கனி அப்டேட்ஸ் – 7


2015, December

கனிக்கு பரதத்துக்கான ஜதிகள் விரவிய பாடல்களென்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் அவனது பிரியத்துக்குரிய பாடல்கள் பட்டியலில் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாடல் என்றும் முதலிடத்தில் இருக்கும்.

ஜதி உட்பட மொத்த பாடலையும் பாடுவதும், நடுநடுவில் ஆடுவதும் அவ்வப்போது நடக்கும். ஒருமுறை அவன் பாடும் போது “பாவை என் பதம் காண நாணமா, உன் பாட்டுக்கு நான் ஆட வேணாமா” என்று பாடுவதைக் கேட்டேன். தமிழாகட்டும், ஆங்கிலமாகட்டும் அவனுக்கு வார்த்தைகளில் உச்சரிப்புப் பிழை என்பது அறவே கிடையாது. அப்படி தப்பாக உச்சரிக்கும் பட்சத்தில் அதை தவறாக காதில் வாங்கியிருக்கிறான் என்றே பொருள். கூப்பிட்டு திருத்தினால் உடனடியாக சரி செய்து கொள்வான்.

எனவே அவனைக் கூப்பிட்டு அது வேணாமா இல்லடா செல்லம், வேண்டாமா என்று சொல்லி, முழு வரியையும் பாடியும் காட்டினேன். நக்கலாக சிரித்துவிட்டு நகர்ந்து விட்டான். நக்கல் சிரிப்பு நான் பாடியதற்காகவிருக்கும் என்று நான் நினைத்திருக்க மீண்டும் அந்தப் பாடலைப் பாடும் போதும் பழையபடி வேணாமே என்றே பாடினான். நானும் விக்ரமாதித்தன் போல் சற்றும் மனந்தளராது திருத்தியபடி இருந்தேன்.

நேற்றுதான் திடீரென ஒரு விஷயம் உரைத்தது. தலைவர் புரியாமல் ஒன்றும் மாற்றிப் பாடவில்லை, முதல் வரியில் வரும் நாணமாவுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதாலேயே வேண்டாமாவை வேணாமா ஆக்கியிருக்கிறான் என்று. வாத்தியார் பேரனில்லயா, அதான் திருத்தறான்னு பாலா எங்கப்பாவை வம்பிழுத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கனி அப்டேட்ஸ் – 7

  1. Revathi Narasimhan says:

    கனிக் கண்ணனுக்குத் தனி அகராதி தான் போடணும்.
    நம்ம கட்டுக்குள் வரமாட்டான். அதீத புத்திசாலி.

    குட்டிக் கனி படம் எவ்வளவு அழகு மா.அன்பு ஆசிகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s