உதிரிப்பூக்கள் 15.06.2010


பாலாவுடன் டூ வீலரில் பயணித்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு முன்னால் சென்ற பேருந்தின் பின் பக்கத்தில் Appollo Hospitals-ம் times of india-வும் இணைந்து நடத்தும் பில்லியன் ஹார்ட்ஸ் பீட்டிங் எனும் இயக்கத்தின் பிரச்சார வாசகம் ஒன்று இடம் பெற்றிருந்தது.

I pledge to quietly eat all the veggies my wife puts in my plate

நான் அதைக் காண்பித்து பாலாவிடம் சொன்னேன் “பாருப்பா, நீ சாப்பிடறப்ப பண்ற அழிச்சாட்டியத்த பக்கத்துல இருந்து பாத்தா மாதிரி யாரோ ஒரு மகானுபாவன் உனக்காகவே எழுதியிருக்கான் பாரு.”

உடனே பாலா சொன்னார் “ஒ, அப்ப எல்லா வீட்டுலயும் பொண்டாட்டிங்க காய்கறிய சாப்பிடுன்னு கொடும படுத்தறதும், புருஷனுங்க தாங்க முடியாம எதிர் குரல் கொடுக்கறதும் உலக இயற்கை போலிருக்கு”

அவங்கவங்களுக்கு அவங்கவங்க பார்வை. :)))

http://www.billionheartsbeating.com/

இதுதான் இணையதள முகவரி. நிறைய உபயோகமான டிப்ஸ் கொடுத்திருக்காங்க. அதுல போய் நீங்களும் உறுதி மொழி எடுத்துக்கலாம். இது பற்றி உங்க நண்பர்களுக்கும் பகிர்ந்துக்கலாம். இந்த உறுதி மொழிகளை உங்க ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் ஸ்டேட்டஸ் மெசேஜாக வைத்துக் கொண்டும் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
—-

காந்தி சமாதியில் அஞ்சலி..

இந்த படத்தை பார்த்தபோது தோன்றியது சாத்தான் வேதம் ஓதுவதுன்றது இதுதானா?

—-

கொஞ்சம் கனிவமுதன் அப்டேட்ஸ்:

கனிவமுதன் தவழ ஆரம்பிச்சாச்சு. எங்களுக்கு வேலையும் அதிகரிச்சாச்சு. முன்,பின் வாசல் படிகளில் மரச்சட்டத்தினாலான சின்ன கதவு பொருத்த வேண்டிய அவசியம். வழக்கம் போல ஒரு மாசம் முன்னாடிலேர்ந்தே பாலாவுக்கு நினைவூட்ட ஆரம்பிச்சாச்சு. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளயாவது ஆளை கூட்டிட்டு வந்து பண்ணிடுவார்னு நம்பறேன்.

முன்னல்லாம் எந்த பொருள் கைல கிடைச்சாலும் அதை கடிச்சு பாக்க முயற்சிப்பார் கனிவமுதன். பல்லு முளைக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகள் உள்ளூர நடந்து கொண்டிருந்த நேரம் அதுன்னு நினைக்கறேன். டீத்தர் தவிர மத்த எல்லாத்தையும் கடிக்கறதே தொழிலா இருந்தார். இப்ப ஒரு முன்னேற்றம். ரெண்டு பொருள் கிடைச்சால் அதை தட்டி என்ன சத்தம் வருதுன்னு பாக்கறார்.( வடிவேலுவின் இசை எங்கிருந்து வருது-காமெடி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை) ஒரே ஒரு பொருள்தான் கிடைச்சுதுன்னா அதை தரையில் தட்டி என்ன சத்தம் வருதுன்னு பார்ப்பார். அந்த ஒரு பொருள் எங்க செல்போனிலிருந்து ஆரம்பிச்சு என்னவாவும் இருக்கும். 🙂

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், குழந்தை வளர்ப்பு, சமூகம் and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to உதிரிப்பூக்கள் 15.06.2010

  1. //அந்த ஒரு பொருள் எங்க செல்போனிலிருந்து ஆரம்பிச்சு என்னவாவும் இருக்கும்//

    தல, ஏன் மொட்டை அடிச்சாருன்னு லைட்டா புரியுது… :)))

  2. இசை எங்கருந்து வருது.. கரெக்ட் எனக்கும் அதான் தோணுது.. ;))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s