கனி அப்டேட்ஸ் – 17


2018 Jan

பொங்கலுக்குப் பிந்தைய வாரத்தில் நானும் கனியும் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விழுந்ததில் இருவருக்கும் நல்ல அடி. கெட்ட நேரத்திலும் ஒரு சின்ன நல்ல விஷயமாக கனிக்கு ரத்த காயம் எதுவும் பெரிதாக இல்லை. ஆனால் ஊமைக் காயம் அதிகம். அதிலும் தொடைப் பகுதியிலும், இரண்டு கால்கள் இணையும் இடத்திலும் பலத்த அடி என்பதால் துடித்துப் போனான்.

விபத்து நடந்ததுலேர்ந்து ரெண்டு நாள் வரைக்கும் கனிக்கு மூச்சா, கக்கா போவதென்பது கொடுங்கனவு போல. நினைச்சாலே டென்ஷ்னாவான். அடிபட்ட இடம் அப்படி. அப்புறம் சமாளிச்சுட்டு போக ஆரம்பிச்சான்னாலும் கழிப்பறை வரை நடந்து போவது கொஞ்சம் சிரமம்தான். முடிஞ்சவரை அடக்கிட்டு அவசரமா வந்த பிறகுதான் போவான். முதல் மூன்று நாட்கள் தூக்கிட்டு போய் விட்டுட்டிருந்தோம். பிறகு நடக்கறத கட்டாயப் படுத்த ஆரம்பிச்சதும் தலைவருக்கு ஒரே கோபம்.

திங்கள் முதல் கழிப்பறை போவதற்கு மட்டும்னு இல்லாம ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வீட்டுக்குள்ளயே சின்னதா ஒரு வாக் போக வச்சுகிட்டிருகேன். கடுப்படிச்சாலும் இப்ப கொஞ்சம் பிடிமானம் இல்லாம சமாளிச்சு நடக்கறான்.

எப்பவுமே நைட் தூக்கத்தில் அவன் முழிச்சால் நாங்க ரெண்டு பேரும் கேக்கும் முதல் கேள்வி மூச்சா வருதான்றதுதான். நேத்து விடிகாலைல ஒரு மூனு மணி போல முழிச்சவன அது மாதிரி கேட்டதுக்கு, எங்க நடு ராத்திரில நடக்க வச்சு உயிர வாங்குவோமோன்ற பயத்துல கண்ணை இறுக மூடிட்டு பாப்பா தூங்கறாங்கன்னு பதில் சொல்லுது பக்கி. தூக்க கலக்கத்திலும் சிரிப்ப அடக்க முடியல எங்களால.

2018 May

நாம ராமாயணப் பாடல் ஓடும் போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மானிட்டரிடம் கைநீட்டி என்னவோ பேசிக் கொண்டிருந்தான் கனி. என்னடாவென்று பார்த்தால் மானிட்டரில் யுத்த சன்னத்தராய் ராமர் படம். காலில் காலணியோடு நின்று கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்துதான் ஒவ்வொரு முறையும் சின்சியராய் “செப்பல் போட்டுட்டு உள்ள வரக் கூடாது”ன்னு அம்மா தனக்கு சொன்ன பாடத்தை சொல்லிக் கொண்டிருக்கிறான் இந்தப் பக்கி. ராமர்தானாகட்டும் எதோ வீட்டின் சர்வாதிகாரி சொல்கிறானே என்பதற்காகவாவது காலணியை கழற்றிவிட்டு வந்து மானிட்டருக்குள் ஏறி நிற்கக் கூடாதா? ஒவ்வொரு முறையும் அந்த வரிக்கு அதே போல போஸ் கொடுக்கிறார் அந்த சொல் பேச்சு கேட்காதவர்..

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு, Uncategorized and tagged , . Bookmark the permalink.

1 Response to கனி அப்டேட்ஸ் – 17

 1. Revathi Narasimhan says:

  அன்பு லக்ஷ்மி ,கனிக்கு
  எப்பொழுது அடி பட்டது. நான் ஏன் கவனிக்கவில்லை.பாவம் குழந்தை.

  பாப்பா தூங்கறாங்க சூப்பர்.
  நம்ம ஊர்ப் படங்களில் ராமர் அழகான பாதங்களைக் காட்டி நிற்பாரே.
  எதெல்லாம் கண்ணன் கண்களில் படுகிறது பாருங்கள்.
  சமத்து ராஜா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s