ஆமாங்க, ஒரு வாரமா நினைப்பு இப்படித்தான் ஒடுது. கல்யாணம் கட்டாம சேர்ந்து வாழறது பத்தி நம்ம சட்டத்துக்கு ஒரு அபிப்ராயமுமே இல்லையாம், அதுனால அப்படி வாழும் உரிமைய தப்புன்னு சொல்ல முடியாதுன்னு உச்ச நீதிமன்றம் குஷ்பு அக்கா வழக்குல நச்சுனு சொல்லியிருக்கு. இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு மட்டும் ரெண்டு வருஷம் முன்னாடியே வந்திருந்தா… இது பற்றி முன்னமே தெரிஞ்சு இருந்தா… ஹ்ம்ம்… கண் கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோஜனம்.
ஜோக்ஸ் அபார்ட், இந்த தீர்ப்பு ஒரு முக்கியமான, தெளிவான தீர்ப்புன்றதுல எந்த சந்தேகமும் இல்ல. செல்ஃப் அப்பாயின்ட்டட் கலாச்சார காவலர்கள் – ஸ்ரீராம் சேனாவோ, திருமாவோ இல்ல மருத்துவர் அய்யாவோ – அது யாராயிருந்தாலும் சரி, இனி எங்க கலாச்சாரமே போச்சுன்னு பிஞ்ச துடைப்பம்/அழுகின தக்காளி/மஞ்சாக் கயிறு (அவங்கூர் பாஷைல மங்கல் சூத்ரா) போன்ற ஆயுதங்களோட பொங்கி எழுந்தால் அது சட்ட விரோதம்னு தெளிவு படுத்தியிருக்கிற உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேவையான, தெளிவான தீர்ப்புகளை தங்களையுமறியாமல் சில சமயங்களில் தந்துவிடுவார்கள் போலிருக்கு.
இது போல சட்டத்துக்கு என்னென்னெ விஷயங்களில் அபிப்ராயம் இருக்கு, எதெதில் இல்லைன்னு நமக்கு ஒரு பட்டியல் போட்டு கொடுத்தால் புண்ணியமாப் போகும். உண்மையிலேயே இது போன்ற அடிப்படை சட்ட விஷயங்களை தெரிஞ்சுக்கறது மூலமா ஒரு குடிமகனுடைய கடமைகள் என்ன, உரிமைகள் என்ன அப்படின்ற தெளிவும், ஒரு பிரச்சனைன்னா அதை எதிர் கொள்ள வேண்டிய வகைகள் பத்தியும் தெளிவா தெரியும். இன்னமும் கூட தகவல் அறியும் உரிமை பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அதை எத்தனை பேர் உபயோகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்?
ஒரு விஜய் படத்தில் வருவது போல இது மாதிரியான அடிப்படை சட்ட விஷயங்களில் தெளிவு படுத்துவதை ஒரு இயக்கமாகவே செய்தல் நல்லது. சமீபத்தில் பனகல் பூங்கா பக்கம், ஒரு விளம்பரம் பார்த்தேன் – “தனியார் வங்கிகளின் தனி நபர் கடன் மற்றும் கடன் அட்டைகளால் பாதிக்கப் பட்டோர் சங்கம்” என்று ஒரு சங்கத்தின் விளம்பரத்தை வாகனத்தில் செல்கையில் கடந்து சென்றேன்.
அதே போல ஒரு புத்தகத்தில் வங்கிகளில் இருந்து கல்விக் கடன் பெறுவதற்கான உதவிகளைச் செய்ய ஒரு இயக்கம் இருப்பதாகவும் படித்தேன். இது போன்ற அமைப்புகள் பரவலாக விளம்பரப் படுத்தப் பட வேண்டும். ஒரு பிரச்சனை வருகையில் எங்கே யாரை அணுகுவது என்ற விவரங்கள் பெரும்பாலான படித்தவர்களுக்கே இல்லை என்பதுதான் இன்றைய நிதர்சனம். எனவே ஆர்வத்துடன் இத்தகைய சமூக நலப் பணிகளைச் செய்வோர் பற்றிய விவரங்களை நம்மால் இயன்ற வரையில் பிரபலப் படுத்த முயற்சிக்க வேண்டும்.
—
அடுத்தது ஒரு இலக்கிய விவகாரம். பயங்கர ஜெமோ வெறுப்பாளர்கள் கூட ஒத்துக் கொள்ளும் விஷயம் அவரது புனைவுகள் அபரிமிதமான ஈர்ப்பு கொண்டவை என்பது. நித்தியானந்தாவின் முன்னாள் பி.ஆர்.ஓ வின் மூன்றாவது வாரிசான கென் முதல் (அ.உ.த.எ அப்படின்னெல்லாம் போட்டால் கென் சண்டைக்கு வரார், என்னாங்க ஜிலு ஜிலுன்னு ஒரு புகழ் இருக்கறப்ப எங்க குருவ ஏன் கேவலப் படுத்தறீங்கன்னு) சகலமான இலக்கியவாதிகளும் புகழோ புகழ்னு புகழ்ந்து தள்ளியதில் ஆர்வமாகி ஜெ.மோ வின் வலைதளத்தில் இரவு கதைய ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ரொம்ப அருமையாத்தான் இருந்தது. ஆனா…….
அப்புறம்தான் கவனிச்சேன், புகழ்ந்த பெரும்பாலானோர் இதே “ஆனா” அப்படின்றதை உபயோகிச்சிருக்காங்கன்றதை. 🙂
நம்மூரில் 98 சதவீதப் பெண்களுக்கு பொதுவா 57 வயசுல மெனோபாஸ் தாண்டியிருக்கும். ஆனா ஜெமோவின் இரவுல 57 வயசு அம்மா ஒரு 49 வயசு சாமியாரோட கள்ளத் தொடர்பு வச்சுக்கறாங்க. அதும் எப்படி – வீட்டுலேர்ந்து டாக்ஸி புடிச்சு ஒரு இடத்துக்கு வந்து, அங்க இறங்கி ஒரு தோணி புடிச்சு காயல கடந்து, ஒரு தென்னந்தோப்புக்கு போயி சாமியாருக்கு பணிவிடை செய்யறாங்களாம் அந்த அம்மா… ஸ்ஸ்ஸப்பா…. தாங்க முடியல….. எவ்ளோ வயசானாலும் ஒரு பொம்பள அழகா இருந்தா, கொஞ்சம் புத்திசாலியா இருந்தா, தெளிவான ஆளுமை இருந்தா அவ சோரம் போகத்தான் செய்வான்னு திருவாய் மலர்ந்தருளியிருக்கார் ஜெமோ. இது ஒன்னும் புதுசில்லை. அய்யாவோட குரு பரம்பரை/ஞான மரபுல பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே இதைத்தான் மனுன்றவர் சொல்லியிருக்கார். அவர் அப்படியே தேவ பாஷைல சொல்லிட்டாரில்லையா, அது யாருக்கும் புரியலைன்னா அதை அழகா மொழிபெயர்த்து எல்லார்கிட்டயும் கொண்டு சேர்க்க வேண்டியாது உள்ளொளி தரிசனம் பெற்ற, ஆன்மீகச் சிந்தனைச் செம்மலான எழுத்தாள சிகாமணியின் கடமையத்தான் செஞ்சிருக்கார். நடக்கட்டும், நடக்கட்டும்…
அப்புறம் இணையதளங்களில் தீவிரமா வாதம் பண்றவங்கல்லாம் மன நோய் உள்ளவங்களாம். மேலும், முதலாளித்துவத்தின் நோக்கமே கிறிஸ்துவ மதத்துக்கு ஆன்ம அறுவடை செஞ்சு கொடுக்கறதுதானாம். லிஸ்ட் போட்டா நீண்டுகிட்டே போகுதுங்க. இது மாதிரி விஷயங்களைப் பத்தி பேசப் போக, கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பர் ஒருத்தங்க, வரிகளுக்கிடையில் படிப்பது நல்ல வாசிப்ப்பில்லைன்னு சொன்னது நினைவுக்கு வருது. அப்பாவியா இருக்கறது எவ்ளோ சுகமான விஷயம் – ஹ்ம்ம்ம்ம்….. அப்படியே இருந்திருக்கலாம். என்னமோ போங்க.
—
🙂
இப்ப ஆரம்பிச்சிருக்கற சங்கத்தைப் பத்தித் தெரிஞ்சுக்க தகவல் அறியும் சட்டம் உதவுமா?
நல்ல செய்தி 🙂
இரவு: நான் மெனோபஸ் பத்தி யோசிக்கல ஆனா நம்ம ஊர பொருத்த வரை 57 வயசுன்னா அம்மா / ஆயான்னு பெண்ணோட வடிவம் மாறிடுது. ஜெ ஆயாக்களையும் சோரம் போக வைக்கிறதுதான் தாங்கிக்க முடியல கொஞ்ச நாளைக்கு முன்ன அனல் காற்றுன்னு ஒண்ண எழுதினார். படிக்கலன்னா படிச்சி ஜென்ம சாபல்யம் அடைங்க 🙂
லட்சுமி, உங்க புகழ்ச்சிக்கு நன்றி,
ஜெமோவோட புனைவு படிக்கிறதே அவரோட அரசியல் என்னன்னு தெரிஞ்சிக்கதான்,
சிறுதெய்வ வழிபாடுகளைப்பற்றி உளறது, ஆயாக்களோ குடுகுடு கிழவிகளோ சோரம் போறது
நல்லாத்தான் எழுதுறார் பாவம் இடையில மனு வோடு தேவ பாசையை எல்லாம் நீச மொழில சொல்றப்போ ஷ் ஷ் அப்பா விடுங்க 🙂
நித்தியானந்தாவின் முன்னாள் பி.ஆர்.ஓ வின் மூன்றாவது வாரிசான கென் முதல் (அ.உ.த.எ அப்படின்னெல்லாம் போட்டால் கென் சண்டைக்கு வரார், என்னாங்க ஜிலு ஜிலுன்னு ஒரு புகழ் இருக்கறப்ப எங்க குருவ ஏன் கேவலப் படுத்தறீங்கன்னு)
சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு பிடிஎப் அனுப்பினது ஒரு குத்தமா நல்லாயிருங்க 🙂
அங்க என்னான்னா தலை மொக்கை போடலாம் வாங்க கடுப்பாயிருக்குன்னு சொல்றாரு!!! இங்க என்னான்னா தீர்ப்பு ரெண்டு மூணு வருஷம் முன்னாடியே வந்திருக்கலாம்னு சொல்றீங்க!!! என்னமோ!!!
அய்யனார் சொன்ன மாதிரி 57 வயசையெல்லாம் ஆயான்னுதான் பெரும்பாலும் சொல்லுவாங்க!!!
உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் நம்மாளுங்க போராடுறதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குன்னு நினைக்கிறீங்க!!! இல்லை அதை மீறி நம்மாளுங்க துடைப்பத்தையெல்லாம் கொண்டு வந்து போராடுனா நம்ம அரசு கட்டுபடுத்தும்னு நினைக்கிறீங்களா? அரசைப் பொறுத்த வரை விஷய்ம் நல்லது கெட்டது, சரி தவறு என்பது எல்லாம் இல்லை, போராட்டம் நடத்தும் கட்சி அப்ப கூட்டணில இருக்கு இல்லைங்கிறதைப் பொறுத்தே அதைக் கட்டுப்படுத்துறதும், இல்லாததும்!!!
//நம்மூரில் 98 சதவீதப் பெண்களுக்கு பொதுவா 57 வயசுல மெனோபாஸ் தாண்டியிருக்கும். ஆனா ஜெமோவின் இரவுல 57 வயசு அம்மா ஒரு 49 வயசு சாமியாரோட கள்ளத் தொடர்பு வச்சுக்கறாங்க. //
அது சரி
மாதவிடாய் நிற்றலுக்கும் (http://ta.wiktionary.org/wiki/menopause) உடலுறவிற்கும் என்ன சம்மந்தம்