சமீப காலங்களில் அவ்வப்போது பார்க்கும் டிவி நிகழ்சிகள் மூலம் தங்கலீஷில் பேசுவதில் ஏற்பட்டிருக்கும் ஒரு முன்னேற்றம் கண்ணில் பட்டது. முன்பெல்லாம் தமிழ் வாக்கியங்களின் நடுவே ஆங்கில வார்த்தைகள் கலந்து பேசுவார்கள். இது ’பண்ணி’ மொழி என்று அறியப்படும் – நிச்சயமாக மூன்று சுழி ‘ண’தான் உபயோகிக்க வேண்டும், இரண்டு சுழி ‘ன்’ வரக்கூடாது.
“நான் நல்லா திங் பண்ணிதான் இந்த வோர்ட்ஸை எல்லாம் யூஸ் பண்ணனும். இல்லைன்னா ப்ராப்ளம் கிரியேட் பண்ணிடும். இது எல்லாம் ரொம்ப டேஞ்சரஸ்ஸான விஷயம். எல்லாத்தையும் கேர்புல்லா ப்ளான் பண்ணி செய்யணும்.”
இப்ப புரிஞ்சிருக்குமே, இதை ஏன் ‘பண்ணி’ மொழி என்று அழைக்கிறோம்னு. 🙂
இப்ப தங்கலீஷில் ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டிருக்கு. அதுக்கு ஒரு உதாரணம் பார்க்கலாம். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நம்ம வீட்டுக் கல்யாணம் என்ற நிகழ்சியில் பொல்லாதவன் பட இயக்குனர் வெற்றி மாறனும் அவர் மனைவியும் பங்கு பெற்றனர். இந்த நிகழ்சியின் நோக்கம் வி.ஐ.பிகளின் வீட்டுத் திருமணம், அவர்களின் காதல், திருமணத்தில் நடைபெற்ற சுவாரசியமான விஷயங்கள் என்று தொகுப்பதுதான். வெற்றி மாறனும், அவர் மனைவியும் பேசியது இப்படி இருந்தது.
“நானும் இன்னொரு பெண்ணும் sharing a room. Actually she is more close to வெற்றி. வெற்றிய she only introduced to me. ”
“whenever i try to meet her, இவங்களையும் சேத்து பாப்பேன். அப்படித்தான் i started talking to this lady.”
“அவ அடிக்கடி used to talk about vetri proudly. நானும் அப்படியே slowly got attracted towards him.”
இப்படியாக ஆங்கில வார்த்தைகளுக்குப் பதில் இடையிடையே தமிழ் வாக்கியங்களை நுழைத்துப் பேசுவதாக தங்கிலீஷ் முன்னேறியிருக்கிறது. நல்ல முன்னேற்றம்தான்.
***********
வர வர நம்ம பதிவர்களோட தன்னடக்கத்துக்கு எல்லையே இல்லாம போச்சுங்க… ஒருத்தங்க சொல்றாங்க என் எழுத்துல ராஜேஷ்குமாரும், பட்டுக்கோட்டை பிரபாகரும் பாய் போட்டு படுத்திருப்பாங்க அப்படின்னு. இன்னோருத்தங்க சொல்றாங்க தினமும் 100 பக்கம் (அது பிட் நோட்டீஸா இருந்தாலும் பரவால்லயாம்) படிக்கலைன்னா மலச்சிக்கல் வந்துரும்னு. தாங்க முடியல – சிரிப்புத்தான்.. :))))
*************
தமிழ் சினிமாவில் நாயகன் காவல் அதிகாரியாக வரும் படங்கள் பெரும்பாலனவற்றில் பாதி படம் வரையிலுமோ, இல்லை க்ளைமேக்சுக்கு 10 நிமிடம் முன்பு வரையோ பொறுமையாக வில்லனை கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்துவார். தன் செல்வாக்கினால் அந்த கேசை உடைத்துவிட்டு வெளியே வரும் வில்லன் கோர்ட் வாசலில் ஹீரோவை பார்த்து கொக்கரிப்பதாக சில வசனங்கள் பேசுவார்(டக்குனு நினைவுக்கு வரும் படம் சூரசம்ஹாரம் – என்னோட ஆல் டைம் பேவரைட் :)) ). பதிவுலகிலும் இப்போ அதுதான் ட்ரெண்ட் போல. யாரு நிஜம் சொல்றா, யாரு பொய் சொல்றாங்கன்னு கண்டுபிடிக்கும் முன்னாடி நமக்குத் தாவு தீருது. ஆனா ஒன்னு, தன்னெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்னெஞ்ஞே தன்னைச் சுடும்னு சொன்னவரு யாரோ ஏப்பை சாப்பையான ஆளில்லைங்க, எல்லாந்தெரிஞ்ச ஆசாமி. அதுனால நிச்சயம் அது சுடத்தான் செய்யும். இன்னிக்கு வேணும்னா கலக்கீட்ட, உன்னல்லாம் யாரு மாட்டி விட முடியும்னு உங்க தோளை நீங்களே தட்டிக்கலாம். ஒரு நாள் அந்த மனசாட்சி தமிழ் சினிமால வரா மாதிரி உங்கள மாதிரியே உருவத்துல வெள்ள ட்ரஸ் போட்டுகிட்டு முன்னாடி வந்து நின்னு உங்கள பிடிச்சு உலுக்கத்தான் செய்யும், அத மட்டும் நினைவுல வச்சுக்குங்க…
*****
//இன்னிக்கு வேணும்னா கலக்கீட்ட, உன்னல்லாம் யாரு மாட்டி விட முடியும்னு உங்க தோளை நீங்களே தட்டிக்கலாம். ஒரு நாள் அந்த மனசாட்சி தமிழ் சினிமால வரா மாதிரி உங்கள மாதிரியே உருவத்துல வெள்ள ட்ரஸ் போட்டுகிட்டு முன்னாடி வந்து நின்னு உங்கள பிடிச்சு உலுக்கத்தான் செய்யும், அத மட்டும் நினைவுல வச்சுக்குங்க…//
:)))
(இங்க ஏதும் கருத்து சொன்னா அதுக்கும் தனியா ரவுண்டு கட்டுவாங்கன்னு நெனைச்சு பயப்படறதால நான் இங்க ஏதும் கருத்து சொல்ல விரும்பலை)
ஒரு நாள் அந்த மனசாட்சி தமிழ் சினிமால வரா மாதிரி உங்கள மாதிரியே உருவத்துல வெள்ள ட்ரஸ் போட்டுகிட்டு முன்னாடி வந்து நின்னு உங்கள பிடிச்சு உலுக்கத்தான் செய்யும், அத மட்டும் நினைவுல வச்சுக்குங்க.
தமிழ்ப் படங்களில் வெள்ளை உடையை பேய்களும், அரசியல்வாதிகளும் தானே குத்தகைக்கு எடுத்துள்ளனர்!?
#சந்தேகம்.
என்னால அந்த பதிவரை எல்லாம் கண்டுபிடிக்க முடியாதுப்பா:) பதிவுகளைப் படித்தாத் தானே வம்பு:))
மனசாட்சிக்கு வெள்ளை உடைதான் தெரியுமா. பழைய சினிமால எல்லாம் கண்ணாடிக் குள்ள இருந்து பேசுமே!!