சாருவும், சங்கீத வாசனையும்….


சாருவோட இந்த கட்டுரைக்கு வரிக்கு வரி பதில் சொல்லணும்னு நான் யோசிக்கலை. ஏன்னா யுவன் சந்திரசேகருக்கும், ஷாஜிக்கும் நடக்கற சண்டை என்ன, அதுல எந்த இடத்துல சாரு சம்பந்தப் பட்டிருக்கார் இது மாதிரியான இலக்கிய குழாயடிச் சண்டை விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா இதுல போற போக்குல சில கருத்துக்களை அங்கங்க தூவிட்டுப் போயிருக்கார் – அந்த சில உளறல்களுக்கு மட்டும் பதில் சொல்லலாமேன்னுதான் இந்த பதிவு.

ஆரம்பிக்கும் போதே நான் அவர் வீட்டுக்குப் போயிருந்தப்ப சொன்னதைப் பத்தியெல்லாம் எப்படி எழுதப் போச்சு என்றுதான் குதிக்க ஆரம்பிக்கிறார். அத்தோடு இது யுவனின் தனிப்பட்ட குணமில்லை – இலக்கியம் படைக்க திருவல்லிக்கேணிப் பக்கத்திலிருந்து வரும் அம்பிகள், அவர்களின் அத்திம்பேர்கள், ஷட்டகர்கள் எல்லோருக்கும் இப்படியான குணாம்சமே இருக்கும் என்றும் ஆருடம் சொல்கிறார்.

//இவர்களுடைய வேலையே என்னவென்றால், எழுத்தை விட்டு விட்டு, அவன் என் ஆத்துக்கு வந்தான், வந்தபோது இன்னின்ன அனாச்சார காரியங்களையெல்லாம் பண்ணினான்; இதிலிருந்தே தெரியவில்லையா இவனுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று? என்று எழுதுவதுதான்.// இப்படித்தான் அவர்களின் ஸ்டேட்மென்ட் இருக்குமென்று ஒரு டெம்ப்ளேட் கூட போட்டுக் காண்பிக்கிறார். ஆனால் இவர் எழுதியிருக்கும் கட்டுரையிலேயே அதே டெம்ப்ளேட்டில் இவரும் ஒரு ஸ்டேட்மென்ட் விடுகிறார்.

// ஏனென்றால், ஒருமுறை என்னிடம் நேர்ப்பேச்சில் யுவன் குறிப்பிட்டது, அவர் சென்னையில் மது அருந்த மாட்டார்; அருந்தினால் அதைப் பார்த்துப் பையன் கெட்டுப் போய் விடுவான். எனவே வெளியூர் போனால்தான் அருந்துவது. என்ன ஒரு விளிம்பு நிலைச் சிந்தனை!// தன்னிடம் நேர்பேச்சில் அவர் சொன்னதை, அதும் அவருடைய தனிப்பட்ட வாழ்கை சார்ந்த ஒரு விஷயத்தைப் பற்றிச் சொன்னதை எடுத்துப் போட்டு, அதற்கு ஒரு கமென்ட் வேறு. இவர் எப்போது திருவல்லிக்கேணி அம்பியானார்? ஏதோ ஒரு விதத்தில் இவரும் ஒரு அய்யங்காராத்து மாப்பிள்ளையாகி விட்டாரே, அந்த சகவாச தோஷத்தில் இந்த டெம்ப்ளேட்ட் ஒட்டிக் கொண்டுவிட்டதோ என்னவோ, பாவம்.

//நான் கர்னாடக சங்கீதத்தையும் ரசிப்பேன் என்றாலும், என்னுடைய விருப்பம் அப்போது லத்தீன் இசையாகவே இருந்தது. // இப்படிச் சொல்வதால் இவர் எதோ கர்நாடக இசையையும் விருப்பு வெறுப்பில்லாமல் ரசிப்பவர் என்றும், ஆனாலும் லத்தீன் அமெரிக்க இசை மேல் கொஞ்சம் அதிக ஆர்வம் போலும் என்றெல்லாம் நினைத்து விட்டீர்கள் தானே? கர்நாடக சங்கீதம் என்றில்லை இந்த பிரபஞ்சத்தில் கேட்கக் கிடைக்கும் எந்த வகை சங்கீதத்துக்கும், தாளம் என்ற ஒன்று அவசியம் என்பதை எப்பேர்ப்பட்ட ஞானசூனியத்தாலும் உணர முடியும். வெறும் சத்தம் என்பதிலிருந்து ஒரு ஒலிவடிவம் இசை என்று மாறுகிறதென்றாலே அதில் ஒரு ஒழுங்கு வருவதின் மூலம்தான். அந்த ஒழுங்கை கொண்டு வருவது தாளமும், ஸ்ருதியும்தான். கர்நாடக இசை என்றில்லை ஒரு ஆதிவாசி குழுவின் பாடல் வகைக்கும் கூட ஒரு வகை தாளக்கட்டும், மெட்டில் இனிமையும் அவசியம்தான். அப்படியிருக்க எனக்கு கர்நாடக இசையை ரசிக்கவும் தெரியுமாக்கும் என்று சொல்லிக் கொள்ளும் இவர் தாளம் என்கிற அத்யாவசிய, அடிப்படை வஸ்துவைப் பற்றி உதிர்க்கும் முத்துக்கள் இவை – //கர்னாடக சங்கீதக் கச்சேரிகளில் பார்வையாளர்கள் எல்லோரும் தத்தம் தொடைகளை பலமாகத் தட்டிக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் அரங்கத்தில் நான் மட்டும் தட்டாமல் இருந்ததால் எல்லோரும் என்னையே பார்ப்பது போல் இருந்தது. ஓ, சபை நாகரீகத்தை (எடிகெட்) மீறுகிறோமோ என்று பயந்து நானும் என் தொடையை பலமாகத் தட்ட ஆரம்பித்தேன். இப்போது அவர்கள் என்னை முறைப்பாகவும், அருவருப்போடும் பார்த்தார்கள். பிறகுதான் தெரிந்தது, அவர்கள் தட்டாத நேரத்தில் நான் தட்டினேன் என்பது. அதிலிருந்து கர்னாடக சங்கீதத்தை வீட்டிலிருந்தபடியே கேட்க ஆரம்பித்தேன்.//

நமக்குத் தெரிந்த ஒரு இசை விஷயத்தில் இவர் ஞானம் இவ்வளவாயிருக்க, நமக்குத் தெரியாத மொராக்கோ இசை, லத்தீன் அமெரிக்க இசை பற்றியெல்லாம் இவர் பக்கம் பக்கமாக எழுதுவதை பார்க்கையில் எனக்கு ஒரு சினிமா காமெடிதான் நினைவுக்கு வருகிறது. விவேக்கா, வடிவேலுவா நினைவில்லை. அவரிடம் உங்களுக்கு இந்தி தெரியுமா என்று ஒருவர் கேட்பார். உனக்குத் தெரியுமா என்று பதிலுக்கு அவரை திருப்பிக் கேட்பார் காமெடியன். அவர் தெரியாது என்றவுடன் அப்படின்னா எனக்கு இந்தி தெரியும் என்று சொல்வார். இதே போல்தான் சாருவும் மொராக்கோ இசையை ரசிக்கக் கிளம்பியிருக்கிறார் போலிருக்கிறது – இருக்கவே இருக்கிறார் நம்ம கூகிளாண்டவர். கேட்டதும் கொடுப்பவனே கூகிள் கண்ணா என்று ஒரு புது பாடல் ரேகே, ரய், ராப் இசை வடிவங்களையெல்லாம் கலந்து கட்டிய இசை வடிவமொன்றில் உருவாக்கிவிட வேண்டியதுதான். :))

அடுத்த உளறல் இது – //கர்னாடக இசையை ஆஸ்திரேலியா அல்லது சீலேயில் இருக்கும் ஒருவரால் ரசிக்க முடியாது. ஆனால், மொராக்கோவின் மேற்குறிப்பிட்ட இசை வகைகளை உலகின் எந்த மூலையில் இருப்பவராலும் ரசிக்க முடியும்.// அது ஏன் அப்படி? எந்த விளக்கமும், காரணமும் சொல்லப் படமாட்டாது. சாருவுக்குப் புரியாத சங்கீதத்தை சீலேயிலும் ஆஸ்த்ரேலியாவிலும் எப்படிக் கேட்பார்கள்? மாட்டவே மாட்டார்கள், ஒருக்காலும் மாட்டார்கள். அவர்களுக்கு கர்நாடக சங்கீதம் புரியாதது போல எனக்கு ரேகே, ரய், ராப் போன்ற சமாச்சாரங்களில் ஒன்று புரியாமலோ இல்லை பிடிக்காமலோ போய் விட்டால் அவ்வளவுதான் – போச்- போயே போச்… உனக்கும் இசைக்கும் ஸ்நானப் ப்ராப்தியும் கிடையாது என்று சொல்லி சாருநிவேதிதானந்தா ஸ்வாமிகள் மண்டையிலடித்து நம்மை துரத்தி விடுவாராக்கும்… தெரிந்து கொள்ளுங்கள். இ ஸபா ஸ்வாமிகள் ரய் பாடலொன்றில் பாடியதும்தான் நம்ம துர்க்கா, க்ருஷ்ணருக்கெல்லாம் சுக்ர தசை அடித்திருக்காக்கும். அதுனால போனா போவுதுன்னு அவங்களைப் பத்தி எதுனா கொஞ்சம் பெருமையா நாமளும் பேசிக்கலாமாம். எல்லாம் ஸ்ரீ ஸ்ரீ சாருநிவேதிதானந்தாவோட அருளுரைதாங்க. இதுக்கெல்லாம் காரணம் கேட்டீங்கன்னா உங்களுக்கு அறிவே இல்லைன்னு அர்த்தம். என்னமோ போங்க… இவரு தொல்லைதான் தாங்கலைன்னா இவரோட ஜால்ராங்களோட சத்தம் காது ஜவ்வே கிழிஞ்சுரும் போலயில்ல இருக்கு… நேரக் கொடுமைதான் எல்லாம்… 😦

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in சங்கீத விமர்சனம், சாரு, ஜால்ரா தொல்லை. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s