கனி அப்டேட்ஸ் – 19


2014 Feb

கனிக்கு தமிழ் துணை எழுத்துக்களை படிப்பதில் இருந்த சிக்கல் குறைந்து விட்டது. எனவே ஒரளவு சரியாகவே படிக்கிறான். நல்ல மூடில் இருந்தால் நான் லேப்டாப்பில் எதையேனும் படிக்கையில் கூடவே வந்து ஒட்டிக் கொண்டு வாய்விட்டு படிப்பான்.

நேற்று விகடன் தளத்தை திறந்து வைத்திருந்தேன். தோளைக் கட்டிக் கொண்டு எட்டிப் பார்த்த கனி மேலாக இருக்கும் டேபில் இருக்கும் பத்திரிக்கைகளின் பெயர்களைப் படித்தான். ஆனந்த விகடன், ஐயனார் விகடன், அவள் விகடன், சுட்டி விகடன், நாணயம் விகடன், மோட்டார் விகடன் என அந்த ஒரு வரிசையை மட்டும் படித்து விட்டு தன் விளையாட்டைப் பார்க்க ஓடிவிட்டான்.

கொஞ்ச நேரம் கழித்துதான் அவன் படித்ததில் இருந்த ஒரு வித்யாசத்தை உணர்ந்தேன். விகடன் வரிசையில் ஐயனார் எங்கே வந்தார்? ஒரு வேளை ஐயனார் விஸ்வநாத் எழுதிய பதிவு எதையாவது முன்னாடி பாத்த ஞாபகத்துல அந்தப் பேரை வித்யாசமா இருக்கேன்னு சொல்றானானெல்லாம் குழம்பிட்டு அவனையே திரும்பக் கூப்பிட்டு இதை படி என்றேன். மீண்டும் அதே கதை. ஆனந்த விகடன், ஐனார் விகடன், அவள் விகடன் என்று தொடர்ந்தான். கவனித்துக் கேட்டதில் ஜூனியர் விகடன்தான் ஐனார் விகடனாகி நான் அதை ஐயனார் விகடன்னு புரிஞ்சிருக்கேன் போலிருக்கு. பிறகு ஜூனியர் விகடன் என்று திருத்தி சொல்லித் தந்தவுடன் அதை பிடித்துக் கொண்டான். சரி, க்ரந்த எழுத்துக்களை தலைவருக்கு சொல்லித்தர நேரம் வந்துருச்சுன்னு நினைச்சுகிட்டேன்.

2014 – May

இரண்டு வாரங்களாக சூறாவளி பயணங்களாகவே போகிறது பொழுது. போன மாத இறுதியில் நானும் கனியும் மட்டும் பாபநாசம் போய் வந்தோம். ஊருக்குப் போய்விட்டு பகல் நேர ட்ரெயினில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். திரும்பி வருகையில் என் சித்தப்பாவும் துணைக்கு கிளம்பி வந்தார்.ஏசி கோச் என்பதால் உள்ளே வந்த வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் யார் என்ன விற்றுக் கொண்டு வந்தாலும் உடனே கனியும் அடுத்த ஆள் வரும் வரை அந்த வாசகத்தை சொல்லிச் சொல்லி சிரித்த படியே வந்தான். லெமன் சாதம், கொய்யாப் பழம், தக்காளி சாதம், தயிர் சாதம் என காதில் விழும் எல்லா சத்தத்தையும் எதிரொலித்தபடி வந்தான்.

அரை மணி நேரம் சித்தப்பாவை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு அப்பர் பர்த்தில் ஏறி ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். இறங்கி வந்தபோது கனி ஒரு புது வார்த்தையைச் சொல்லிக் கொண்டிருந்தான். சுப்பாணி தயிர்சாதம் என்று சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான். சுப்ரமணிக்கும், தயிர்சாதத்திற்கும் என்ன சம்பந்தம், ஏன் இரண்டையும் சேர்த்துச் சொல்கிறான் என்றெல்லாய் யோசித்துக் கொண்டிருந்தேன். சித்தப்பா டாய்லெட்டில் இருந்து வந்தவுடன் அவரிடம் கேட்டபோது சிரித்துக் கொண்டே “அது வேறொன்னுமில்ல, ஒருத்தர் சூடான வெஜ் பிரியாணி, தயிர்சாதம்னு வித்துட்டுப் போனார். சூடான வெஜ் பிரியாணிதான் உன் புள்ள வாயில் சுப்பாணி ஆயிருக்கு” என்றார்.

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to கனி அப்டேட்ஸ் – 19

 1. Revathi Narasimhan says:

  ஐயனார் விகடன் ஹாஹா. கனி செல்லம்
  சுலபமாச் சிரிக்க வைத்துவிட்டாய்.
  இப்பக் கற்றுக் கொண்டுவிட்டாரா. தமிழ் படிக்கும் அமுதன்.
  லக்ஷ்மி வாழ்த்துகள்.

  சூடான பிரியாணி சுப்பாணி ஆனதே.
  அறிவுச் சுடர் டா நீ. 😃❤

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s