கார்த்திகை தீபம்


முன்பெல்லாம் கடைல நெல் பொறி விக்க மாட்டாங்க. எனவே நாமதான் நெல் கொண்டு போகணும். அவங்க அடுப்புல பொறிச்சு மட்டும் கொடுப்பாங்க. எங்கப்பா காலத்துலயே வேலைக்குப் போக ஆரம்பிச்சவங்கல்லாம் முதலில் பூர்வீக நிலங்களை குத்தகைக்கு கொடுத்தாங்க. பிறகு மெல்ல மெல்ல வித்துட ஆரம்பிச்சாங்க. கல்யாணம், காது குத்துன்னு எந்த பெரிய செலவுக்கும் முதல் பலி நிலங்கள்தான். விவசாயத்துல லாபம் ஒன்னும் பெருசா இல்லைங்கறதால தினப்படி நிலம் இல்லைன்றது பெருசா தெரியாது. ஆனா இந்த மாதிரி பண்டிகை நாட்கள் வரும்போது அந்த முன்னாள் நில உடைமையாளர்களோட வலி ரொம்ப வெளிப்படையா தெரியும். அப்பா ஒரு பெரிய கூடையில் நெல்லும், முற்றத்து மூலைல தேங்காய்களையும் போட்டு வச்சுருவார். சாப்பாட்டுக் கடை முடிஞ்சதும் ஒவ்வொரு வீட்டுப் பெண்களா வந்து ஒரு படி நெல்லும், நாலைஞ்சு தேங்காய்களும் வாங்கிட்டு நேரா கடைத்தெருவுக்குப் போய் பொறிச்சு எடுத்துட்டு, அப்படியே ஒரு படியோ அரைப்படியோ அவல் பொறியும் வாங்கிட்டு வீட்டுக்குப் போய் அடுப்பு பத்த வைப்பாங்க.

பரண் மேலிருக்கும் வெண்கல விளக்குகள், பெட்டியில் இருந்து வெள்ளி விளக்குகள் எல்லாம் வெளிய வரும். வெண்கல விளக்குகளுக்கு புளி, வெள்ளி விளக்குகளுக்கு விபூதின்னு பாலீஷ் ஏறும். பழைய மண் அகல்கள், சாஸ்திரத்துக்கு வாங்கின புது அகல்கள்(தண்ணீல ஊறப்போட்டு காய வச்சு எடுத்து வச்சிருப்போம்) எல்லாத்தையும் துடைச்சு சந்தன குங்குமம் வச்சு ரெடி பண்ணுவோம்.

பொறி, அப்பம், அடைன்னு பலகாரங்கள் ரெடியானதும் விளக்குகளை ஏத்துவோம். நாச்சியார் கோவில் யானை விளக்குகள் ரொம்ப விசேஷம். பெண்கள் தங்களோட சகோதரன் நலத்துக்காக வேண்டிகிட்டு அந்த யானை விளக்குகளை ஏத்தணும்னு சொல்வாங்க. அதுக்காக சகோதரர்கள் சீர் கொடுக்கணும்.

கோலம் போட்டு செம்மணிட்ட வாசல் தரைல முதலில் குத்து விளக்குகள். அகல் விளக்குகள் வரிசையா படியிலும், திண்ணையிலும். வீட்டின் எல்லா அறையிலும் குறைஞ்சது ஒரு விளக்காவது இருக்கணும்னு சாஸ்திரம். மேலும் எல்லா மின் விளக்குகளையும் போட்டு வீடே ஜொலிக்கும். எல்லாம் முடிஞ்சப்புறம் பலகாரங்களை ஒரு கை பார்க்க ஆரம்பிப்போம். நடுவில் காற்றில் அணையும் விளக்குகளை ஏத்த, திரி தூண்ட, எண்ணெய் தீர்ந்த விளக்குகளுக்கு எண்ணெய் ஊத்தன்னு பரபரப்பா இருக்கும். பாட்டி ஒரு ஓரமா உக்காந்துகிட்டு பாவாடைய பத்திரமா புடிச்சுக்கோ, தாவணிய தூக்கி சொருகுன்னு டென்ஷனா குரல் கொடுத்துகிட்டே இருப்பாங்க.

நடுத்தெருவுல போய் நின்னுகிட்டு யார் வீட்டு வரிசை அழகா இருக்குன்னு பாப்போம். கோவிலில் சொக்கபனை கொளுத்துவாங்க. முடிஞ்சா அங்கயும் போவோம். அதுக்குள்ள பெரிய வெண்கல விளக்குகளையெல்லாம் அம்மா ஏற்கனவே எடுத்து சாமியிடத்தில் வச்சிருப்பாங்க. மிச்சமிருக்கும் அகல்களை கலெக்ட் செய்யும் வேலை எனக்கு. முடிச்சா ராத்திரி டிபனுக்கு சுடச் சுட அடை + மிளகாய்ப் பொடி + தயிர்.

மறுநாள் சின்ன கார்த்திகை அல்லது குப்பை கார்த்திகைன்னு சொல்வாங்க. முதல் நாள் அளவுக்கு இல்லைன்னாலும் கொஞ்சமாவது விளக்குகள் ஏத்தணும். குறிப்பா கொல்லையிலிருக்கும் எருக்குழி/குப்பைக் குழி பக்கத்துல ரெண்டொரு அகலாவது வைக்கணும்பாங்க. மாதம் முழுவதுமே மாலை வீட்டின் இரு பக்க திண்ணையிலுமிருக்கும் மாடப்பிறைகளில் இரண்டு அகல்கள்  கட்டாயம் உண்டு. மார்கழி மாதங்களில் காலையில் அதே பிறையில் விளக்கு வைப்போம்.

பெரும்பாலான வருடங்கள் மலைசார்ந்த ஊர்களுக்கு மட்டுமே திருவண்ணாமலை தீபத்தன்னிக்கே கார்த்திகை வரும்.மற்ற ஊர்களுக்கு மறுநாள் சர்வாலய தீபம்னு சொல்வாங்க அன்னிக்குத்தான் கார்த்திகை. இந்த வருஷம் எங்க ஊர்ல இன்னிக்குத்தான் கார்த்திகை. அப்பா போன் செஞ்சிருந்தார். அதான் ஒரே கொசுவத்தி சுத்தல். :)))

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், மலரும் நினைவுகள், Uncategorized and tagged , , . Bookmark the permalink.

4 Responses to கார்த்திகை தீபம்

 1. சுத்தல் நல்லாவே இருக்கு படிக்க.
  நெல்லின் பின்னே இத்தனை உண்டா? தெரியாம போச்சே.
  கார்த்திகைனாலே எங்களுக்கெல்லாம் வேலை.. பரண்லே ஏறி விளக்கையெல்லாம் எடுத்து வைக்கணும், முடிஞ்சப்பிறகு காகிதம் சுத்தி மறுபடி ஏத்தி வைக்கணும்.. பொறியெல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்காதா.. சலிச்சுக்கிட்டே செய்வேன்.
  எல்லாம் படிச்சாலும் அடை+மிளகாய்ப்பொடி+தயிர்ல சுத்திட்டிருக்கு மனம்.

 2. என்ன இருந்தாலும் அந்தக்காலம் போல் இல்லை…

 3. வணக்கம் அம்மா…

  இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன்…

  நேரம் இருக்கும் போது சென்று பாருங்கள்…

  அதற்கான இணைப்பு கீழே…

  http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_4.html

  நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s