சிற்பக் கலைக்களஞ்சியமாய் அமைந்திருக்கும் கோவில்களைக் கொண்டாடி, மக்களுக்கு தன் எழுத்தின் வழியே அறிமுகப் படுத்தியவர், நிறைய பேருக்கு தமிழரின் பழம் பெருமை கொண்ட வாழ்வில் ஆர்வத்தை உண்டாக்கியவர் என்றால் அது கல்கிதான்.
ஆனால் அவர் சோழ, பல்லவ மன்னர்களின் கலை ஆர்வத்தையும், அவர்களின் ஆதரவில் உருவான கோவில்களின் சிறப்புகளையும் கொண்டாடியது போல தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள கோவில்களை பெரிதாய்ச் சொன்னது கிடையாது.
இத்தனைக்கும் நாயக்கர்களும் பெரிய வரலாற்றுப் பின்புலம் உள்ள அரசர்கள்தான், மேலும் அவர்களின் கலையுள்ளம், தமிழ் நாட்டில் நடந்த சைவ/வைணவப் போர்களை சாதுரியமாக இல்லாமலாக்கியது போன்ற ராஜதந்திர முயற்சிகள் போன்ற எவ்வளவோ விஷயங்கள் உண்டு இந்த மன்னர்களைப் பற்றி பேச. ஒரு வேளை கால வரிசைப் படி ஆரம்பித்து சோழ, பல்லவ, சோழ வரிசையைத் தாண்டவே நேரமில்லையோ என்றும் எண்ணியதுண்டு. ஆனால் இன்று கல்கியின் எழுத்திலேயே இதற்கு வேறொரு கோணம் கிடைத்தது.
//இன்னொரு விசேஷம் என்னவென்றால், தமிழ்நாட்டில் பிற்காலத்தில் கட்டப் பெற்ற முன் வாசல் கோபுரங்கள் பலவற்றில் அசிங்கமான பொம்மைகள் பலவற்றைக் காண்கிறோம். ‘ஆபாஸங்களின் மூலமாகத் தான் பாமர ஜனங்களைக் கவர முடியும்’ என்ற மனப்பான்மை நாயக்கர் மன்னர் காலத்திலே ஏற்பட்டு விட்டதாகத் தோன்றுகிறது. ஆனால், சோழ மன்னர்களின் காலத்தில் அது இல்லை. தஞ்சாவூர்க் கோபுரத்தில் ஆபாஸக் காட்சியே கிடையாது! //
http://kalkionline.com/thisweekissue/page2.asp
இதைப் படித்ததும் ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது. சில மனிதர்களால் நானூறு ஐநூறு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட மாற்றங்களையே தாங்கிக் கொள்ள முடியவில்லை, ஆயிரம் வருடம் பின்னோக்கிப் போனால்தான் நல்லதென்று தோன்றுகிறது என்பது எவ்வளவு வினோதமான உண்மை.
**********
ஞானி ஓ பக்கங்களை கல்கியில் தொடர்கிறார். வேறென்ன, கருணாநிதி புராணம்தான் இங்கேயும். இந்த முறை கருணாநிதியின் பெயர் வைக்கும் மேனியாவைப் பற்றி பேசியிருக்கிறார். ஆனாலும் தமிழ்நாட்டில் இந்த அசிங்கம் கொஞ்சம் அதிகப்படிதான். கருணா/ஜெயா தாண்டி போனால் போகிறதென்று இவர்கள் பூமியில் வந்துதிக்க காரணமான சந்தியா/முத்துவேலர்-அஞ்சுகத்தம்மாள் பெயர்கள்.
மொத்த தமிழ்நாட்டின் முகவரிகள், திட்டங்கள் எல்லாமே இந்த ஐந்து பெயர்களுக்குள் அடங்கிவிடும் நாள் தொலைவிலில்லை. இதில் கருணாநிதி கொஞ்சம் தேவலாம் என்றே சொல்லலாம் – அவருக்காவது எப்போதாவது ஒரு முறை பெரியாரையும், அண்ணாவையும் புகழவும், நினைவு கூரவும் முடிகிறது.
ஜெயலலிதாவிற்கோ தன் நேரடி முன்னோரான எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லவும் வலிக்கிறது. மேல் நிலைத் தலைவர்கள்தான் இப்படியென்றால் தொண்டரடிப் பொடிகள் இவர்களையே விஞ்சுகிறார்கள். மடிப்பாக்கம் பகுதியின் அதிமுக பிரமுகர் ஒருவர் – சமீபத்தில் இவரது பிறந்த நாள் விழாவுக்கு ஏரியா முழுக்க வைக்கப்பட்டிருந்த பேனர்கள் புல்லரிக்க வைத்தது. ஒன்றில் இவர் மூன்று முகத்தோடு பிரம்மா போல காட்சியளிக்கிறார். மற்றொன்றில் இவரது மகன் சிங்கத்தையும், புலியையும் தடவிக் கொடுத்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார். ஒரே மாயா யதார்த்தவாத எஃபெக்ட்தான் போங்க.. :))
**********
பிரபலங்களை விடுங்கள் – சராசரி மனிதர்களின் வாழ்விலேயே கொண்டாட்டங்களுக்கான ஆடம்பர செலவு என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி வருகிறது. கொண்டாட்டம் என்பது எவ்வளவு காஸ்ட்லியாக, எவ்வளவு பிரம்மாண்டமாக நடக்கிறதோ அதுதான் உயர்ந்தது என்ற எண்ணம் எல்லோரின் மனதிலும் படிப்படியாக பதிய வைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. என் தோழி ஒருவரின் 5 வயது மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் போன வாரம் நடந்தது. வழக்கம் போல என்னால் போக முடியவில்லை. 😦 மறுநாள் மெயிலில் புகைப்படங்கள் அனுப்பியிருந்தார். கேக் பார்பி பொம்மையின் வடிவில் செய்யப் பட்டிருந்தது.
எனக்கு ஆச்சரியம் தாங்காமல் அடுத்த முறை சந்தித்த போது அவரிடம் கேட்டேன் “பார்பி பொம்மை மாதிரி கேக் வாங்கியிருக்கீங்களே, அதை எப்படி வெட்ட மனம் வந்தது? அதும் பொண்ணு எப்படி ஒத்துகிட்டா?” அதற்கு அவர் சொன்ன பதில் – “என் பொண்ணுக்கு ஒரே சந்தோஷம். போன வருஷம் டோரா மாதிரி வாங்கினோம். இந்த வருஷம் என்ன என்னன்னு நச்சரிச்சுகிட்டே இருந்தா. சஸ்பென்சா சொல்லவே இல்ல. பார்பி மாடல்னு பாத்ததும் பயங்கர குஷி. வந்த பசங்களும் செமையா இம்ப்ரஸ் ஆகிட்டாங்க. எனக்கு இந்த பார்ட் வேணும், இது வேணும்னு கேட்டு வாங்கி ஆசையா சாப்டாங்க.” என்றார். 😦
உடனே பக்கத்திலிருந்த இன்னொரு தோழி கேட்டார் “எவ்ளோ ஆச்சு?” “மொத்தம் டூ அன்ட் ஹாஃப் கேஜி – ஒன் தௌசண்ட் ஆச்சு…” “என் பையனுக்கு ஃப்ரென்ச் லோஃப்ல வாங்கின ஒன் கேஜி கேக்கே தௌசண்ட் ஆச்சு” “ஒ.. அது கொஞ்சம் காஸ்ட்லிதான்” ஒரு கிலோ கேக் ஆயிரம் ரூபாய் என்பது கொஞ்சம் தான் காஸ்ட்லி என்று நினைக்கும் அளவு நம் மனநிலை மாறி விட்டது என்பது வருத்தமான விஷயம். பிரபலங்களின் பிரம்மாண்ட வெறி மெல்ல மெல்ல நடுத்தர மக்களுக்கும் தொற்றுவது அபாயகரமானது.
—
சென்னையில் விலைவாசி ரொம்ப அதிகமாயிருச்சுங்க. இப்பெல்லாம் ஆயிரம் என்பது …….ஒன்னுமே இல்லை:(
பிறந்தநாள் ஒன்னு வந்துகிட்டே இருக்கே!!!!
இந்த கேக் வெட்டும் பழக்கம் எனக்கு என்னவோ பிடிப்பதில்லை. அதை ஆரம்பம் முதல் அபிக்கு சொல்லி சொல்லி அவ ஓக்கே. ஆனா தம்பி “உன் கொள்கை உன்னோட, எனக்கு கேக் வேண்டும்” என சொல்வது போல ஒரே அழுகாச்சி. அவன் ஆடிய ஆட்டத்தில் வழுக்கி கேக் மேலயே விழுந்து நக்கிகிட்டு இருந்தான்.
கனிவமுதனுக்கு ஆரம்பம் முதலே சொல்லி வச்சு பாருங்க. கேக் வேண்டாம் என.
//ஒரு கிலோ கேக் ஆயிரம் ரூபாய் என்பது கொஞ்சம் தான் காஸ்ட்லி என்று நினைக்கும் அளவு நம் மனநிலை மாறி விட்டது என்பது வருத்தமான விஷயம்//
சிம்பிளா கோவிலில் ஒரு அர்ச்சனை அப்படிக்கா வூட்டு வந்தா எதாச்சும் கேசரி அல்லது சக்கரைப்பொங்கல் கிண்டி தருவாங்க தின்னுட்டு புதுசா சட்டை அல்லது பேண்ட் இருக்கும் போட்டுக்கிட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான் – இதுதான் எனக்கு தெரிஞ்ச பர்த்டே ஸ்பெஷல் ! இப்ப டிரெண்ட் டோட்டலி சேஞ்சு ஆகிப்போச்!
// மடிப்பாக்கம் பகுதியின் அதிமுக பிரமுகர் ஒருவர் – சமீபத்தில் இவரது பிறந்த நாள் விழாவுக்கு ஏரியா முழுக்க வைக்கப்பட்டிருந்த பேனர்கள் புல்லரிக்க வைத்தது. ஒன்றில் இவர் மூன்று முகத்தோடு பிரம்மா போல காட்சியளிக்கிறார். மற்றொன்றில் இவரது மகன் சிங்கத்தையும், புலியையும் தடவிக் கொடுத்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார். //
அய்யய்யோ அவரு நம்ம சொந்தக்காரருங்க.
ஏதோ கொஞ்சம் பார்த்து பொட்டு கொடுங்க.
கோவில் சுதை சிற்பங்கள் பற்றிய உங்கள் குறிப்பு,சுவையானது;இனி சரிபார்க்க வேண்டும்!
எளிதாகக் கிடைக்கும் பணம் ஊதாரித் தனமாகச் செலவு செய்யச் சொல்லித் தூண்டும்;மேலும் தன் குடும்பம் என்று தான்,மனைவி,தன் குழந்தை மட்டும் என்று தத்தமது குடும்பத்தை சுருக்கிக் கொண்டு நத்தை வாழ்வு வாழ மனிதன் ஆசைப்பட்டு சிறிது காலம் ஆகிவிட்டது..
நீங்கள் உங்கள் பெற்றோருடன் அல்லது மாமனார் வீட்டுடன்தான் வசிக்கிறீர்களா? ! :))