கனி அப்டேட்ஸ் – 8


2016 july

கனியோட இசையார்வம் எங்க வீட்டை படுத்தும் பாடு சொல்லி மாளாது. அதே நேரம் அவனை ஒழுங்காக ஒரு வரையரைக்குட்பட்டு சாதகமெல்லாம் பண்ண வைக்க முடியாது. சித்தம் போக்கு சிவன் போக்குதான். தோணும் போதெல்லாம் பாடுவான், ஹம் பண்ணுவான். வேணாம்னா பேசாம இருப்பான். திடீர்னு நாலு வரிக்கப்புறம் வர அஞ்சாவது வரிய சத்தமா பாடுவான். மீதி நாலு வரியும் மண்டைக்குள்ள ஒட்டிட்டிருந்திருக்குன்னு நாமா யூகிச்சுக்கணும். நினைச்சாப்பல திடீர்னு பாட்டு வரிகளை ஒப்பிக்கறா மாதிரி சொல்லுவான். மொத்தத்துல ரஜினி தும்மலுக்கு விளக்கம் சொல்வாரே(முத்து படம்னு நினைக்கறேன்), அது போல வந்தாலும் ஏன் வருதுன்னு கேக்க முடியாது, போனாலும் ஏன் போகுதுன்னு கேக்க முடியாது.

குடும்பத்துல இருக்கற மூணு பேரும் ஒத்துமையா ஆளுக்கொரு மூலைல உக்காந்து மொபைல நோண்டிட்டிருந்த போது திடீர்னு இந்தப் பய சத்தமாக தள்ளிவிட்டேன் ரேவதிய என்றான். நான் ஆடிப் போனேன். ஐயய்யோ, ஸ்கூல்லேர்ந்து எதோ வம்ப விலைக்கு வாங்கி வந்திருக்கான் போலிருக்கே, மதியம் கூப்பிட போயிருந்தப்பக் கூட ஒருத்தரும் ஒன்னும் சொல்லலியேன்னெல்லாம் குழம்பிகிட்டிருந்தேன்.

இத மட்டும் சொல்லிட்டு நெருப்புக் கோழி போல தலைய திரும்ப மொபைலுக்குள்ள விட்டாச்சு. எப்படி பக்குவமாக இவனிடம் விசாரிப்பது என்று நான் ப்ளான் போட்டுக் கொண்டிருந்த ஒரிரு நிமிட கேப்பில் “இவ பாத்ததுமே ஆயிபுட்டேன் சீக்கா” என்றதும்தான் புரிந்தது, அண்ணாத்தே மனதுக்குள் டங்காமாரி பாட்டு ஒடிக்கொண்டிருப்பது.

சில வினாடி நேர இடைவெளிக்குள் பெத்த வயத்துல புளிய கரைக்கறதுல பெரிய கில்லாடியா இருக்கானே, தாயைக் குடல் விளக்கம் செய்யும் தாமோதரன்னா இதான் அர்த்தமோ?

2016 Aug

சின்ன வயதில் திருவிழா என்றால் பொதுவாக தோடு, வளையல், பாசி,ஊசி என்று நக்கிரி பிக்கிரி வாங்குவது வழக்கம். ஆனால் திருவிழாவில் எதையும் தொலைத்ததோ, தொலைந்து போனதோ இதுவரை இல்லை என்ற என் ரெக்கார்ட் இன்று உடைந்தது 😦

கனிக்கு இன்று இசை வகுப்பு உண்டு. பள்ளியிலிருந்து வந்தவனை அவசர அவசரமாகக் கிளப்பிக் கூட்டிக் கொண்டு ஒலா ஆட்டோ புக் செய்து மைலாப்பூரை நோக்கி கிளம்பினேன். மடிப்பாக்கத்திலிருந்து நந்தனத்திற்கு இருபது நிமிடங்களில் சென்றுவிட முடிந்த எங்களால் நந்தனத்திலிருந்து ஆர்.ஏ.புரத்திற்குச் செல்ல அரைமணிக்கும் மேல் ஆனது.

பெசண்ட்நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கொடியேற்றுவிழா என்று போக்குவரத்தை சகட்டு மேனிக்கு முறுக்குப் சுற்றுவது போல் திருப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள். அது போதாதென்று வாகன ஓட்டிகளோ எதிர்ப்புறமிருந்து வண்டியே வராது என்ற நினைவில் வரிசையை கலைத்துக் கொண்டு அதீத புத்திசாலிகளாய் மேலேறிப் போய் முறுக்கை இடியாப்பமாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

இசை வகுப்பை இழக்கிறோம் என்ற எரிச்சலும், காரணமற்று காத்திருக்க நேர்வதின் கோபமுமாக கனி என்னைப் பிடித்து உலுக்கத் துவங்கினான். அடிக்கடி வரும் அதே ஆட்டோ டிரைவர் என்பதால் அவருக்கு என் நிலை புரிந்தது. அவரும் என்னென்னவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். ஐந்து நிமிடம் சமாதானமாய் இருப்பான், பிறகு பத்து நிமிடம் உலுக்கல் தொடரும். இப்படியாக ஒவ்வொரு சிக்னலுக்கும் 15 நிமிடங்கள் செலவழித்து திருப்பதி தரிசனக் கூண்டுகளை கடப்பது போல் கடந்து ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்தோம். எங்க ஏரியா டிரைவர் என்பதாலும், எப்படியும் பதினைந்து நிமிடத்தில் வகுப்பு முடிந்துவிடும் என்பதாலும் டிரைவரை காத்திருங்கள், உங்கள் வண்டியிலேயே திரும்பி விடுகிறேன் என்று சொல்லிவிட்டு படியேறினேன்.

மேலே போய் அவனை வகுப்புக்குள் அனுப்புவதற்குள் காத்திருந்த இன்னொரு குழந்தையின் தாய் லக்ஷ்மி, என்ன ஒரு தோடு மட்டுந்தான் இருக்கு என்று பதறினார். போன வழி, வந்த வழி எல்லாம் அங்குலம் அங்குலமாகத் தேடியும் ஆட்டோவில் என் தோட்டின் திருகு மட்டுமே கிடைத்தது. கிளீன் பண்ணும் போது எங்காவது ஒட்டியிருந்து கிடைத்தால் போன் பண்ணுங்க அண்ணா என்று சொல்லி வைத்திருக்கிறேன். இப்படியாகத் ஒன்னரைத் தோடோடு வீடு வந்து சேர்ந்தேன்.

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு, Uncategorized and tagged . Bookmark the permalink.

2 Responses to கனி அப்டேட்ஸ் – 8

  1. Revathi Narasimhan says:

    ஹாஹ்ஹா. லக்ஷ்மி. கனி குடல் விளக்கம் எலும்பு விளக்கம்
    எல்லாம் செய்துட்டான்.
    டங்காமாரியா. அப்படி ஒரு பாட்டா.
    செல்லக் கண்ணன். எப்படி எல்லாம் மனப்பாடம் செய்திருக்கான் பார்.
    லக்ஷ்மியின் ஒரிஜினல் நகைச்சுவை ஜரிகையில் கனி மின்னுகிறான்.
    தோடு கிடைச்சதோம்மா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s