Monthly Archives: May 2019

கனி அப்டேட்ஸ் – 9

2018 July கனியோட பள்ளிய அடுத்து எல்லாமே அரசு அலுவலகங்கள்தான். ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி அலுவலகம், அம்மா உணவகம், இ-சேவை மையம்னு எல்லாமே அந்த ஏரியாக்குள்ளதான். அதுனால எந்தத் துறைல என்ன விஷயம் நடந்தாலும் ஏரியாவ கூட்டி, ப்ளீச்சிங்க் பவுடர மூங்கில் கூடைல ரொப்பி, அத அச்சாக உபயோகிச்சு அங்கங்க கோலம் போட்டு வச்சிருவாங்க. … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு, Uncategorized | Tagged | 2 Comments

கனி அப்டேட்ஸ் – 8

2016 july கனியோட இசையார்வம் எங்க வீட்டை படுத்தும் பாடு சொல்லி மாளாது. அதே நேரம் அவனை ஒழுங்காக ஒரு வரையரைக்குட்பட்டு சாதகமெல்லாம் பண்ண வைக்க முடியாது. சித்தம் போக்கு சிவன் போக்குதான். தோணும் போதெல்லாம் பாடுவான், ஹம் பண்ணுவான். வேணாம்னா பேசாம இருப்பான். திடீர்னு நாலு வரிக்கப்புறம் வர அஞ்சாவது வரிய சத்தமா பாடுவான். … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு, Uncategorized | Tagged | 2 Comments

கனி அப்டேட்ஸ் – 7

2015, December கனிக்கு பரதத்துக்கான ஜதிகள் விரவிய பாடல்களென்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் அவனது பிரியத்துக்குரிய பாடல்கள் பட்டியலில் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாடல் என்றும் முதலிடத்தில் இருக்கும். ஜதி உட்பட மொத்த பாடலையும் பாடுவதும், நடுநடுவில் ஆடுவதும் அவ்வப்போது நடக்கும். ஒருமுறை அவன் பாடும் போது “பாவை என் பதம் காண நாணமா, … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு, Uncategorized | 1 Comment

ராஜாராம் மோகன் ராய்

”ஒரே கடவுள்தான், உருவ வழிபாடு கூடாது” – ஹீரோ ”வீட்ட விட்டு வெளில போடா நாயே..” – ஹீரோ ஃபேமிலி ”ஆஹா, என் இனமடா நீ… எங்க மதத்துக்கு வந்துரு ராசா” – பாதிரியார்கள் ”பலவீனமான என் மதத்தை விட்டு, இன்னொரு பலவீனமான உங்க மதத்துக்கு நான் ஏன் வரணும்” – ஹீரோ ”ஆஹா, மதவெறியண்டா … Continue reading

Posted in அரசியல், கட்டுரை, கல்வி, பெண்ணியம் | Tagged , , , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 6

2015 December 6 மு.கு : சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளத்திற்கு பிந்தைய பதிவு இது. இந்த திடீர் அதிர்ச்சியின் பின்னர் அவனது பேச்சும் பாட்டும் பெருமளவு குறைந்ததும், கிட்டத்தட்ட ஒரு வருடம் போல கடும் முயற்சியால் அவற்றை மீட்டதும் தனிக் கதை. ******* கடந்த ஐந்து நாட்களாக குடிதண்ணீர், புழங்கத் தேவையான நீர், பால், … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 5

2015 – July எங்கள் மூவரில் காலையில் மிகவும் தாமதமாக எழுவது எப்போதும் கனியாகத்தான் இருக்கும். குளிரூட்டியை நாங்களே அணைத்துவிடுவோம். மின்விசிறியை அணைப்பதற்காக ஒரு முறை மாடி ஏறி இறங்க முடியாது என்பதால் அவன் இறங்கி வருகையில் மின் விசிறியை அணைத்துவிட்டு வரும்படி பழக்கியிருந்தோம். எப்போதும் சரியாக செய்பவன் நேற்று ஏனோ மறந்துவிட்டான் போல. சற்று … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 4

2014 – May மோகமுள்ளில் வரும் ரங்கண்ணா சொம்பு அண்டாவில் இடிக்கும் ஓசைக்கும், துணி துவைக்கும் ஓசைக்கும் கூட என்ன ஸ்வரம் என்று பாபுவிடம் கேட்பார். அது போல ஆரம்பத்தில் இந்தப் பொடியன் வீட்டில் இருக்கும் அத்தனை வகை பொருட்கள் மேலும் தட்டி கொட்டி சத்தங்களை வகை பிரித்துக் கொண்டிருக்கிறான். காலையில் எழுந்து வந்த அரைமணிக்குள் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged | 1 Comment