கனி அப்டேட்ஸ் – 23


Vestibular system – என்பது நமது உடலின் சமநிலையை பேணுவதற்கு தேவையான புலன் உணர்வு ஆகும். புலன் உணர்வு சிக்கல் உள்ளவர்களுக்கு இந்த வெஸ்டிபுலர் சிஸ்டத்தை உறுதியாக்க முக்கியமான தேவை ஊஞ்சல். எனவேதான் சாதாரண குழந்தைகளுக்கு வெறும் விளையாட்டு சாதனமாக மட்டுமே பயன்படும் ஊஞ்சல், சிறப்பு குழந்தைகளுக்கு தெரப்பி யாகவும் பயன்படுகிறது.

எப்போதும் கனிக்கு வீட்டில் ஏதேனும் ஒரு வகை ஊஞ்சல் வைத்திருப்போம். ஊஞ்சலில் ஆடுவது அவனுக்கு அலாதியான மகிழ்வையும் நிறைவையும் கொடுக்கும். அவனது கடந்த வருட பிறந்தநாளுக்கு நண்பர் ஒருவர் துணியாலான hammock ஒன்றினை பரிசு அளித்திருந்தார். அதனை நீட்டு வாக்கில் கட்டுவதற்கு எங்கள் வீட்டிற்குள் வசதி இல்லாததால் தூளி போல மாட்டி விடுவது வழக்கம். அதில் அவன் உட்கார வசதியாக ஒரு குட்டி தலையணையை வைத்துவிடுவோம். இன்று என்னவோ அடம்பிடித்து அந்த தலையணையை எடுத்து விட்டு அதை தூளியாகவே பாவித்து அதனுள் படுத்துக் கொண்டான் கனி. பாலாவும் கர்மசிரத்தையாக அந்தத் தூளியை ஆட்டிக்கொண்டிருந்தபோது கிளிக்கியது இப்படம்.

நடக்கத் தெரிந்த குழந்தை தாயார் செய்த தவப் பயனால் தவழக் கற்றுக்கொண்டதாம் என்றொரு சொலவடை எங்கள் பக்கம் உண்டு. அதுதான் நினைவுக்கு வந்தது. 🙂

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு and tagged , . Bookmark the permalink.

1 Response to கனி அப்டேட்ஸ் – 23

  1. Revathi Narasimhan says:

    ஆஹா. பாலா தூளி ஆட்ட புல்லாங்குழல் கண்ணன் ஆடுகிறானே.
    லக்ஷ்மி இந்தப் பழமொழி நான் கேள்விப்பட்டதில்லையே.

    பாலா தூளி ஆட்ட, குழந்தையின் முகம் எட்டிப் பார்ப்பதுதான் எத்தனை அழகு.
    தாயே யசோதா…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s