கனி அப்டேட்ஸ் – 18


2015 May

கனிக்கு தொலைக்காட்சி ஒன்றும் அத்யாவசியமான ஒன்றல்ல. ஆனால் தானிருக்கும் சுற்றுவட்டாரத்தில் தொகா இயக்கப்படுமானால், அதில் தனக்கு விருப்பமான சேனல் மட்டுமே ஓட வேண்டும் என்பதில் தலைவர் படு தெளிவாக இருப்பார். அவரது விருப்பச் சேனல் என்பது அன்றைய நிலவரத்தை பொறுத்தது – பெரும்பாலும் சுட்டி அல்லது சித்திரம் டிவி எப்போதாவது ராஜ் டிவி.

இதே குண நலன்களைக் கொண்ட இன்னொரு குழந்தையும் எங்கள் குடும்பத்தில் உண்டு. வயதுதான் கனியை விட சற்றே கூடுதல் – 85 ஆகிறது. என் அப்பாதான் அந்த இரண்டாவது குழந்தை. அவரைப் பொறுத்த வரை தொகா என்பது மாலை ஆறரை மணிக்கு உயிர் பெற வேண்டும். அதன் பிறகு சன்னில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியலையும் இரவு பத்தரை மணி வரை பார்த்துத் தீர்ப்பார்.  நடுவில் செய்திகள் மட்டும் ஜெயாவில்தான் பார்க்க வேண்டும் என்ப்து போன்ற நுணுக்கமான கட்டுப்பாடுகள் வேறு.  சாப்பாடு, கணக்கு வழக்கு பார்ப்பது போன்ற எல்லா வேலைகளுமே நடுநடுவே வரும் விளம்பர இடைவேளைகளில் மட்டுமே  நடக்கும். மாலையில் அவரோடு போனில் பேச வேண்டுமென்றால் நானும் இங்கே சன் வைத்துப் பார்த்து, விளம்பர இடைவேளைக்குத்தான் கூப்பிடுவேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். :))

 

இம்முறை ஊருக்குச் சென்றிருந்தபோது இரண்டு குழந்தைகளையும் ஒரே நேரத்தில் சமாளித்தாக வேண்டிய நிலமை எனக்கு வாய்த்தது. கனி அன்று பார்த்து சித்திரம் டிவி தர்ரே என்றான்.  இல்லம்மா தாத்தா டிவி பாக்கட்டும் என்றேன். சற்று நேரம் கழித்து சுட்டி டிவி தர்ரே என்றான். மீண்டும் தாத்தா பாவம்மா, அவர் டிவி பாக்கட்டும். நாம நம்ம வீட்டுக்குப் போனதும் சித்திரம் டிவி, சுட்டி டிவி எல்லாம் தர்ரேன் என்றேன்.

 

மீண்டும் சற்று நேரம் கழித்து இதே பல்லவி இன்னொரு ரவுண்ட் ஒடியது.  இந்த முறை கனிக்கு அழுகை வந்து விட்டது. அழுகையினூடே ”சித்திரம் டிவி இல்லம்மா, சுட்டி டிவியும் இல்லம்மா… தாத்தா டிவி” என்று டிவியை நோக்கி கையை ஆட்டி ஆட்டி ஆத்திரமாகச் சொன்னான்.  எங்கள் எல்லோருக்கும் பயங்கர சிரிப்பு. அது இன்னும் அவன் அழுகையை வளர்க்கவே சரி, வா டாட்டா போலாம் என்று ட்ரஸ் மாற்றி வெளியே ஒரு ரவுண்ட் அழைத்துப் போய் அவனை சமாளித்தேன்.

 

சென்னை வந்த மறுநாள் பாலா எதேச்சையாக தொகாவை ஆன் செய்து எதோ செய்தி சேனலை வைத்தார். அவ்வளவுதான். கனிக்கு அழுகை பீறிட்டது. பாலாவுக்கோ ஒன்றும் புரியவில்லை. சமையலறையில் வேலையாயிருந்த எனக்கும் திடீரென எழுந்த அழுகைக்கு காரணம் புரியாமல் ஹாலுக்கு வந்து என்னடா செல்லம் என்றேன்.  அழுகைக்கு நடுவே திக்கித் திணறி சித்திரம் டிவி இல்லம்மா, சுட்டி டிவியும் இல்லம்மா… அப்பா டிவி என்றான். பிறகு பாலாவுக்கு பொழிப்புரை தந்து, சித்திரம் டிவி வைத்ததும்தான் கனியிடம் நிம்மதியும், புன்னகையும் திரும்பியது. :))

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு and tagged , . Bookmark the permalink.

2 Responses to கனி அப்டேட்ஸ் – 18

 1. Revathi Narasimhan says:

  அச்சோ பாவம் கனி,
  பெரியவர்கள் டிவியை எடுத்துக் கொண்டால் குழந்தை என்ன செய்யும்.
  எங்க வீட்டில் குழந்தைகள் வரும்போது அவர்கள் சானல் மட்டும் தான் ஓடும்.

  எங்க இருவருக்கும் அதுகளோடு ரசிக்கக் கற்றுக் கொண்டோம்.அப்போ சோட்டா பீம்.
  கனி வருத்தப்பட்டதில் தப்பே இல்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s