உதிரிப் பூக்கள் – 10-07-10


இருதரப்பு பெரியவர்களில் யார் ஊரிலிருந்து வந்தாலும் எங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டி மாலை ஆறிலிருந்து பத்து வரை கண்ணீர் மழை பொழிவது வழக்கம். வேறு வழியின்மையால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா நெடுந்தொடர்களையும் மாதமொரு முறையேனும் இரண்டு மூன்று நாட்களுக்கு பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவது எங்கள் வழக்கம். இந்த தொடர்கள் அனைத்துமே எப்போது பார்த்தாலும் புரியக் கூடிய கதை உடையவை என்பதால் ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை.

அப்படித்தான் போன வாரம் வெள்ளிக்கிழமை ரம்யா கிருஷ்ணனின் நடிப்பிலும் தயாரிப்பிலும் ஒளிபரப்பாகும் தங்கம் தொடரை பார்க்க நேர்ந்தது. இத்தொடரில் மஞ்சு பார்கவி, சீமா, அனுராதா என்ற மூன்று பழம்’பெரும்’ நடிகைகள் முறையே ரம்யா கிருஷ்ணனின் அம்மா, பெரியம்மா மற்றும் அத்தையாக  நடிக்கிறார்கள். பொருத்தமான தேர்வுதான். ஏனெனில் இவர்களைக் காட்டிலும் சற்றே இளை(த்த)யவர்கள் அந்த பாத்திரங்களில் நடித்தால் கூட ரம்யாதான் அவர்களுக்கு அம்மாவாகவோ அத்தையாகவோ தெரியும் அபாயம் உண்டில்லையா? :))

அன்று மஞ்சு பார்கவி தனது இன்னொரு மகளாக நடிக்கும் பெண்ணை அடித்துக் கொண்டிருந்தார். விஜயகுமார் வந்து என்ன விஷயம் என்று விசாரிக்கையில் “இவ கொலுசை தொலைச்சுட்டாங்க. வெள்ளிக்கிழமையும் அதுவுமா ஒரு பொண்ணு எத வேணும்னா தொலைக்கலாம். ஆனா வெள்ளி நகைய தொலைக்கவே கூடாதுங்க”  என்று அழுது புலம்பினார்.

இப்படி ஏதும் சம்பிரதாயம் நானறிந்தவரை இல்லை. வீட்டுப் பெரியவர்களைக் கேட்டதில் அவர்களுக்கும் இப்படி எதுவும் ஞாபகம் இல்லை. ஆனால் பெரியவர்களிடம் கேட்டதே தவறோ என்று எண்ணும் வகையில் அவர்கள் எல்லோருமே “டிவில எல்லாம் பொய்யா சொல்லுவாங்க? ஒரு வேளை நமக்குத் தெரியாதா இருக்கும். இனிமே வெள்ளிக்கிழமைல வெள்ளிய தொலைக்காம ஜாக்கிரதையா இருந்துக்கோ.” என்று எனக்கு அறவுரை சொல்லத் தொடங்கி விட்டனர். :((

இப்படியே போனால் வெள்ளிக் கிழமைல வெள்ளிய தொலைக்க கூடாது, செவ்வாய்க் கிழமைல செருப்பை தொலைக்க கூடாது, வியாழக் கிழமைல விளக்குமாத்தை தொலைக்க கூடாது என இன்னும் எத்தனை எத்தனை புதுப் புது கண்டுபிடிப்புகள் வெளிவரப் போகுதோ தெரியலை. ஜோசியக்காரர்கள் இதுக்கெல்லாம் என்னென்ன பரிகாரங்கள் கண்டுபிடிச்சு வெளில விடப்போறாங்களோ தெரியலை… :(((

****************

மடிப்பாக்கத்திலிருந்து வேளச்சேரி போகும் வழியில் கைவேலியில் ‘ஸ்ரீ ஐய்யனார் பவன்’ என்று ஒரு இனிப்பகம். அந்த இடத்தை தாண்டிச் செல்லும் போது இந்தப் பெயரைப் படிக்க வாய்க்கும் போதெல்லாம் எனக்கு ஜெயமோகனின் மாடன் மோட்சம் கதை நினைவுக்கு வரும் – கூடவே ஒரு புன்னகையும். நல்ல கதை. பெரும்பாலானவர்கள் ஏற்கனவே வாசித்திருக்கலாம்.

********

இளையராஜாவை நாலு பட்டி மன்ற பேச்சாளர்கள் சேர்ந்து ஜலதோஷம் பிடிக்க வச்சதுக்கே இவ்ளோ பொங்கினவர்…. இப்ப விண்ணதிர ஜால்ராக்கள் காது கிழிச்ச செம்மொழி மாநாட்டைப் பத்தி இவ்ளோ மென்மையா சொல்லியிருக்கார்னா என்னத்தை சொல்றது போங்க. :)))

*******

கனிவமுதனுக்கு நிக்க ஆசை வந்தாச்சு. கொஞ்சம் உயரமா எதை பாத்தாலும் பிடிச்சுகிட்டு நின்னு, அதையும் தள்ளி தானும் விழுந்துன்னு ஒரே கோலாகலம். அவனை விட்டுட்டு வேறு எதுனா வேலைய கவனிக்கப் போனா எந்த நிமிஷமும் சைரன் மாதிரி அவனோட அழுகை கேக்கலாம்ன்ற நிலமை. ஏற்கனவே தவழ ஆரம்பிச்சதுக்கே வீட்டுல இருக்கற எல்லா கபோர்டிலும் முதல் அடுக்கை சுத்தமாக்கிட்டோம். இப்ப அடுத்த அடுக்கின் விரைவில் வந்துரும் போல.

********

கொஞ்ச நாளா ஒரு கொலைவெறியோட சிறுகதைகள் பக்கம் என்னோட ஆர்வத்தை திருப்பி இருக்கேன். நல்லாருக்குன்னு சொல்ல முடியாட்டாலும் கூட சகிச்சுக்கறா மாதிரி இருக்கறதா பாலா சொல்றாரு. விரைவில் இங்க போடப் போறேன். எல்லாரும் அவங்கவங்க குலசாமிய நல்லா கும்பிட்டுக்கோங்க. :)))))

******

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in இலக்கியம், உதிரிப்பூக்கள், எண்ணம், குழந்தை வளர்ப்பு, சமூகம் and tagged , . Bookmark the permalink.

13 Responses to உதிரிப் பூக்கள் – 10-07-10

 1. //எல்லாரும் அவங்கவங்க குலசாமிய நல்லா கும்பிட்டுக்கோங்க//

  ப்ச். விதி வலியது.. 😦

  முதல் சிறுகதை என்னிக்கு ரிலீஸ்?

 2. //சென்ஷி

  //எல்லாரும் அவங்கவங்க குலசாமிய நல்லா கும்பிட்டுக்கோங்க//

  விதி வலியது.//

  சாமியை கும்பிட்டுக்கிடவேண்டியதுதான்!

  பா.க.ச சங்கத்து ஆளுங்களை அட்டாக் பண்றதுக்கு புதுசா திட்டம் தீட்டியிருங்காங்கடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

 3. அபிஅப்பா says:

  \\ஏற்கனவே தவழ ஆரம்பிச்சதுக்கே வீட்டுல இருக்கற எல்லா கபோர்டிலும் முதல் அடுக்கை சுத்தமாக்கிட்டோம். இப்ப அடுத்த அடுக்கின் விரைவில் வந்துரும் போல.\\

  செய்ய மாட்டானே. நல்ல பிள்ளையாச்சே!!!!

 4. அபிஅப்பா says:

  \\இளையராஜாவை நாலு பட்டி மன்ற பேச்சாளர்கள் சேர்ந்து ஜலதோஷம் பிடிக்க வச்சதுக்கே இவ்ளோ பொங்கினவர்…. இப்ப விண்ணதிர ஜால்ராக்கள் காது கிழிச்ச செம்மொழி மாநாட்டைப் பத்தி இவ்ளோ மென்மையா சொல்லியிருக்கார்னா என்னத்தை சொல்றது போங்க. \\

  ஆக ப.ராவும் விலைபோயிட்டாரா?? என்ன கொடுமை லெஷ்மி:-))))

 5. கோலங்களுக்கு அப்புறம் ஆயா சரண்டர் ஆகியிருக்கிறது ரம்யாக்கிட்டேதான்..அதுவும் அவங்க படிக்காமயே கலெக்டர் ஆகிடுவாங்க போல ! ஹ்ம்ம்…

  அப்புறம், கனிவமுதனை கண்ணில் காட்டலாமே! கூடிய சீக்கிரம் கப்போர்டுக்கெல்லாம் பூட்டு போட வேண்டிய நிலையும் வரும்! :-))

 6. //கோலங்களுக்கு அப்புறம் ஆயா சரண்டர் ஆகியிருக்கிறது ரம்யாக்கிட்டேதான்..அதுவும் அவங்க படிக்காமயே கலெக்டர் ஆகிடுவாங்க போல //

  :))))))))))) அசத்தல்..

 7. vallisimhan says:

  கனிவமுதன் படம்.:)கட்டாயம் பார்க்கணும்.

 8. vallisimhan says:

  இப்படியே போனால் வெள்ளிக் கிழமைல வெள்ளிய தொலைக்க கூடாது, செவ்வாய்க் கிழமைல செருப்பை தொலைக்க கூடாது, வியாழக் கிழமைல விளக்குமாத்தை தொலைக்க கூடாது என இன்னும் எத்தனை எத்தனை புதுப் புது கண்டுபிடிப்புகள் வெளிவரப் போகுதோ தெரியலை. ஜோசியக்காரர்கள் இதுக்கெல்லாம் என்னென்ன பரிகாரங்கள் கண்டுபிடிச்சு வெளில விடப்போறாங்களோ தெரியலை//

  ithuvum nadakkalaam.

 9. கோவை குமரன் says:

  //வியாழக் கிழமைல விளக்குமாத்தை தொலைக்க கூடாது//

  நன்று…..

 10. குசும்பன் says:

  //கனிவமுதனுக்கு நிக்க ஆசை வந்தாச்சு. கொஞ்சம் உயரமா எதை பாத்தாலும் பிடிச்சுகிட்டு நின்னு, அதையும் தள்ளி தானும் விழுந்துன்னு ஒரே கோலாகலம்.//

  நிக்கிற,நடக்கிற ஒரு 5 முக்கா அடி பெரிய குழந்தையையே அம்சமா சமாளிக்கிறீங்க, மாப்பிள்ளையையா உங்களால் சமாளிக்க முடியாது?:)) வீடியோ எடுத்து வைங்க அனைத்தையும்!

 11. சரி எங்க வீட்டுபெரியவங்களை உங்க பதிவ படிக்கவேணாம்ன்னு சொல்லி வைக்கிறேன…
  நீ்்க பாட்டு வெளக்கமாறு செருப்பெல்லாம்
  தொலைக்கக்கூட ஒரு கருப்பு தினம் இருக்கின்றீங்களே.. 🙂

 12. புருனோ says:

  //நிக்கிற,நடக்கிற ஒரு 5 முக்கா அடி பெரிய குழந்தையையே அம்சமா சமாளிக்கிறீங்க,//

  ஹி ஹி ஹி

 13. நேத்துதான் அபி அப்பாவின் பாவத்தைப் பங்கு போட்டுக்க அந்த ‘தங்கம்’ பார்த்தேன்.

  அத்தனாம் பெரிய பொட்டு வச்சுக்கிட்டு யார்டா அது தெரிஞ்ச மூஞ்சா இருக்கேன்னு யோசிச்சதில், ‘இப்ப’ இங்கே வந்து தெரிஞ்சுக்கிட்டேன். அது சீமா!!!!

  அபி அப்பாவைப் பிடிச்சுக்கிட்டு வாங்க யாராவது…………

  பெஞ்சுமேலே ஏறி நிக்க வைக்கணும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s