கனிவமுதனுக்கு சளித் தொந்தரவு தாங்க முடியவில்லை. ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் டாக்டரிடம் போய் விதவிதமான மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தாயிற்று. மருந்து கொடுத்த நான்காம் நாள் குறையும். பின் டோசேஜ் நிறுத்தியவுடன் மீண்டும் ஆரம்பிக்கும். ஒன்னேகால் வயதுக்கு அதிகமான ஆண்டி பயாட்டிக்ஸ் கொடுக்கிறோம் என்று தோன்றவே இப்போது கற்பூரவல்லியும், துளசியும் போட்டுக் கஷாயம், ஹிமாலாயாஸின் காஃப்லெட் என மாற்று மருத்துவம் பக்கம் திரும்பியிருக்கிறோம். இதிலாவது தலைவரின் இருமல் நின்றால் சரி. இருமுகையில் தகர உண்டியலில் கொஞ்சம் காசு போட்டு குலுக்குவது போல் இருப்பது கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை. 😦
**********
எங்கள் பாட்டி இருந்த வரைக்கும் எங்களுக்கு வீட்டு வேலையில் உதவிக்கு வரும் பெண்கள் யாருமே நிரந்தரமாக இருந்ததில்லை. அவரது அணுகுமுறை அப்படி. என்றேனும் கல்யாண வீட்டுச் சாப்பாடு, வீட்டில் சமையல் இல்லை என்றால் தேய்க்கப் போடும் பாத்திரங்கள் குறைவாக விழும் இல்லையா? உடனே என் பாட்டி வீட்டில் மளிகை சாமான் வைத்திருக்கும் டப்பாக்களை ஒழித்து அவற்றையேனும் போட்டு பாத்திரங்களின் எண்ணிக்கையை அதே அளவு கொண்டு வந்துவிடுவார்.
இந்த விஷயம் நேற்று எங்கள் வாடிக்கையாளராக வாய்த்திருக்கும் நிறுவன ஊழியர்களைப் பார்த்த போது நினைவுக்கு வந்தது. அந்தப் பக்கம் பெரும்பாலானவர்கள் கிறிஸ்த்மஸ் ஒட்டிய விடுமுறைக்காக நீண்ட விடுப்பில் போகிறார்கள். அதனால் எங்கள் மக்கள் வேலையில்லாமல் இருந்துவிடப் போகிறார்களே என்று கடந்த இரண்டு வாரமாய் ஒரே கவலை. என்னிடம் உங்கள் டீமின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான ப்ளான் என்ன என்ன என்று நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். கிடப்பில் கிடக்கும் பூச்சிகளை எல்லாம் பிடிப்பதுதான் என்று நான் சொன்னதுதான் தாமதம். நேற்று முழு மூச்சாக உட்கார்ந்து முடிந்த அளவு பூச்சிகளை (மிக அல்பத்தனமாகக் கூட சில உண்டு) கண்டுபிடித்து லிஸ்ட் போட்டுக் கொடுத்துவிட்டுப் போயிருக்கும் புண்ணியவான்களே…. விடுமுறையை இனிமையாகக் கழித்துவிட்டு வாருங்கள். :))) வேறென்ன சொல்ல?
**********
//அவரது சிறுகதைகளில் ஏராளமான கல்யாணப் பந்திக் கதைகள் இருக்கின்றன. சம்பந்தமில்லாத விஷயங்களுக்கும் இங்கே உருவகம் அகப்படும். பின் நவீனத்துவ சிந்தனைகள் வந்து அலம்பல் செய்த காலத்தில் நாஞ்சில் சொன்னார். “… பக்கத்து எலையிலேருந்து ரசம் ஓடி நம்ம எலைக்கு வாறதுல்லா அது? செரி போட்டுன்னு வக்கலாம்னா நாம சாப்பிடுகது பாயசம் பாத்துக்கிடுங்க…..”//
என்று போகிற போக்கில் சொன்னாலும், என்ன ஒரு அழகான எக்சாம்பிள். மிகவும் பிடிந்த்திருந்தது இது. எத்தனை முறை படித்தாலும் சிரிக்க வைக்கும் இடம். நாஞ்சிலுக்கே உரிய நக்கல்… மேலும் படிக்க.. http://www.jeyamohan.in/?p=135
—
கனிவமுதனுக்கு கிராமியப்பாடல் என்றால் கொள்ளைப் பிரியம். தலைவரின் இப்போதைய ஃபேவரைட் இந்தப் பாடல்தான். 🙂
http://www.youtube.com/watch?v=gXET9AVxKd4
—
ஹோமியோபதி ட்ரை செய்திட்டீங்களாப்பா?
குங்குமப்பூ வெந்நீர்ல கரைத்து நெத்தில பத்துப் போடலாம்./
இல்லாவிட்டால் குங்குமம் கரைத்து கூட போடலாம்.
பனங்கல்கண்டு,மஞ்சள் பொடி போட்ட பால் தேன் விட்டுக் கொடுக்கலாம்.
பாவம் குழந்தை.
பாட்டு நல்லா இருக்கு – ஆட்டம் போட வைக்கிற டைப்பு அந்த குட்டீஸ்க்கு புச்சிருக்கு ! 🙂
முத்து, ஹோமியோபதி பக்கம் போகச்சொல்லித்தான் நிறைய பேர் சொல்றாங்க. பக்கத்துல நல்ல டாக்டர் விசாரிச்சுகிட்டிருக்க்கோம்.
வல்லிம்மா – குங்குமம் புதுசா இருக்கு. ட்ரை செய்யறேன்.
ஆமா ஆயில்ஸ்…. காலைத் தரையை விட்டுத் தூக்காம, லேசா ஜம்ப் பண்றா மாதிரி ஆடுவாரு… அதே போல மைனா படத்தில் வரும் ஜிஞ்சிணுக்கா ஜிமிக்கி போட்டு பாட்டும் தலைவரோட டான்ஸ் ஐட்டம்தான். :))
மாற்று மருத்துவங்கள் நல்லதே. ஆனால் உடனடி நிவாரணத்துக்கு எளிய இருமல் மருந்துகளை டாக்டரின் ஆலோசனையின்பேரில் தருவதே சரி. என் மகளுக்கு corex dx தருகிறேன். dx இல்லாவிட்டால் வெறும் கோரக்ஸ் தரலாம். [dxன் பலன், மலச்சிக்கல் ஏற்படாது.]
நன்றி பாரா சார். டாக்டரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு corex முயற்சிக்கிறோம்.