பு மூலம் ஒருவரது வாழ்க்கை மேம்படும் என்பதால், இவரையும் தொடர்பு கொண்டு பார்ப்போம்.

 8. Nanda Nachimuthu சொல்கிறார்:

  good effort lakshmi and all…my sincere wishes.

 9. நொந்தகுமாரன் சொல்கிறார்:

  என்னங்க லட்சுமி!ஆளையேக் காணோம். வேலையில பிஸியாக இருக்கிறீர்களா?நீங்கெல்லாம் இல்லாம, பதிவுலகத்தில் ஜல்லி, கும்மி பதிவுகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.விரைவில் வாங்க!நாலு மாசமா நானும் பிஸி. இப்பொழுது தான் மீண்டும், எழுத ஆரம்பித்துள்ளேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s