கனி அப்டேட்ஸ் – 4


2014 – May

மோகமுள்ளில் வரும் ரங்கண்ணா சொம்பு அண்டாவில் இடிக்கும் ஓசைக்கும், துணி துவைக்கும் ஓசைக்கும் கூட என்ன ஸ்வரம் என்று பாபுவிடம் கேட்பார். அது போல ஆரம்பத்தில் இந்தப் பொடியன் வீட்டில் இருக்கும் அத்தனை வகை பொருட்கள் மேலும் தட்டி கொட்டி சத்தங்களை வகை பிரித்துக் கொண்டிருக்கிறான். காலையில் எழுந்து வந்த அரைமணிக்குள் இவன் பரத்தி வைத்திருக்கும் வரிசை இது.  எனக்கு புகைப்படக் கலை கை வராத கலை என்பதால் மிருதங்கத்திற்கு இந்தப் பக்கமிருக்கும் இன்னும் சில கிண்ணங்களும், கீ போர்டும் சட்டகத்திற்குள் வரவில்லை.

இத்தனையையும் இறக்கி அடுக்கிவிட்டு சில சமயம் இது எதையும் சீண்டாமல் வேறெதையாவது வைத்துக் கொண்டு விளையாடுவதும் உண்டு.  இவற்றிலிருந்து அவன் கவனம் திரும்பியதும் சரியான நேரம் பார்த்து பதவிசாக ஏறக்கட்ட வேண்டும்.  அந்தக் கணத்தை சரியாக கணிக்காமல் அவன் நினைப்பதற்கு முன் இதில் ஒரு துரும்பை அசைத்து விட்டாலும் தொலைந்தோம், மணிக்கணக்கில் குமுறிக் குமுறி அழுவான்.

குழந்தைகளிருக்கும் எல்லா வீட்டிலும் விளையாட்டு சாமான்கள் இருக்கும்தான். ஆனால் வீட்டிலிருக்கும் சாமான்கள் எல்லாமே தனக்கான விளையாட்டு சாமான்கள்தான் என்று நினைக்கும் இவனை எப்படி சமாளிப்பது என்றே புரியவில்லை.  🙂

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு and tagged . Bookmark the permalink.

1 Response to கனி அப்டேட்ஸ் – 4

  1. Revathi Narasimhan says:

    இருந்துட்டுப் போகட்டுமே லக்ஷ்மி மா. குழந்தையின் பர்மனெண்ட் கொலு.
    இங்கே ஒண்ணு இருக்கு, படிக்கிற புஸ்தகத்தை நகர்த்தி வைத்தால் கூட போர் புரிய.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s