முன் குறிப்பு: வார இறுதியில் என் சோதனை முயற்சியைப் பற்றி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட போது எழுத்தாளினி ஏகாம்பரி வந்து இப்படி மொட்டையா சொல்லக் கூடாது. நிஜமாவே செஞ்சு பாத்தீங்கன்றதுக்கு ஆதாரமா ரெசிப்பியும் படங்களும் போடணும்னு மிரட்டினாங்க. அதுனால இந்தப் பதிவு. அத்தோட என் பதிவுகளில் சமையல் குறிப்புன்ற லேபிளைத் தாங்கி ஒரு பதிவு கூட இல்லைன்ற இழுக்கையும் துடைக்கவே இந்த முயற்சி. :)))
திணை அடை
*************
தேவையான பொருட்கள்:
திணை அரிசி – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
உளுத்தம்பருப்பு – 3/4 கப்
ப. மிளகாய், மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு – எல்லாம் வழக்கமான அடைக்குப் போடும் அதே அளவு
திணை அரிசி, பருப்புகள் எல்லாவற்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அரிசியைத் தனியாகவும், இரண்டு பருப்புகளையும் கலந்தும் அரைக்க வேண்டும். அரிசி அரைக்கும் போது மிளகாய் சமாச்சாரங்களையும் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். நான் எப்போதும் மாவோடு சேர்த்தே கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை இரண்டையும் அரைத்து விடுவது வழக்கம். பிறகு பருப்புகளை மைய்ய அரைத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மாவைக் கலந்து வைத்து விடலாம். ஒரு அரை மணி நேரமாவது மாவை அப்படியே வைத்திருந்தால் அடை நன்றாக வரும். வெங்காயம், சுரைக்காய், முட்டை கோஸ் என மேலதிக சமாச்சாரங்கள் அவரவர் விருப்பம் போலக் கலந்துகொண்டு அடையை வார்க்க ஆரம்பிக்கலாம். மாவை கெட்டியாக அரைத்து கையில் எடுத்து கல்லில் தட்டுவது ஒரு விதம். கொஞ்சம் நீர்க்கக் கரைத்துக் கொண்டு தோசை போலவே வார்ப்பது ஒரு விதம். அவரவர் வழக்கப்படி அடையை தட்டவோ வார்க்கவோ செய்யலாம்.
பின் குறிப்பு 1: ரெகுலர் அடை அளவுக்கு மொறு மொறுப்பு இருக்காதே தவிர்த்து ருசியில் எந்தக் குறையும் இருக்காது என்பதற்கு நான் கியாரண்டி.
*************
திணை தோசை:
திணை அரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
வெந்தயம் – 1 ஸ்பூன்
இவை எல்லாவற்றையும் தனித் தனியாக மூன்று மணி நேரமாவது ஊற வைக்கவும். தோசைக்கு மாவு அரைப்பது போலவே அரைத்து, உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 4 மணி நேரமாவது மாவு புளிக்க வேண்டும். பிறகென்ன, தோசையம்மா தோசை என்று பாட்டுப் பாடிக் கொண்டே வார்த்து தட்டில் போட வேண்டியதுதான்.
பின் குறிப்பு 2: இங்கேயும் அதே கதைதான் – சாதாரண தோசை அளவுக்கு மொறு மொறுப்பு கிடைக்காது என்பது தவிர வேறு குறையொன்றுமில்லை. அப்படியும் தட்டில் போடும் போது கொஞ்சம் முகம் மாறத்தான் செய்யும். நீங்கள் சிறு தானியங்களின் நன்மைகள் என்ற தலைப்பில் ஒரு அரை மணி நேர லெக்சர் கொடுக்கத் தயார் நிலையில் இருப்பதை லேசுபாசாக உணர்த்திவிட்டால் எதிராளி சாப்பிடுவதற்குத் தவிர வேறு எதற்கும் வாயைத் திறக்கவே மாட்டார். :)))
திணை அடை/தோசையைப் போலவே, நீங்கள் கொடுத்துள்ள ‘அரை மணி நேர லெக்சர்’ ஐடியாவும் சூப்பரா இருக்குங்க.
உங்க லெக்சரிலே தோசையை சாப்பிட கூட மறந்து போயிட்டேன்.
என்னை போன்ற கிழடுகள் தைரியமா சாப்பிடலாமா?
சரவண பவனில் கிடைக்குமா ?
எண்ணைக்கு பதில் நெய் ஊற்றி வாரிக்கலாமா?
கொத்துமல்லி சட்னி, தேங்காய் சட்னி, புதின துகையல், வெங்காய சட்னி இவைகளில் எது சைட் டிஷ் நன்றாக இருக்கும் ?
மேல் விவரங்களை உடன் அளிக்கவும்.
இப்பவே …பசி உயிர் போகிரது.
சுப்பு தாத்தா.
http://www.subbuthatha.blogspot.com
http://www.subbuthatha72.blogspot.com
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_15.html) சென்று பார்க்கவும்… நன்றி…
நீங்கள் சிறு தானியங்களின் நன்மைகள் என்ற தலைப்பில் ஒரு அரை மணி நேர லெக்சர் கொடுக்கத் தயார் நிலையில் இருப்பதை லேசுபாசாக உணர்த்திவிட்டால் எதிராளி சாப்பிடுவதற்குத் தவிர வேறு எதற்கும் வாயைத் திறக்கவே மாட்டார். :)))
நல்ல் ஐடியா தான் ..1 பாராட்டுக்கள்..
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_15.html
unngal thinai adai pacchai colorli irrukku. aana thinai maavu sandana colorli irrukku. Eppadi pacchai color vandathu?