உதிரிப்பூக்கள் – 10, செப் 2012


நேற்று டிவியில் குழந்தைகளுக்கான நாட்டிய போட்டி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். மனதில் பட்ட சில விஷயங்கள் இங்கே.
1. குழந்தைகளின் பெயர்கள் – அக்ஷயா, நிவாஷிகா, தேஜஸ்வினி, ரேஷ்மா.
2. ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே வயதுக்குகந்த வளர்ச்சியோடிருந்தாள். இரண்டு பெண்கள் எதிரில் நிற்பவர் ஊதினாலே ஒடிந்து விழுந்து விடுவார்களோ என்று பயப்படும்படி இருந்தார்கள். மற்றொரு பெண்ணோ ஒபிசிட்டியின் எல்லையில் இருந்தாள்.
3. மதிப்பெண்கள் அறிவிக்கப்படும் நேரம் குழந்தைகளின் முகத்தில் தெரிந்த கரைகாணா பயம் பார்க்க மனம் பொறுக்கவில்லை. எவ்வளவு டென்ஷன் ஏற்றப்பட்டிருக்கும் என்பது புரிந்தது.
4. நடுவர்களில் ஒருவரான வெண்ணிற ஆடை நிர்மலா பேசும் நேரம் தவிர்த்து மற்ற நேரத்திலெல்லாம் தூக்கத்தில் சொக்கியவர் போன்றே காணப்பட்டார். என்ன தள்ளாமையோ பாவம். அவரை டைட்டிலின் போது முழு பரதநாட்டிய அலங்காரத்தில் ஆடவைத்த இயக்குனரை முதியோர் வதை சட்டத்தில் தண்டிக்க இடம் உண்டா என்று பார்க்க வேண்டும்.
5. தியரி ரவுண்ட் ஒன்று உண்டு. கேட்ட கேள்விகளையெல்லாம் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த பிறகே பதிலளித்தார்கள்.
6. ஆட்ட சுவாரசியத்தில் ஒரு குழந்தையின் காலில் இருந்து சலங்கை பறந்து விழுந்தது. இனி அடுத்த நிகழ்ச்சியிலிருந்து காலில் ரத்த ஓட்டம் நின்று விடுமளவு சலங்கையை கட்டித் தொலைக்காமலிருக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது.
உண்மையில் ரியாலிட்டி ஷோக்கள் திறமையை வெளிக்காட்ட நல்ல வாய்ப்பு என்றாலும் என்னமோ இளக்கமே இல்லாது நடப்பது போல ஒரு உணர்வு.
********
இந்திரா கோஸ்வாமி எழுதிய தென் காமரூபத்தின் கதை படித்து முடித்தேன். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் கடைசியில் ஆரம்பித்து சுதந்திரம் பெற்று கொஞ்ச காலம் வரை நடக்கும் கதை. நம் ஊரிலாவது நிலபிரபுக்களும், மதத் தலைமையும் வேறு வேறாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அங்கோ ஜமீந்தார்கள் + மடாதிபதிகள் மாதிரியான சத்திரா என்கிற அமைப்பு புழக்கத்திலிருந்திருக்கிறது. சத்திராவின் தலைவரை கொஸைன் அல்லது அதிகார் என்று அழைக்கிறார்கள். விதவைகளின் கொடும் கைம்மை நோன்பு, வங்காளிகளைப் போலவே மிகத் தீவிரமாக அசைவம் சாப்பிடும் பிராமணர்கள், மெல்ல முளைவிடும் கம்யூனிசமும், நில உச்சவரம்பு சட்டமும் கொசைன்களுக்கு ஏற்படுத்தும் மன அழுத்தங்கள் என மிகவும் வித்தியாசமான கதைக் களம். நல்ல அனுபவம்.

***********

கனி முன்னெல்லாம் குக்கர் சத்தம் கேட்டால் பயந்து அலறுவான். இப்போதெல்லாம் மெல்ல அதை தாங்கிக் கொள்ள பழகி விட்டான். ஆனாலும் தலைவருக்கு உள்ளுக்குள் உதறல்தான். இப்போ குக்கர் விசிலடிக்க ஆரம்பித்தால் என்னை தர தரவென சமையற்கட்டிலிருந்து இழுத்து வந்து ஹால் சேரில் உட்கார்த்தி விட்டு, தான் போய் கிச்சன் வாசலில் இருந்து தலையை மட்டும் நீட்டி நீட்டிப் பார்த்து விட்டு வருகிறான். சத்தம் போடும் குக்கரிலிருந்து என்னை பாதுகாக்கிறாராம். :))))

 

 

 

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், குழந்தை வளர்ப்பு and tagged , . Bookmark the permalink.

2 Responses to உதிரிப்பூக்கள் – 10, செப் 2012

  1. agila says:

    reality showsதிறமையை வெளிப்படுத்துற மாதிரி தெரியலைங்க.. It adds more pressure to the kids. :-((எனக்கு பார்க்கும் போதெல்லாம் பரிதாபமா இருக்கும். இப்போக் கூட அந்த பையன் கெளதம் பாட்டை ஆஹா ஓஹோன்னு சொன்ன போது, நான் அவங்க அப்பா பேசினதை தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன். 😦
    கனி :-DDDD

  2. umaprabhu523 says:

    Lakshmi you r blessed to have a child like him, who saves u from danger [cooker whistle]so sweet, its interesting to study about his acitivities…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s