கனி அப்டேட்ஸ் – 14


2018 May

கனிக்கு மொழியை கற்றுத் தருவது ஒரு தொடர்ச்சியான செயல். பேப்பரும், பென்சிலுமாக ஓரிடத்தில் உட்கார்ந்து சொல்லித் தருவதெல்லாம் அவனுக்கு சரிவராது. நடைமுறையில் மட்டுமே அவனால் கற்றுக் கொள்ளமுடியும். பொதுவாக பெயற்சொற்களைப் பொருத்தவரை சிக்கலில்லை. அந்தப் பொருளையோ அல்லது அதன் படத்தையோ காட்டி பெயரைச் சொன்னால் முடிந்தது வேலை. ஆனால் வினைச்சொற்களில், செயலைக் குறிக்கும் வாக்கிய அமைப்புகளில் அவனுக்கு நிறைய சிக்கல் உண்டு. விதவிதமான எடுத்துக்காட்டுக்கள் மூலமே அவனுக்கு வினைச் சொற்களை புரிய வைக்க வேண்டியிருக்கும்.. வெவ்வேறு சூழலில் ஒரே வார்த்தையை சொல்லும் போது அதன் பொதுத்தன்மையை புரிந்து கொள்வதன் மூலமே அவன் வார்த்தைகளை, சொற்றொடர்களைப் புரிந்து கொள்வான்.

ஏறு, இறங்கு என்ற இரண்டு செயல்களையும் அவனுக்கு புரிய வைக்க மாடிப்படியில், ஸ்டூல் மேல், மேட்டின் மேலோ பாலத்தின் மீதோ வண்டி ஏறி இறங்குகையில் என்று வெவ்வேறு சூழல்களில் அழுத்திச் சொல்லிக் கொண்டே இருக்கும்போது அந்த வார்த்தையையும், அதற்குரிய செயலையும் புரிந்து கொண்டு பயன்படுத்த ஆரம்பித்துவிடுவான்.

அயோத்யவாசி ராஜாராம் என்றொரு பாடலை பாடிக் கொண்டிருந்தான். வழக்கம் போல நான் குறுக்கிட்டு மடிப்பாக்கம்வாசி கனிவமுதன் என்றேன். ஒரு நிமிடம் யோசித்துவிட்டு புழுதிவாக்கம்வாசி என்று அழுத்தந்திருத்தமாக சொல்லிவிட்டு அவன் பாட்டை தொடர்ந்தான். நாந்தான் வாயடைத்துப் போனேன். நாங்கள் வசிக்கும் இடத்தை மடிப்பாக்கம் என்று நாங்கள் சொல்லிக் கொண்டாலும் அது புழுதிவாக்கம் கிராமத்தை சேர்ந்ததுதான். எனவே கடைப் பெயர்களில் மடிப்பாக்கம் என்று போட்டிருந்தாலும், நூலகம், பள்ளி போன்ற அரசு சார்ந்த விஷயங்களில் புழுதிவாக்கம் என்றே முகவரி இருக்கும். அதையெல்லாம் கவனித்திருக்கிறான் என்பதையும், அதைவிட முக்கியமாய் ஏற்கனவே அவனுக்கு ’வாசி’ என்பதன் பொருள் புரிந்துதான் இருக்கிறது என்பதையும் வழக்கம் போலவே லேட்டாக புரிந்து கொண்டேன்.

எப்போதுமே அவனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது நிறைய இருப்பதாக எனக்கு ஒரு மாயை உண்டு. நான் கற்றுக் கொள்ள வேண்டியதும் நிறைய மீதமிருக்கிறது என்று அவ்வப்போது இப்படி கற்றுக் கொடுக்கிறான் இந்த சுண்டைக்காய்.

2018 Apr

கனி தூங்கும் போது கடிகார முள் மாதிரி சுத்தி சுத்தி வருவான். இவன் படுத்தல் தாங்காம பாலா தரைல பாய விரிச்சு தூங்க ஆரம்பிச்சு பல வருஷமாச்சு. நான் ஒரு ஒட்டுல தொத்திட்டு அப்பர் பர்த் ஃபீலிங்கில் சமாளிச்சுப்பேன். அதெல்லாம் கூட சிக்கல் இல்ல. இவன் சுத்தற சுத்தில் அப்பப்ப போர்வை சுருண்டு ஒரு மூலைக்கு போயிடுது. உடனே குளிர் தாங்காம நம்ம மேல் வந்து முட்டு முட்டுனு முட்டுறான். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கண் முழிச்சு, வாழ்கையின் ஒரத்துக்கே ஓடிப் போன போர்வைய தேடி போர்த்த வேண்டியதா இருக்கு. பேசாம ஒரு ஸ்லீப்பிங்க் பேக் வாங்கி இவன உள்ள திணிச்சு சிப்ப போட்டு உருட்டி விட்ரலாமான்னு யோசிச்சுட்டிருக்கேன்.

பி.கு: இந்த பதிவை கூகிள் பிளஸ்ஸில் போட்டபோதுதான் தெரிந்தது குழந்தைகள் இருக்கும் வீடுகளில் முக்கால்வாசி இடங்களில் இந்த கடிகார சுத்தல் சிக்கல் இருக்குன்னு 🙂

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு and tagged , . Bookmark the permalink.

1 Response to கனி அப்டேட்ஸ் – 14

  1. Revathi Narasimhan says:

    ஹாஹ்ஹா, முக்கால் வாசி குழந்தைகள் கனி மாதிரிதான்
    லக்ஷ்மி.கடிகார முள் சில சமயம் காலால் உதைக்கும்.
    சிலசமயம் நம் முதுகுக்குள்கைகளை விட்டுக் கொள்ளும்.
    மகள் வேறு கட்டிலுக்கு மாறி விட்டாள்.
    இறங்கி வந்து அவளுடன் ஒண்டிக்கொள்வான்.

    கனியோட அற்புத புரிதலைப் பார்த்து மனம் முழுவதும்
    மகிழ்ச்சி. இன்னும் இன்னும் என்று கேட்கத் தோன்றுகிறது.
    ஒவ்வொரு நாளும் புதுப் புரிதல் நடந்திருக்கும்.
    எல்லாவற்றையும் விடாமல் எழுதுங்கள் லக்ஷ்மி.
    இந்த அன்பு சேவை எழுத்தில் அடங்காத சந்தோஷம் கொடுக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s