உதிரிப்பூக்கள் – 13-ஜுலை-2010


நேற்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அஞ்சறைப்பெட்டி எனும் சமையல் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த குறிப்பிட்ட எபிசோட் ஸ்ரீரங்கத்தில் எடுக்கப் பட்டிருந்தது. தொகுப்பாளர் ஊரின் சிறப்புகளைச் சொல்வதற்காக கையில் மைக்குடன் தெருவில் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.

“சித்திரை வீதியில் நான்கு, உத்திர வீதியில் நான்கு என மொத்தம் எட்டு தெருக்கள் இருக்கு. இதையெல்லாம் சேர்த்து சப்த கிரக வீதிகள்னு சொல்லுவாங்க” என்று தொடர்ந்து பல முறை இதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

மேற்கண்ட வாக்கியத்தின் பொருட்பிழைகளைப் புரிந்து கொள்ள ஒரு அருஞ்சொற்பொருள் பட்டியல்: சப்த – ஏழு, அஷ்ட – எட்டு, நவ – ஒன்பது.  :))))

நல்ல வேளை நம்ம ஜெயஸ்ரீ அக்கா இதை பார்க்கலை. பார்த்திருந்தா.. அவ்வளவு தான். :))

********

குழந்தைக்கு தடுப்பூசி போட்டுவிட்டு நங்க நல்லூரிலிருந்து மடிப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தோம். தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் ஒன்றின் மீது ஒன்று மோதாக் குறையாக சடன் பிரேக் போட்டு நிற்க. சமாளித்து கிடைத்த இடைவெளி வழியே முன்னேறினால்.. எல்லா வண்டிகளும் சடன்பிரேக் போட காரணமாயிருந்தது ஒரு சாண்ட்ரோ கார். யாரோ மனிதர்கள்தான் சரியாக பார்க்காமல் ரோட்டை கிராஸ் செய்துவிட்டார்கள் போல, அதான் வண்டி சடன் பிரேக் போட்டு நிற்கிறது என நினைத்தோம்.

ஆனால் நடந்து கொண்டிருந்தது என்ன தெரியுமா? ரோட்டின் ஒரத்தில் ஒரு பசுமாடு சென்று கொண்டிருந்தது. காரில் டிரைவர் சீட்டுக்கருகில் அமர்ந்திருந்த பெண்மணிக்கு பக்தி பெருக்கெடுத்ததால் வண்டியை நிறுத்தி, வண்டிக்குள்ளிருந்தே ஜன்னல் வழியாக பசுமாட்டின் பின் புறத்தை தொட்டு கும்பிட்டுக் கொண்டிருந்தார். அங்கதான் மகாலக்ஷ்மி வசிக்கறாங்களாம்.  என்ன கொடுமை சரவணன் இது?

*********

நண்பர் குசும்பன் பஸ்ஸில் (கூகிள் பஸ்) கிராமங்களுக்கும் விவாகரத்து வந்துட்டதா அதிர்ச்சியோட குறிப்பிட்டிருந்தார்.  அந்த இழைலயே ஒருத்தர் வந்து கிராமங்களிலும் அறுத்து கட்டறது உண்டுதானேன்னு கேட்டிருந்தாங்க. அது ரொம்ப குறைவான எண்ணிக்கை தானேன்னு சொன்னார் குசும்பன். அத்தோட அறுத்து கட்டினாலும் பின்னாடி சேர்ந்துக்குவாங்கன்னு வேற சொன்னார்.

என்னதான் எண்ணிக்கைல குறைவா இருந்தாலும் கூட பிடித்தம் இல்லாதவங்க பிரிஞ்சு போக ஒரு வழி எல்லா இடத்திலேயும் இருந்திருக்கு தானே? அறுத்து கட்டறது மட்டுமில்லை, பொண்ணுங்களை வாழாவெட்டியா பிறந்த வீட்டுக்கு அனுப்பறதுன்னு ஒரு வழக்கம் போன தலைமுறை வரைக்கும் கூட கிராமம் நகரம்னு வித்தியாசமில்லாம எல்லா இடத்துலயும் பழக்கத்துல இருந்தது.

பத்து வீட்டுக்கு ஒரு வீட்டுலயாவது ஒரு அத்தையோ இல்லை பாட்டியோ இப்படி வாழாம பிறந்த வீட்டுக்கு வந்து அண்ணன் தம்பி பிள்ளைங்களை பாசத்தை கொட்டி வளத்து விட்டுகிட்டு, காசில்லாத வேலையாளா வீட்டோட இருப்பாங்க.என்ன அப்பல்லாம் அந்த அத்தையோட பாட்டியோட கணவர்கள் மட்டும்தான் வேற வாழ்கைய தேர்ந்தெடுக்க வாய்ப்பிருந்தது. இப்ப விவாகரத்துன்னா ரெண்டு தரப்புக்கும் அந்த வாய்ப்புகள் இருக்கு. ஒரு வேளை அதுனாலதான் நிறைய பேருக்கு விவாகரத்துன்னா பிடிக்கலையோ என்னவோ? 🙂

அடியோ உதையோ வாங்கிகிட்டு ஆயுசுக்கும் பிடிக்காத பந்தத்துக்குள்ள சிக்கி கிடக்கணும்னு கஜேந்திரன்களையோ இல்லை கஜலக்ஷ்மிகளையோ கட்டாயப் படுத்த நமக்கு என்ன உரிமையிருக்கு? கிராமம்னா ஏதோ தேவலோகத்துலேர்ந்து கீழ விழுந்த ஒரு துண்டுன்றா மாதிரி நாம நம்மோட நாஸ்டால்ஜியாவுல மூழ்கணும்ன்றதுக்காக, அதுக்கு கிராமங்களோட புனிதம் கெடாம இருக்கணும்ன்றதுக்காக இப்படி அடுத்தவங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்னு எதிர்பார்க்கறது ரொம்ப அநியாயமில்லையா?

இது மாதிரி பிடிக்காத பந்தங்களை பிடிவாதமா ஃபெவிக்கால் போட்டு ஒட்டி வைக்கறதாலதான் கள்ளக்காதல்ன்ற கான்செப்ட்டே வருது. விவாகரத்துன்ற முறையான வடிகால்கள் இல்லைன்னா அப்புறம் அய்யய்யோ… எங்கூர்ல கூட கள்ளத் தொடர்பாமில்ல என்று நாம் புலம்ப வேண்டியதாகிவிடும் அபாயம் உண்டு.

#)(^

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், சமூகம், மூட நம்பிக்கை and tagged , , , . Bookmark the permalink.

13 Responses to உதிரிப்பூக்கள் – 13-ஜுலை-2010

 1. //கிராமம்னா ஏதோ தேவலோகத்துலேர்ந்து கீழ விழுந்த ஒரு துண்டுன்றா மாதிரி நாம நம்மோட நாஸ்டால்ஜியாவுல மூழ்கணும்ன்றதுக்காக, அதுக்கு கிராமங்களோட புனிதம் கெடாம இருக்கணும்ன்றதுக்காக இப்படி அடுத்தவங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்னு எதிர்பார்க்கறது ரொம்ப அநியாயமில்லையா?//

  சரியான கருத்து…

 2. Ken says:

  காதல்ல கள்ளக்காதல் உண்டா,

  எதை நல்லக்காதல்னு வகைப்படுத்துவீங்க

 3. விவாகரத்துக்கே அதிர்ச்சியடையிறவங்க எதை கள்ளக்காதல்னு சொல்லுவாங்களோ அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்

 4. குசும்பன் says:

  கிராமத்தில் எப்படி ஒருவன் ஆங்கிலத்தில் பேசினால் வியப்புடன் பார்ப்பார்களோ அப்படி இருந்தது எனக்கு டைவோர்ஸ் செய்தி கேட்டது. அதை பகிர்ந்துக்கிட்டேன். சிலவிசயங்கள் கிராமத்துக்கு புதுசுதான்.

  //தேவலோகத்துலேர்ந்து கீழ விழுந்த ஒரு துண்டுன்றா மாதிரி //

  சத்தியமா கிராமம் என்பது தோவலோகத்திலிருந்து கீழே விழுந்த துண்டுதான்:) , கிராமத்தில் இருப்பவர்களுக்குதான் அதன் அருமை தெரியும்.

  //எங்கூர்ல கூட கள்ளத் தொடர்பாமில்ல என்று நாம் புலம்ப வேண்டியதாகிவிடும் அபாயம் உண்டு.//

  அடிக்கடி எங்க ஊரில் பொம்பளைங்க சண்டை போட்டுப்பாங்க, அந்த நேரத்தில் அவுங்களை கடந்து செல்ல கூட பயந்துக்கிட்டு இருக்குங்க பெருசுங்க. அப்படி மீறி போனா வந்து போனவன் லிஸ்டில் இவர் பெயரும் ஏறிடும் என்ற பயம் தான். ஆக இங்க விசயத்தில் கிராமம் அட்வான்ஸ்டு:)

 5. ரசித்தேன்.

  அந்தம்மா கையிலே சாணம் போட்டுருந்தால் இன்னும் குபேர பாக்கியம் கிடைச்சிருக்குமே!!!!!

  • ஐய்யய்யோ… வண்டிய அம்போன்னு போட்டுட்டு பிஸ்லரி வாட்டர் தேடி ஒடியிருப்பாங்க… டிராபிக் இன்னொரு அரை மணி நேரம் ஸ்தம்பிச்சிருக்குமா இருக்கும். :)))))

 6. குபேர பாக்கியம்?? பிரமாதம் டீச்சர்.

  டைவர்ஸ்: எனக்கு தெரிஞ்சு இந்த கால பெண்கள் அதிலே ரொம்ப தெளிவா இருக்காங்க. துளசி டீச்சர் எங்கிருந்தாலும் வந்து என் கருத்துக்கு ஆதரவா ஒரு ஆமாம் போட்டுட்டு போங்க.

  பையன் பிடிக்கலியா ….போடா இவனே நீயுமாச்சு உன் தாலியுமாச்சுன்னு கிளம்பிடுறாங்க. அதனால நீங்க நினைப்பது போல \\அடியோ உதையோ வாங்கிகிட்டு ஆயுசுக்கும் பிடிக்காத பந்தத்துக்குள்ள சிக்கி கிடக்கணும்னு கஜேந்திரன்களையோ இல்லை கஜலக்ஷ்மிகளையோ\\ இல்லை லெஷ்மி. ஐந்து லட்சம் செலவு செஞ்சு கல்யாணம் செஞ்சு வச்சா கூட முதலிரவு அன்னிக்கு தாலிய தூக்கி கடாசிட்டு வந்த பெண்களை எனக்கு தெரியும். அடியாவது உதையாவது. அதல்லாம் அந்த காலம்.

 7. \\குழந்தைக்கு தடுப்பூசி போட்டுவிட்டு நங்க நல்லூரிலிருந்து மடிப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தோம். \\

  நல்லவேளை போயிட்டு வந்து தானே பைத்தியகாரன், டாக்டர் புரூனோ, அதுசரி ஆகியோர் பதிவை எல்லாம் படிச்சீங்க?

  எதுக்கு சொல்றேன்னா வாழ்க்கை வேற, பதிவிலே கும்மியடிப்பது வேற….சமத்தா தடுப்பூசி போட்ட வரை சந்தோஷம்!

 8. அபி அப்பா சொன்னதுக்கு ஒரு ‘ஆமாம்’ 🙂

  பெண்கள் தெளிவாத்தான் இருக்காங்க, தமிழ்ச் சினிமாவைத் தவிர.

  ஒன்னுத்துக்கும் உதவாத கழிசடை புத்தி இருக்கும் ஒருத்தனை( ஹீரோவாம்!) ஒரு பணக்காரவீட்டு, மெத்தப்படிச்ச பெண் ஓடி ஓடி அவனைக் காதலிப்பாளாம்!!!!!!

  நெசமாவா இருக்கும் லக்ஷ்மி?

 9. டிவர்ஸ் எல்லாம் கிராமங்களுக்கு வராமல் இருப்பதுதான் நல்லது . அடிச்சுகிட்டோ பிடிச்சிகிட்டோ இருந்தாலும் குழந்தைகளுக்காவது கொஞ்சம் பொறுத்து போகிற குணம் கிராம பெண்களுக்கு உண்டு. தனி மனித சுதந்திரம் , பெண் விடுதலை எல்லாம் Extreme Situation இல் வேண்டுமென்றால் கிராம பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலாம்.

  60% டிவர்ஸ் அவசரத்திலும் , ஆத்திரத்திலும் தான் எடுக்கபடுவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

  சில விசயங்களில் அறியாமை நல்லதே.

 10. சப்த என்றால் 7 என்பது பெரும்பாலோனோருக்கு தெரியாது…. இப்படி தான் பொருள் தெரியாமல் ஸ்லோகம் சொல்றதும்….நமக்கு தெரிஞ்ச மொழியையே சமயத்துல பொருள் தெரியாம உபயோகிக்றோம், இதுல சமஸ்க்ரிதம் எங்கிருந்து புரியும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s