உதிரிப் பூக்கள் – 13 பிப் 2011


இன்று கேணி கூட்டத்தில் இபா கலந்து கொண்டார். ஞானி பேசுகையில் பார்த்தசாரதியிடம் நான் அதிசயிக்கும் விஷயம் இன்றும் அவர் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார் என்பதுதான் என்று சொன்னார். நிஜம்தான். டிவிட்டரிலும் இயங்குகிறாராம் இந்த இளைஞர். 🙂

பேசுகையில் அவர் நகுலன் என்ற துரைசாமி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ படிக்கையில் தன்னுடைய அறை நண்பராக சிறிது காலம் இருந்தவர் என்று சொன்னார். தொடர்ந்து அவர் சொன்ன விஷயங்களை வைத்துப் பார்க்கும் போது வேர்ப்பற்றில் வரும் கிருஷ்ணன் நகுலந்தான் என்று தோன்றுகிறது. அந்த நாவலை இப்போது மறுவாசிப்பு செய்யும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது இன்றைய மாலைப் பொழுது.

தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு வாசித்தவர் என்கிற வகையில் உங்களுக்கு ஏதேனும் பதில் கிடைக்காத கேள்விகள் மிச்சமுண்டா என்ற கேள்விக்கு சற்று விரிவான அழகான பதில் ஒன்றை தந்தார். சங்கம் மருவிய காலத்தில் வந்த நூலான திருக்குறளில் வரும் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்ற குறளுக்கு, காலத்தால் பிற்பட்டவரான பரிமேலழகர் உரையில் ‘தானாக அறியும் அறிவில்லாத தன்மையினள் பெண் என்பதால் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று சொல்கிறார்’ என்று பொருள் தரப்பட்டிருப்பதைச் சொன்ன இ.பா, சங்க காலத்திலேயே ஏகப்பட்ட பெண் கவிஞர்கள் இருந்திருக்கையில் நிச்சயம் வள்ளுவர் இப்படி ஒரு பொருளில் சொல்லியிருக்க வாய்ப்பேயில்லை. வள்ளுவருக்கே இந்த நிலை என்றால் அவரையும் விட முற்பட்ட தொல்காப்பியரை எல்லாம் அவர் சொன்ன பொருளில் தான் உரையாசிரியர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா, நாம் இன்று கொள்ளும் பொருள் எல்லாம் உண்மைதானா என்ற மயக்கம் தனக்கு உண்டு என்று சொன்னார். யோசித்துப் பார்க்கையில் நிஜம்தான் என்று தோன்றுகிறது.

இன்னும் நிறையப் பேசினார் என்றாலும் கூட வயோதிகத்தின் காரணமாய் தொடர்ச்சியின்றி அங்குமிங்குமாய் எல்லாத் திசைகளிலும் போய்க் கொண்டிருந்தது அவரது பேச்சு. எனவே என்னால் எல்லாவற்றையும் ஒருமிக்க நினைவு கூர்ந்து எழுத முடியவில்லை. விரைவில் கிருஷ்ணபிரபு போன்ற நண்பர்கள் யாராவது எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

அருகே அமர்ந்திருந்த பாரதி மணி எமெர்ஜென்சி குறித்த சம்பவங்களை இபாவுக்கு நினைவூட்டிய காட்சி சமீபத்தில் படித்த ஜெயமோகனின் அறம் கதையில் வரும் சாமினாதுவை நினைவூட்டியது. :))

******

வாரமலரில் வெளியான இரு கதைகளுக்கும் வந்த வாசகர் கடிதங்களை ஒரு நகலெடுத்து உடனடியாக அடுத்த வாரமே அனுப்பி வைத்து விட்டார்கள். ஆரம்ப நிலையிலிருக்கும் ஒரு ஊர் பெயர் தெரியாத எழுத்தாளருக்குக் கூட இது போன்ற விஷயங்களை சிரத்தையாய் செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  மற்ற பத்திரிக்கைகளின் நிலவரம் தெரியவில்லை. ஆனால் இது நல்ல அனுபவம். முதல் கதைக்கு கடிதங்களில் நிறைய பாராட்டுகளும் ஆன்லைனில் நிறைய திட்டுக்களும். இந்தக் கதைக்கு நேர் மாறாக கடிதங்களில் திட்டு, ஆன்லைனில் நிறையவே பாசிடிவ் கமெண்ட்ஸ். என்னமோ போடா மாதவா.. ஒன்னுமே புரியலை.

******

எங்கள் தெருவிலும் ஒரு ஃபிளாட் கட்ட வேலைகள் துவங்கி விட்டனர். பேஸ்மெண்ட் போட்டாயிற்று. அங்கேயே தங்கி வேலை செய்ய நிறைய ஆட்கள் வந்து விட்டார்கள். ஒரு நாள் உட்கார்ந்து முட்டி முட்டி உழைக்கு வர்க்கத்தைப் பற்றி ஒரு போஸ்ட் போட்டு விட வேண்டியதுதான்.

******

கீரனூர் ஜாகிர் ராஜாவின் மீன் குகை மனிதர்கள், விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள் இரண்டும் படித்தாயிற்று. விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் வலையேற்றிவிட வேண்டியதுதான். அநேகமாய் அடுத்த வாரம் ஒவ்வொன்றாய் போட முயல்கிறேன்.

******

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கேணி and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to உதிரிப் பூக்கள் – 13 பிப் 2011

 1. புருனோ says:

  //முதல் கதைக்கு கடிதங்களில் நிறைய பாராட்டுகளும் ஆன்லைனில் நிறைய திட்டுக்களும். இந்தக் கதைக்கு நேர் மாறாக கடிதங்களில் திட்டு, ஆன்லைனில் நிறையவே பாசிடிவ் கமெண்ட்ஸ். என்னமோ போடா மாதவா.. ஒன்னுமே புரியலை.
  //

  இது கூடவா புரியவில்லை

  இன்று இணையத்தில் இயங்கும் மக்களில் பெரும்பாலாணவர்கள் சமூகத்திலிருந்து (மனதளவில்) வெகு தொலைவில் உள்ளனர் என்பதை இந்த சம்பவங்கள் ஆழமாக நிருபிக்கின்றன

  இன்னமும் புரியவில்லை என்றால், தேர்தல் முடிவு வந்தபின்னர் தெளிவாக புரியலாம் 🙂 🙂

 2. Ajay says:

  மீன் குகை மனிதர்கள் எந்த பதிப்பகம்?

 3. /– ஒரு நாள் உட்கார்ந்து முட்டி முட்டி உழைக்கு வர்க்கத்தைப் பற்றி ஒரு போஸ்ட் போட்டு விட வேண்டியதுதான் –/

  உங்களுடைய முயற்சி சிறக்க வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு கதையாக எழுதவும் முயற்சி செய்யலாமே. 🙂

  இந்திரா கோஸ்வாமி எழுதிய ‘துருப்பிடித்த கரண்டி’ நாவல் சாகித்ய விருது பெற்றுள்ளது. ஓர் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் தொழிலாளர்கள் பற்றியது. ரொம்ப நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

 4. புருனோ – :))
  அஜய் – ஆழி பதிப்பகம்.
  கிருஷ்ண பிரபு – அது சில ரெடிமேட் டெம்ப்ளேட் கட்டுரைகளைப் பார்த்து வந்த எரிச்சலில் நக்கலடிப்பதற்காகச் சொன்னது. யார் வேணும்னாலும் யாரைப் பத்தி வேணும்னாலும் எழுதலாம். ஆனா அது ஆத்ம சுத்தியோட, அவங்க மேல இருக்கற அக்கறையால வரணும் – நம்ம மேல இருக்கற அரிதாரத்தை இன்னும் ஒரு இஞ்ச் உசத்திக்கரதுக்காக வரக் கூடாது, இல்லையா?

 5. ramji_yahoo says:

  எங்கள் தெருவிலும் ஒரு ஃபிளாட் கட்ட வேலைகள் துவங்கி விட்டனர். பேஸ்மெண்ட் போட்டாயிற்று.

  வண்ணதாசனின் வரிகள்

  ஆண்களின் சட்டை அணிந்த கட்டிடத் தொழிலாளிப் பெண்களுக்கும் சைக்கிள் தேநீர்க்காரருக்கும்
  நடக்கும் வெளிப்படையான உரையாடலை உறிஞ்சிய ஈரத்துடன்தான்
  எதிர்வீட்டுச் செங்கல் கட்டுமானம் வளர்கிறது

 6. ஒ.. சரி சரி…

  /– ஆத்ம சுத்தியோட, அவங்க மேல இருக்கற அக்கறையால வரணும் -//

  நிச்சயமா லக்ஷ்மி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s