வட கலை Vs தென் கலை


சமீபத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு தமிழ் இணையதளத்தை நான் படித்துக் கொண்டிருக்கையில் என்னிடம் ஏதோ கேட்பதற்காக என் இடத்தை நெருங்கிய அலுவலகத் தோழி ஒரு அதிர்ச்சியுடன் கூவினாள்தமிழா?!?!?!?! உனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா?”

எப்படி பதில் சொல்வது என்றே எனக்குப் புரியவில்லை. ஒரு வினாடி திகைத்து பின் சொன்னேன்ஆமா, எனக்கு தமிழ் தாய் மொழி, அதுல எழுதப் படிக்கத் தெரியாம இருக்க முடியுமா?”

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே, இதுக்கு முன்னாடி நான் பெங்களூரிலும், ஹைதராபாத்திலும் இருந்திருக்கிறேன். அங்கு சந்தித்தவர்களில் 90% கன்னட, தெலுங்குக்காரர்களுக்கு அவர்களின் தாய் மொழியில் எழுதவோ படிக்கவோ தெரியாது.”

சரி, உன் தாய் மொழி ஹிந்திதானே, அதில் உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?”

, தெரியுமே. ஆனா…” ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் நிறுத்திக் கொண்டாள்.

எனக்குத் தெரிந்து இந்தப் பெண் மட்டுமல்ல, நிறைய வடநாட்டினரிடம் நான் இந்த எண்ணப் போக்கை கவனித்துள்ளேன்.

அதெப்படி ஹிந்தி தெரிஞ்சுக்காம இருக்கீங்க?”

நெட்டுல போய் தமிழ்ல எதுக்கு எழுதவோ படிக்கவோ செய்யறீங்க?”

-இது மாதிரியான கேள்விகளை எழுப்பும் இவர்கள் அனைவருமே சென்னையில் வேலை செய்பவர்கள். அநேகமாய் இன்னும் ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கேனும் இங்கேயே இருக்கும் எண்ணம் கொண்டவர்களே.

ஹைதராபாத்திலோ அல்லது பெங்களூருவிலோ செய்வது போல் ஹிந்தியை மட்டுமே துணையாகக் கொண்டு இங்கே அன்றாட வாழ்கையை ஓட்ட முடிவதில்லை என்பதில் இவர்களுக்கு ஏற்படும் எரிச்சல் அபரிமிதமானது. அலுவலகத்துக்குள் இந்த எரிச்சலை இவர்களால் காட்ட அதிகம் முடிவதில்லை.

அதுவும் கூட சில சமயங்களில் வெடிக்கத்தான் செய்கிறது. இங்கே அலுவலகத்தில் புல்வெளியில் சில சமயங்களில் மாலையில் திரை கட்டி ப்ரொஜெக்டர் வைத்து திரைப்படங்கள் போடுவார்கள். பெரும்பாலும் ஆங்கிலப் படம், சில சமயம் இந்தி என்றிருக்கும். அதில் எப்போதாவது தமிழ்ப் படம் எட்டிப் பார்த்தால் போதும், இங்கே அலுவலக ஃபோரம்கள் போர்க்களமாகிவிடும்.

எங்களுக்குப் புரியாத படம் ஏன் போடணும்?

ஏன், நாங்க எங்களுக்குப் புரியாத ஹிந்திப் படத்தை உங்களுக்காக சகிச்சுக்கலையா?

ஹிந்தி நம்ம தேசிய மொழி, அது தெரிஞ்சுக்காம இருக்கறது உங்க தப்பு. ஆனா நாங்க எதுக்காக ரீஜனல் லாங்குவேஜ் எல்லாம் தெரிஞ்சுக்கணும்?

யாரு சொன்னா ஹிந்தி மட்டும்தான் நம்ம தேசிய மொழின்னு என்று ஆரம்பித்து அரசியல் சாசன புள்ளி விவரமெல்லாம் கொடுத்து தொண்டை வரள சத்தம் போட்டு பார்த்தாலும்மக்கள் கொஞ்சம் கூட அசராமல், ஹிந்தி கத்துக்காம இருக்கறவங்க எல்லாம் காட்டுமிராண்டிகள் என்கிற ரீதியில்தான் தொடர்ந்து பேசுவார்கள்.

நான் புதிதாக ஒரு இடத்துக்குப் என் தேவைக்காகவோ இல்லை பணி நிமித்தமோ போகிறேன் என்றால் தகவல் தொடர்புக்காக அங்குள்ள மொழியையோ இல்லை ஆங்கிலத்தையோ கற்றுக் கொண்டு உபயோகப் படுத்த வேண்டியது நான் தானே தவிர நான் போகுமிடமெல்லாம் என் மொழி பேசப்படவில்லையே என்று அங்கலாய்ப்பதில் என்ன அர்த்தமிருக்க முடியும்?

இந்த ரீதியிலான பொருமல்கள் அலுவலகத்தில் நாகரீகம் கருதி மேம்போக்காக முடிந்து விடுகிறது. ஆனால் இத்தகைய நாகரீகப் பூச்சுகள் எல்லாம் தேவையே இல்லாதிருக்கும் மாணவ சமூகத்தில் இது ஹாக்கி மட்டை தாக்குதல்களாகப் போய் முடிகிறது.

சமீப காலங்களில் கல்லூரி விடுதிகளில் நடக்கும் இந்த வட X தென் இந்திய மாணவர்களின் மோதலில் அப்போதைக்கு ஒவ்வொரு காரணம் சொல்லப் படலாம்விடுதியில் சாம்பார் சண்டை என்று துவங்கி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் இந்தஅதெப்பெடி ஹிந்தி கத்துக்காம இருக்கீங்கஎன்ற எரிச்சல்தான் இது போன்ற எல்லா தகராறுகளுக்கும் காரணமாக அமைகிறது என்பதே என் எண்ணம்.

எந்த மொழியையும் கற்றுக் கொள்ள மறுக்க வேண்டுமென்பதில்லைதான். ஆனால் அது அகங்காரமாகவோ, ஆணையாகவோ வரும் போது கண்டிப்பாய் இதை மறுக்க வேண்டும் என்கிற எண்ணத்தை சுயமரியாதை உள்ள யாருக்கும் ஏற்படுத்தி விடுகிறது.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது தாக்ரேக்களின் அராஜகத்திற்கு கூட, சராசரி மக்களிடம் ஆதரவு கிடைப்பதன் காரணம் இதே போன்ற எரிச்சல்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அவர்களின் பிராந்தியவாதத்தை விமர்சிக்கும் முன்பு இந்த ஆதிக்க மனோபாவத்தையும் களைவது குறித்து தேசியவாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.b

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அலுவலகம், இலக்கியம், சமூகம், மொழி and tagged , , , , , , . Bookmark the permalink.

14 Responses to வட கலை Vs தென் கலை

 1. joamalanrayenfernando says:

  சபாஷ்.

  நேர்மையான நியாயமான ஆதங்கங்கள்.

  இன்றைய நிலை என்றால், 60 ஆண்டுகள் ஓடியும் கூட இந்தி இந்தியா முழுக்க மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை – தமிழ்நாட்டில் மட்டுமல்ல.

  இதன் காரணம் நீங்கள் எடுத்துக்காட்டிய, அவர்களின் – எங்கள் மொழியை நீங்கள் படித்தே ஆக வேண்டும்; அஃது உங்கள் தலைவிதி’ என்ற ஆதிக்க எண்ணம்தான்.

  பீகாரிகள் எங்கு சென்றாலும் அம்மொழியைக் கற்பதில்லை. மயிலாப்பூர் இரயில்வே முன்பதிவு நிலைய்த்தில் பீகாரி கிளார்க்குக்கும் ஒரு தமிழ்ப்பெண்மணிக்கும் நடந்த பிரச்ச்னை இப்போது வழக்காகி நிலுவையில் உள்ளது. அவன் தமிழில் முன்பதிவு பாரத்தை நிரப்பித்தந்தால் நிராகரிப்பேன் என்றானாம்.

  பம்பாயில் பீகாரிகள் தனிராச்சியமே நட்த்துகிறார்கள். இதுவே அவர்களைக்குறிவைத்துத் தாக்குவதற்கு காரணம் அங்கே…

 2. jarfernando says:

  இந்த தலைப்பு தேவையா?

 3. selva says:

  A good observation. The superiority complex is very obvious in north Indian people’s behaviors everywhere.

 4. வந்து கருத்துச் சொன்னவங்களுக்கு நன்றி.

  யோசிச்சுப் பார்த்தால் தலைப்பு எனக்கே பொருத்தமா தோணலைதான். ஆனா, பின்னவீனத்துவ முறைல இந்த தலைப்ப கூட ஜஸ்டிஃபை பண்ண முடியும் தெரியுமோ? 😉

  வடகலை சம்பிரதாயத்துல இருக்கும் வட மொழி மோகமும் தென்கலையாரின் தமிழ் இன்னும் சொல்லப்போனா பிரபந்தப் பற்றும்தான் இந்த தலைப்புக்கு காரணம்னு கூட சப்பை கட்டு கட்டலாம்னாலும் நாங்கல்லாம் ஹமாம் மட்டுமே உபயோகிப்பவர்கள்ன்றதால தலைப்பு ராண்டம் செலக்‌ஷன்ற உண்மைய ஒப்புக் கொண்டு மாப்பு கேட்டுக்கறேன். ஹிஹிஹி….

 5. Karthik says:

  Nothing wrong in her view. Hindi is one of our official language. this is the main reason why tamils are not liked by many

 6. Surendran says:

  //எந்த மொழியையும் கற்றுக் கொள்ள மறுக்க வேண்டுமென்பதில்லைதான். ஆனால் அது அகங்காரமாகவோ, ஆணையாகவோ வரும் போது கண்டிப்பாய் இதை மறுக்க வேண்டும் என்கிற எண்ணத்தை சுயமரியாதை உள்ள யாருக்கும் ஏற்படுத்தி விடுகிறது. //

  நல்ல கருத்து. நன்றாக அனுபவப்பட்டு எழுதியிருக்கிறீகள். நன்றி.

 7. PPattian says:

  மிகச் சரியான கருத்து. சரியான முறையில் சொல்லியிருக்கிறீர்கள்.. வடக்கத்தி படித்த மக்களுக்கு கொஞ்சம் இந்த காண்டு இருப்பது உண்மைதான்..

  தலைப்பு சரியே.. இல்லைன்னா நான் இங்கே இப்போது பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்க மாட்டேன்.. 🙂

 8. Varadharajan says:

  இந்த language பற்றி எழுத தான் வேண்டுமா? கழுதை அது எத்தனை வருஷம் ஆனாலும் தீரபோவது இல்லை.

 9. LVISS says:

  WE CONFUSE OFFICIAL LANGUAGE WITH NATIONAL LANGUAGE .

 10. Pingback: மைசூர் போண்டா-வை சென்னையில் விற்கலாமா? « மலர்வனம்

 11. Robin says:

  //எந்த மொழியையும் கற்றுக் கொள்ள மறுக்கவேண்டுமென்பதில்லைதான். ஆனால் அது அகங்காரமாகவோ,ஆணையாகவோ வரும் போது கண்டிப்பாய் இதை மறுக்க வேண்டும்என்கிற எண்ணத்தை சுயமரியாதை உள்ள யாருக்கும் ஏற்படுத்திவிடுகிறது.// உண்மை.

 12. suresh says:

  எனக்கு தெரிந்து மொழி ரீதியாக அதிகம் பாதிக்கபடுவது தமிழர்கள் தான். தமிழ் நாட்டிலே கூட தன் தாய்மொழி குறித்து பெருமையோ, குறைந்தபட்சம் தாய்மொழி உணர்வோ கூட நம்மவர்களுக்கு இருப்பதில்லை. அதேபோல் பிராந்திய ரீதியாக அதிகம் பாதிக்கபடுவது
  பீகாரிகள். காரணம் ஒவ்வொரு மாநிலத்திலும் அண்டிப்பிழைக்க வேண்டிய நிலைமையில் அவர்கள் இருப்பதால்.

 13. barari says:

  IPPADI ORU AANAI 1965L POTTATHANAAL THAN HINDI ETHIRPPU PORATTAM VEDITHTHATHU.UNGAL KARUTHTHU MIKAVUM SARI.VAZTHUKAL.

 14. //எந்த மொழியையும் கற்றுக் கொள்ள மறுக்க வேண்டுமென்பதில்லைதான். ஆனால் அது அகங்காரமாகவோ, ஆணையாகவோ வரும் போது கண்டிப்பாய் இதை மறுக்க வேண்டும் என்கிற எண்ணத்தை சுயமரியாதை உள்ள யாருக்கும் ஏற்படுத்தி விடுகிறது.//
  உண்மை.. இது மொழிக்கு மட்டுமல்ல… எல்லாவற்றிற்கும் பொருந்தும்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s