கனி அப்டேட்ஸ் – 9


2018 July

கனியோட பள்ளிய அடுத்து எல்லாமே அரசு அலுவலகங்கள்தான். ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி அலுவலகம், அம்மா உணவகம், இ-சேவை மையம்னு எல்லாமே அந்த ஏரியாக்குள்ளதான். அதுனால எந்தத் துறைல என்ன விஷயம் நடந்தாலும் ஏரியாவ கூட்டி, ப்ளீச்சிங்க் பவுடர மூங்கில் கூடைல ரொப்பி, அத அச்சாக உபயோகிச்சு அங்கங்க கோலம் போட்டு வச்சிருவாங்க. அதுனாலல்லாம் எதோ சுத்தமாகிரும்னு நினைச்சுடாதீங்க – எவ்ளோ பவுடர் போட்டாலும் ஏரியாவில் யூரியா மணமே பிரதானமா இருக்கும். நம்மாட்களோட டிசைன் அப்படி. நம்ம புள்ளங்க படிக்கற பள்ளிதானே, நம்ம உபயோகிக்கும் சுகாதார நிலையமாச்சேன்னெல்லாம் வித்யாசம் கிடையாது. பூட்டியிருக்கும் வாசலெல்லாம் நீர் தெளித்து கோலமிடுவது எம் கடனேன்னு இருப்போம்.

நாலு நாள் முன்னாடி ஏரியாவ அந்த மாதிரி கோலாகலப் படுத்திகிட்டிருந்தாங்க. மதியம் பள்ளி முடிச்சு வீட்டுக்கு நடந்து போயிகிட்டிருந்தோம். கூட நடந்து வந்துகிட்ருந்த பய திடீர்னு ரோட்டோரத்த பார்த்து கெக்கிபிக்கினு சிரிச்சான். என்னடான்னு கேட்டா ரோடு நாமம்னு சொல்லிகிட்டே கோட்டு மேல இருக்கற ப்ளீச்சிங்க் பவுடர் வட்டத்த காட்றான்.

பக்கியோட அகராதில விபூதி, குங்குமம், ஸ்ரீசூர்ணம்னு நெத்தில ஃபில் பண்ணும் எல்லாமே நாமம்தான். சிலர் விபூதி பூசி, அது நடுவுல குங்குமம் வைப்பாங்களே அந்த பேட்டர்னல இருக்கறதால இது நாமமாம். நெத்திலயோ இல்லாட்டி சுவத்திலயோ போடாம ரோட்ல போட்ருக்கறதால சிரிப்பு பொத்துகிட்டு வருது பக்கிக்கு.

அடேய்..சத்தமா சொல்லாதடா, சங்கி மங்கிக காதுல விழுந்தா அந்தக் கூடையோட டிசைன மாத்தணும்னு எதுனா போராட்டத்த ஆரம்பிச்சுடுவாங்கன்னு வாய பொத்தி இழுத்துகிட்டு வந்தேன். வம்ப விலைக்கு வாங்காம விடமாட்டான் போலிருக்கே.. :)))

2018 March

சன் லைஃப் சேனலோட சிம்பலாம். கேடி பிரதர்ஸ் மட்டும் இத பாத்தாங்க.. ஃபீலாகி தொழில விட்டே ஓடிருவாங்க :)))

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு, Uncategorized and tagged . Bookmark the permalink.

2 Responses to கனி அப்டேட்ஸ் – 9

  1. Revathi Narasimhan says:

    ஏற்கனவே படிச்சிருந்தாலும் குழந்தையோட புத்திசாலித்தனத்தை
    மெச்சாமல், வயிறு குலுங்கச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை லக்ஷ்மி.
    மிக மிக நன்றி.

  2. senshe says:

    கனியின் அந்த சிரிப்பு :)))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s