உதிரிப் பூக்கள் – 25-ஜூலை-2010


விவில் சோப் விளம்பரத்தில் முன்பு டல் திவ்யாவை தூள் திவ்யாவாக திரிஷா கன்வர்ட் செய்தார். இப்போது திவ்யாவும் திரிஷாவும் சேர்ந்து சுமார் சுச்சி என்பவரை சூப்பர் சுச்சி ஆக மாற்றுவதாக அடுத்த பார்ட் எடுத்திருக்கிறார்கள். வசதியாக இப்பெண்கள் மருத்துவம் படிப்பதாக காண்பித்து விட்டதால் இன்னும் ஒரு சில தொடர் விளம்பரங்களை இதே ரீதியிலேயே தயாரித்துவிட முடியும்.

பின்னே, ஐந்து வருஷத்தில் பத்து பேரையாவது கேன்வாஸ் செய்ய முடியாதா என்ன? ஆனால் என் பார்வையில் திரிஷாவை விடவும் மற்ற இரு பெண்களும் எண்ணெய் வடிய இருக்கும் போதே அழகாகத் தான் தெரிகிறார்கள் – எனக்கு ஏற்கனவே திரிஷாவை பிடிக்காதென்பதால் இருக்கலாம். 🙂 பி.கு: அவரை விடவும் அவர் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் – க்கும்.. ரொம்ப முக்கியமா இந்த இன்பர்மேஷன் என்று சொல்வது கேட்கிறது.

********

ஒரிஜினல் வெர்ஷன் – http://tinypaste.com/5f5cea

திருத்தப் பட்ட பதிப்பு – http://www.jeyamohan.in/?p=7452

நல்லாத்தான் மெருகேத்தறாங்க… நமக்குத்தான் இந்த உள்குத்தெல்லாம் வாகா குத்த வர மாட்டேங்குது.. இந்த இலக்கியவாதிகள் எல்லாம் வேற எதுல இல்லைன்னாலும் இந்த வகைல பெரிய முன்னோடிங்கதான். 🙂

*******

தோழி ஒருத்தியின் மகனார் இரண்டு வயதை நிறைவு செய்கிறார். எனவே வாழ்த்துச் சொல்ல போன் செய்தேன். நான்கைந்து மாதங்களின் முன்பு தோழி ஒரே புலம்பல் – அவன் அப்பா அலுவலகம் கிளம்புகையில் டாடா/பை பை சொல்ல மாட்டேன் என்கிறான். அவர் ரொம்ப ஆசைப் படுகிறார். இவனோ வாயைத் திறக்க மாட்டேனென்கிறான் என்றெல்லாம் புலம்பித் தீர்த்தாள்.

இப்போது என்ன செய்கிறான் என்று கேட்டேன்.  “அதை ஏண்டி கேக்கற? ஒரு ரூம்லேர்ந்து இன்னொரு ரூமுக்கு யாராவது போனா கூட டாட்டான்றான். டாய்லெட் போகக் கூட பை சொல்லிட்டுப் போகணும்னு அழுகை.. என்ன பண்றதுன்னே தெரியலை” என்றாள். நான் புரையேறும் அளவுக்கு சிரித்துக் கொண்டிருந்தேன்.

”ரொம்ப சிரிக்காதடி… உன் டேர்ன் வர ரொம்ப நாளில்லை…” என்றவாறே போனை வைத்தாள் தோழி. :)))

*****

கனிவமுதனுக்கு சாப்பிடப் பிடிக்கலை. அதே போல தண்ணி குடிக்கவும் சுத்தமா பிடிக்கலை. ரொம்ப சிரமப் பட்டு உள்ள தள்ள வேண்டியிருக்கு.. ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன.  :)) அதே போல தலைவருக்கு வன்முறை ரொம்ப அதிகமாயிருச்சு… 😦 என் முடியை பிடித்து இழுத்து, அடிக்கவும் இந்த உலகத்துல ஒரு ஆளால முடியுதுன்றது பாலாக்கு உள்ளூர ரொம்ப சந்தோஷத்தை தருதுன்னு நினைக்கறேன். ஆனாலும் வெளில காட்டிக்காம காப்பாத்தறா மாதிரி பாவ்லா பண்றார்.

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in உதிரிப்பூக்கள், எண்ணம், குழந்தை வளர்ப்பு and tagged , , . Bookmark the permalink.

6 Responses to உதிரிப் பூக்கள் – 25-ஜூலை-2010

 1. muthuletchumi சொல்கிறார்:

  \\என் முடியை பிடித்து இழுத்து, அடிக்கவும் இந்த உலகத்துல ஒரு ஆளால முடியுதுன்றது//எல்லா அப்பாக்களுக்கும் இப்படித்தான் போல.. …

  இங்க பையன், என்னை எதிர் த்து கேள்வி கேக்கும்போதெல்லாம் பெருமைப்படும் அப்பாவைப்பார்க்கிறேன்.

  🙂

 2. raj சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது மிகவும் சரி …

 3. அபிஅப்பா சொல்கிறார்:

  நீங்க தல’யால தண்ணிகுடிச்சாலும் பையன் குடிக்க மாட்டேங்குறானா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்யலாம்???

 4. அபிஅப்பா சொல்கிறார்:

  \\பி.கு: அவரை விடவும் அவர் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் \\

  கமல் படத்துல நடிக்கிறாங்கலாம்:-(((

 5. புருனோ சொல்கிறார்:

  //கனிவமுதனுக்கு சாப்பிடப் பிடிக்கலை. அதே போல தண்ணி குடிக்கவும் சுத்தமா பிடிக்கலை. ரொம்ப சிரமப் பட்டு உள்ள தள்ள வேண்டியிருக்கு.. ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன. :)) //

  குழந்தைகளின் உடல் வளர்ச்சி என்பது அனைத்து நேரங்களிலும் சீராக இருக்காது. net catabolic response சில நேரங்களில் அதிகம் இருக்கும் net anabolic response அதிகம் இருக்கும்

  anabolic response அதிகம் இருந்தால் அதிகம் பசிக்கும். catabolic response அதிகம் இருக்கும் போது பசிக்காது !!

  குழந்தைகளளின் மூளை மிகவும் சக்தி வாய்ந்தது. எப்பொழுதும் உடலில் சக்கரையின் அளவு குறைகிறது உடனடியாக பசிக்கும். நீரின் அளவு குறைந்தால் தாகம் எடுக்கும்

  அந்த மூளை கூறுவதை மதிக்கவும் !!

  பசிக்கும் போது உணவு கொடுத்தால் போதும். தாகம் எடுத்தால் நீர் கொடுத்தால் போதும்

  வாயில் திணிக்க வேண்டாம்

  இந்த நேரத்திற்கு சாப்பாடு, இந்த நேரத்திற்கு தூக்கம், காலை எழுந்தவுடன் படிப்பு, பின் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு என்று rhythm set செய்வதை மூன்று வயதிற்கு மேல் வைத்துக்கொள்ளவும்

  அதற்கு இன்னமும் இரண்டு வருடங்களும் 12 நாட்களும் உள்ளன என்பதால் அது வரை பொறுமை ப்ளீஸ்

  (நாள் கணக்கு சரி என்றே நினைக்கிறேன். நினைவில் இருந்து கணக்கு போட்டதால் சந்தேகம்)

 6. ஜெ. பாலா சொல்கிறார்:

  :)))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s