2017 Jan
என்னதான் சமூக ஆர்வமெல்லாம் பொங்கினாலும் அத இணையத்தோட நிறுத்திக்கணும், வீட்டுக்கு கொண்டு வந்தா ஆப்புதான்றதுக்கு ஒரு உதாரணம்.
முந்தாநேத்து பாலா இங்க டி.எம்.கிருஷ்ணாவோட புறம்போக்கு பாட்டை ஷேர் பண்ணியிருந்தார்ல, அத்தோட நிப்பாட்டியிருக்கணுமா இல்லியா? அத டவுன் லோட் பண்ணி இந்த குட்டி பக்கியோட மொபைல்ல போட்டு கொடுத்திருக்கார்(அதுல சிம் கார்டெல்லாம் கிடையாது, கைக்கடக்கமா பாட்டு கேக்கவும், ரெக்கார்ட் பண்ணவுமா அவனுக்கு நேர்ந்து விட்டிருக்கோம்)
நாள் முழுக்க அத போட்டு டி.எம்.கேவுக்கு தொண்டை கட்ற வரை கதற விட்டுகிட்டிருந்தான். இன்னிக்கு அந்த பாட்ட அரைகுறையா பாட ஆரம்பிச்சிருக்கான். மத்த வரியெல்லாம் மனசுக்குள்ள பாடிட்டு நான், நான்,.நான் பொறம்போக்கு, நீ நீ நீ பொறம்போக்கான்ற வரிய மட்டும் எட்டு கட்டைல பாடறான். நல்ல வேளையா நாளைக்கு ஸ்கூல் லீவ். நாளான்னிக்குள்ள இவன் இந்த பாட்ட மறந்துட்டா தேவலாம். இல்லைனா எத்தனை பிள்ளைங்க வீட்டுக்குப் போய் அவங்கவங்க அப்பாம்மாவோட சண்டைக்கு வரப் போறாங்களோ தெரியலயே :))))
2017 May
எங்க வீட்டு சர்வாதிகாரியின் அகராதில நிறைய கட்டளைச் சொற்கள் சேர்ந்துகிட்டே போகுது. அதுல ஒன்னு சீஈஈஈஸ்.. அப்படி அவன் சொன்னதும் நாம நல்லா எல்லாப் பல்லையும் காட்டணும், அதோடு சைக்கிளில் காற்றை பிடுங்கினால் ஒரு சவுண்ட் வருமே, அதையும் கொடுக்கணும். இதுதான் அவன் வரையில் சிரிப்பு. சொல்றப்பல்லாம் டிடிஎஸ் எஃபெக்டோடு சீஈஈஈஸ் பண்ணிகிட்டிருக்கோம். நேத்து இரவு ரொம்ப நேரம் தூங்காம முழிச்சிருந்தவன் என்ன நினைச்சானோ தெரியல.. திடீர்னு அம்மா சீஸ்னான். சவுண்ட் கொடுத்துகிட்டே பல்லையும் காட்டினேன். இருட்டுல ஏமாத்திரப் போறேனோன்னு பக்கி மூஞ்சிய தடவி பல்லை தொட்டு பாக்கறான்.. சந்தேக சாம்பிராணிய பெத்து வச்சுகிட்டு நான் படும் பாடு.. :)))))