ராவணனும் மணிரத்னமும்..


ராவணன் படம் பார்த்து வந்தோம். கண்ணுக்கு குளிர்வான லொகேஷன்கள், அதைத் தெளிவாக அள்ளி வரும் காமிரா நுணுக்கங்கள் தவிர்த்து படத்தில் நல்ல விஷயங்கள் எதுவுமே இல்லை. ஐஸ், விக்ரம் ஆகியோரது நடிப்பும் கூட பயனற்றுப் போயிருக்கிறது.

ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து அடுத்து ஒரு படைப்பைத் தரும் சுதந்திரம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. அதிலும் ராமாயண, மகாபாரதக் கதைகளின் காப்பிரைட் என்று எதுவுமில்லை. யாருக்கும் அதை எடுத்து அப்படியே திருப்பிச் சொல்லவோ, தன் கைச்சரக்கை சேர்த்துப் படைக்கவோ உரிமை இருக்கிறதுதான். ஆனால் இறுதிப் படைப்பின் நேர்த்திதான் கலைஞன் எடுத்துக் கொள்ளும் இந்த உரிமைக்கான நியாயமாக இருக்க முடியும். ராவணனின் தரம் துளியும் மணிரத்னத்தின் செய்கையை நியாயப் படுத்தவில்லை.

அதே கதையை அப்படியே எடுக்கிறேன் பேர்வழி என்று ஜடாயுவுக்கு பதில் ஒரு கழுகு வந்து படகில் உட்கார்வதில் தொடங்கி ஐஸ்வர்யாவை கண்டு திரும்பும் கார்த்திக் ‘பார்த்துட்டேன்’ என்று ‘கண்டேன் சீதையை’க்கு இணையாக கத்திக் கொண்டே வருவது வரை சகலத்திலும் ஐடியாவை கடன் வாங்கி படத்தை எடுத்துவிட்டு, அது வரையில் எடுத்ததைபோட்டு பார்த்திருப்பார் போலும், ‘சம்பூர்ண ராமாயணம் பார்ட் 2’ என்று யாரேனும் சொல்லி விட்டால் என்ன செய்வது என்று பயம் வந்திருக்க வேண்டும். அந்த களங்கத்திலிருந்து தப்பிக்க கதையில் அதற்கு பிறகு ஒரு அந்தர் பல்டி.

சீதையான ஐஸிற்கு ராவணன் மேல் சபலம் – “நான் இங்கேயே இருந்துட்டா அவரை விட்டுடுவீங்களா?” அப்படின்னு ஒரு ரெண்டுங்கெட்டான் தனமான கேள்வி கேக்கறாங்க.

அதே போல் ராமனுக்கு ராவணன் உயிர் பிச்சை தந்து “உன் பொண்டாட்டிக்காகவே உன்னை கொல்லலாம், அதே பொண்டாட்டிக்காவே கொல்லாமலும் விடலாம்… சரி, உன்னை விட்டுடறேன். என் மனசு மாறரதுக்குள்ள அவங்களை அழைச்சுகிட்டு போயிரு” என்று “இன்று போய் நாளை வா” ரேஞ்சுக்கு சொல்லி விட்டுடறார் பாவம்.

சரி, இந்த ரெண்டு பல்டிகளோட விட்டுட்டால் கூட படம் சுமாரா இருந்திருக்கும். அடுத்து ராமனின் சந்தேகத்தை வச்சு க்ளைமேக்சுக்கு ஒரு ட்விஸ்ட். ஐயோஒ……ஒ தாங்கலைடா சாமி…

ஏற்கனவே படம் வெளியாவதற்கு முன்னாலிருந்து விமர்சனங்கள் வலையுலகில் வர ஆரம்பித்தாயிற்று. போகிற போக்கை பார்த்தால் பட விவாதத்தை முடித்து ஷூட்டிங் போவதற்குள்ளேயே மக்கள் விமர்சனம் டைப் செய்து ட்ராஃப்டில் போட்டு வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. வாழ்க சைபர் வெளி… 🙂

அப்புறம் இன்னொரு விஷயம். படத்திற்கு முன்னால் விமர்சனம் எழுதிய எல்லோருமே ரோஜா- சாவித்ரி சத்யவான், தளபதி – மகாபாரதம்(கர்ணன்), இராவணன் – இராமாயணம் வரைக்கும் சரியாக லிங்க் போட்டுவிட்டார்கள்.

அவரோட மௌனராகமும் ஒரு தழுவல்தான். அதுவும் இதே மாதிரி இஞ்ச் பை இஞ்ச் காப்பி. மூலம் எதுன்னு கண்டுபிடிச்சு பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு பரிசு எதுவும் கிடையாது. ஆனாலும் கேள்வின்னு கேட்டுட்டால் பதில் சொல்லாமயா விட்டுடப் போறீங்க? :))


பின் குறிப்பு:-

‘கோகிலா என்ன செய்துவிட்டாள்’ என்ற ஜெயகாந்தனின் நாவலில் இருந்து தான் மௌனராகம் காப்பி அடிக்கப்பட்டிருக்கிறது.

நாவலின் பல இடங்கள் அப்படியே எடுக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சின்னதாய் மாற்றங்கள்.

கடைசில ட்ரெயினில் ஏறுவது, ஏறியபின் பிரிவுக்கு காரணமான பேப்பரை(படத்தில் டைவோர்ஸ் பேப்பர், நாவலில் மனைவி கணவனுக்கு எழுதிய பிரிவு கடிதம்) கிழித்து சுக்கு நூறாக்குவது வரை சகலமும் காப்பி.

டிவியில் இப்படத்தின் காட்சிகள் ஒளிபரப்பாகும் போது நானும் பாலாவும் பேசிப் பேசியே ஆறுதலடைந்துகொள்வோம். 🙂

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், சினிமா, விமர்சனம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to ராவணனும் மணிரத்னமும்..

  1. //அவரோட மௌனராகமும் ஒரு தழுவல்தான். அதுவும் இதே மாதிரி இஞ்ச் பை இஞ்ச் காப்பி. //

    ??

  2. புருனோ says:

    இருவர் யார் (யார்) கதை என்ற எளிய கேள்வி கேட்டிருந்தால் உடனடியாக விடையளித்திருக்கலாம்

    அக்னி நட்சத்திரம் கூட ஒருவரின் கதைதான்.

    மௌன ராகம் ….. ம்ம்ம்ம் …

  3. அபிஅப்பா says:

    கரெக்ட்! மௌனராகம் படத்தின் கதை டி.ராஜேந்தருடையது. என்ன ஒன்னு அவர் இன்னும் அதை மனசில் தான் வச்சிருக்காரு. கதையா ஏழுதலை. எடுக்கலை:-)))

    மத்தபடி ஒரு சந்தேகம். சின்ன படவாவை எங்க விட்டுட்டு போனீங்க படத்துக்கு?

  4. நாந்தான் பேபி சிட்டர்ன்னு சொன்னா நம்பவா போறீங்க அபிஅப்பா?

  5. தெரியலையே லக்ஷ்மி. அவ்வளவு படிப்பறிவு போதாது.
    ரியல் லைஃப்ல கேள்விப் படுவோம். கதை யாரு எழுதி இருக்கிறார்கள்னு தெரியவில்லை.

  6. ம்ம் பார்க்கலாமா வேண்டாமா….

  7. enjoyed reading this post!

    / தளபதி – மகாபாரதம்(கர்ணன்), இராவணன் – இராமாயணம் வரைக்கும் சரியாக லிங்க் போட்டுவிட்டார்கள். / பதிவுகளில் வாசித்த பிறகுதான் இதை அறிந்துக்கொண்டேன்.

  8. லக்ஸ், ராவணன் படம் ராமாயண தழுவல் இல்லவேயில்லை. நான் உறுதியாய் கூறிகிறேன்.
    படம் சம்பூர்ண ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஐசின் லோ கட் மேலாடையைப்
    பார்த்தால், ஷீபான் சாரியை ஒற்றை போட்டுக் கொண்டு காட்சியளித்த அன்றைய சீதை பத்மினி நினைவுக்கு வருகிறார். ராஜாஜி சொன்னதாய் சொல்வார்கள்- (சரியான வ்சனம் நினைவில்லை- பெருசுகள் உதவவும்)சீதை கையில் ரிஸ்ட் வாட்ச்சும், ஹேண்ட் பேக் மட்டும் பாக்கி என்றாராம்.

    ஹூ ஹூம் புதிருக்கு விடை தெரியலையே 😦

  9. மௌனராகம் – அம்பா பீஷ்மர்னு சொல்லவரீங்களா? நிறைய உதைக்குதே 🙂

  10. ராவணன் தமிழன் என்ற பெரும் உண்மையை முன்நிறுத்தும் என எதிர்ப்பார்த்தேன்.

    விக்ரமின் வசனங்கள் மூலம் அதை தெளிவு படுத்தி சொல்லிவி்ட்டார் மணி@.

    கம்பீரமாக வலம் வரும் ராவணனைப் பார்த்து சீதைக்கு மயக்கம் வந்ததில் வியப்பு என்ன இருக்கிறது.

    – ஜெகதீஸ்வரன்
    http://sagotharan.wordpress.com

  11. ராஜாஜி சொன்னதாய் சொல்வார்கள்- (சரியான வ்சனம் நினைவில்லை- பெருசுகள் உதவவும்)சீதை கையில் ரிஸ்ட் வாட்ச்சும், ஹேண்ட் பேக் மட்டும் பாக்கி என்றாராம்.//
    ஹா ஹா. என்ன பொருத்தமான வரிகள்.

  12. சரி, பதிவு எழுதி 48 மணி நேரமாகியும், இதுவரை யாரிடமிருந்து விடை வராததால் நானே சொல்லி விடுகிறேன்.

    — 🙂 —-

    ‘கோகிலா என்ன செய்துவிட்டாள்’ என்ற ஜெயகாந்தனின் நாவலில் இருந்து தான் மௌனராகம் காப்பி அடிக்கப்பட்டிருக்கிறது.

    நாவலின் பல இடங்கள் அப்படியே எடுக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சின்னதாய் மாற்றங்கள்.

    கடைசில ட்ரெயினில் ஏறுவது, ஏறியபின் பிரிவுக்கு காரணமான பேப்பரை(படத்தில் டைவோர்ஸ் பேப்பர், நாவலில் மனைவி கணவனுக்கு எழுதிய பிரிவு கடிதம்) கிழித்து சுக்கு நூறாக்குவது வரை சகலமும் காப்பி.

    டிவியில் இப்படத்தின் காட்சிகள் ஒளிபரப்பாகும் போது நானும் பாலாவும் பேசிப் பேசியே ஆறுதலடைந்துகொள்வோம். 🙂

    —-

    இதை பின்குறிப்பாக பதிவிலும் இணைத்து விடுகிறேன்.

    கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி! 🙂

  13. //மௌனராகம் – அம்பா பீஷ்மர்னு சொல்லவரீங்களா? நிறைய உதைக்குதே//

    சூப்பரு

    அப்ப அந்த ஏழு நாட்கள் 🙂 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s