கனிவமுதனை மாலையில் ஒரு சின்ன நடை அழைத்துப் போனேன். தெருவில் இரண்டொரு வீடுகள் தள்ளி ஒரு ஃப்ளாட் உண்டு. அதன் கீழ் தளத்தில் கனியின் வயதொத்த மூன்று குழந்தைகளும் உண்டு. அங்கே போனதும் தோழர்களைப் பார்த்த கனி சத்யாக்ரகம் செய்யவே அங்கே உள்ளே நுழைது குழந்தைகளை விளையாட விட்டு விட்டு பெரியவர்கள் நாங்கள் ஓரமாய் நின்று பேசிக் கொண்டும், இவர்களின் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொண்டும் நின்றோம். ஃப்ளாட்டின் மேல் தளத்திலிருந்து எட்டிப் பார்த்த ஒரு பெண் கனியை கூப்பிட்டாள். இரண்டு மூன்று முறை கூப்பிட்ட போதும் தலைவர் விளையாட்டு சுவாரசியத்தில் கவனிக்கவில்லை. கடுப்பான அவள் விறுவிறுவென கீழே இறங்கி வந்து இவனை பிடித்து தன் பக்கம் இழுத்து ஏண்டா கூப்பிட்டா கவனிக்க மாட்டியா என்றாள். அப்போதும் மற்ற குழந்தைகளோடு விளையாடும் மும்மரத்தில் கனி அவள் கையிலிருந்து திமிற அவள் சொன்னாள் “ஏண்டா உங்க பாட்டியோட கோவிலுக்கு வந்தப்ப என் பின்னாடியே சுத்தின, எவளோ பேசின என்கிட்ட, என்னை அடிப்பிரதட்சணம் பண்ண விடாம பாடா படுத்தி என் துப்பட்டாவ எல்லா பிடிச்சு இழுத்த இல்ல? இப்ப உன் சைஸ்ல ஆளுங்க கிடைச்சதும், யாருன்னே தெரியாத மாதிரி போற?” என்று பொங்கி தீர்த்து விட்டாள். அதற்குள் மேலிருந்து அவளை யாரோ அழைக்கவும், உன்ன அப்புறமா கவனிச்சுக்கறேன் என்ற ஒரு செல்ல மிரட்டலுடன் மேலே போனாள்.
இது மாதிரி வசனங்களை ஒரு இருபது வருடம் கழித்துதான் கனி கேட்க வைப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்ப்வவேவா…. விளங்கிரும். :))))
******
சமச்சீர் கல்வி பற்றிய குழப்படிகள் உண்மையிலேயே மனதை கொதிப்படைய வைக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகளின் கல்வி குறித்து ஒரு கொள்கை முடிவு எடுப்பதில் கூடவா இவர்களின் துக்ளக்தனத்தை காட்டித் தொலைக்க வேண்டும். கடவுளே… இந்த இரட்டைக் கழக ஆட்சி முறையிலிருந்து எங்களுக்கு விடிவே இல்லயா? (ஏன் கேப்டன் இல்லியான்னு கேட்டு யாரும் வந்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம் ப்ளீஸ் 🙂 )
*********
ஜான் ஹோல்ட் எழுதி அப்பணசாமி தமிழில் மொழி பெயர்த்த எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றேன். முடித்ததும் என் பார்வையைப் பகிர்கிறேன். குழந்தைகளின் கல்வி குறித்த குறிப்பாய் மாண்டிசோரி முறையைப் பற்றி மேலும் படிக்க எண்ணம். வேலையிலிருந்து ஒரு ப்ரேக் எடுக்கும் எண்ணமும், அப்படி கிடைக்கும் நேரத்தை மாண்டிசோரி முறையை கற்றுக் கொள்ளவும் ஆசை. பார்ப்போம் எவ்வளவு தூரம் முடிகிறது என்று.
******
🙂 lAKSHMI PLEASE DO TAKE THE mONTESSORI TRAINING. ITS WONDERFUL TO GO INTO CHILDRENS’ WORLD.
WAY TO KANI:) ENJOY.
பையன் தேறிட்டான். ஜாக்கிரதை:-))))))))))))))))))
கனியின் கேர்ல்ஃபிரண்ட் நல்ல சஸ்பென்ஸ்!!! ரசித்தேன்.