கனியின் இப்போதைய ட்ரெண்ட் ”தர்…ர்ரே”.
தலையில் எண்ணெய் வைத்து விட்டேன். அந்த பிசுபிசுப்பு தலைவருக்கு ஆகாது. அடுத்த நிமிடமே என்னிடம் வந்து “ஜோ தர்ரே” (ஜோ குளிப்பது என்று குளியலைச் சொல்வோம், அதன் சுருக்கமே ஜோ தர்ரே)
பசி வந்தால் “சாப்ட்லாம் தர்ரே” அல்லது “தோசை தர்ரே”
என்ன பாட்டு வேண்டுமோ அதன் பேரைச் சொல்லி தர்ரே என்றால் சிஸ்டத்தில் அந்தப் பாட்டைப் போட வேண்டும் அல்லது நான் பாட வேண்டும். மாடு மேய்க்கும் தர்ரே, அல்லது விஷமக்கார கண்ணன் தர்ரே….
திருமணங்களில் மாங்கல்யதாரணத்தின் போது கெட்டி மேளம் வாசித்து முடிந்தவுடன் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என்ற பாடலை நாகஸ்வரத்தில் வாசிப்பார்கள். சுதா ரகுநாதனின் திருமணப் பாடல்கள் ஆல்பத்தில் அந்தப் பாடல் ஆரம்பிக்கும் முன் அதே போல கெட்டி மேளம் வாசிப்பது வரும். அதன் பிறகே அந்தப் பாடல் ஆரம்பிக்கும்.
நேற்று கணிணியில் வேலையாக இருந்த என்னிடம் வந்து “ஆனந்தம் தர்ரே” என்றான். சரி என்று இந்தப் பாடலை தேடி எடுத்து போட்டு விட்டேன். அதற்குள் வேகமாய் ஓடிப் போய் மிருதங்கத்தின் அருகே தயாராக உட்கார்ந்திருந்த கனி அந்த கெட்டி மேளத்தோடு மிருதங்கத்தையும் டமடம என்று முழக்கினான்.
உலகத்துலயே கெட்டி மிருதங்கம் வாசிச்ச முத ஆள் நம்ம பயதான்னு நினைச்சுகிட்டேன். 🙂
Super :))
அன்பு ஸ்ரீராம், இந்தப் பதிவே,
தர்ரே. ஆஹா கட்டளை இடுகிறார் கனி மன்னர். தர வேண்டியது உங்கள் கடமை. மன்னர் வாசிக்கும் மிருதங்க ஒலியை நான் கேட்டதில்லையே.
அன்பு லக்ஷ்மி இப்போன்னு போட்டால் 2019 ஆ.
இல்லம்மா.. இது வரை ப்லாகில் நான் போட்டுக் கொண்டிருக்கும் எல்லா கனி அப்டேட்ஸ் பதிவுகளுமே பழையவைதான். கூகிள் ப்ளஸ்ஸில் இருந்து பேக்கப் எடுத்து வைத்திருப்பதை கடை பரப்பிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவே.:)