கனி அப்டேட்ஸ் – 30


2017 June

தஞ்சை -கும்பகோணம் சாலையை நெடுஞ்சாலை என்றால் அதில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக் கற்கள் கூட சிரிக்கும். சமதளத்திலேயே ஏகப்பட்ட கொண்டை ஊசி வளைவுகள், எதிரெதிரே இரண்டு பஸ் வந்தாலே வேகம் குறைத்து கவனமாய் தாண்ட வேண்டிய அவசியம், கொஞ்சம் ஓரம் போனால் பஸ் வீட்டு திண்ணைகளில் ஏறிவிடும் அபாயம் என்று அந்த சாலையின் சிறப்பம்சங்கள் சொல்லி மாளாது. அப்போதெல்லாம் விபத்துகள் ரொம்ப சர்வ சாதாரணம்.

இளங்கலை 3 + முதுகலை 2.5னு 5.5 வருடமும் அம்மாவுக்கு வயிற்றில் கட்டிய நெருப்பு என்னுடைய தினசரிப் பயணம். தினமும் கிளம்பும் போதெல்லாம் மறக்காம “விபூதி குங்குமம் இட்டுண்டு கிளம்பு” என்று என்னிடமும் “பாவடைராயா(எங்கள் குலதெய்வக் கோவிலின் பரிவார தேவதைகளில் ஒன்று, எங்கள் குடும்பத்தினருக்கு இஷ்ட தெய்வம்) பின்னோட போய் காப்பாத்துடா” என்று சாமி படம் பார்த்தும் சொல்வது அவரது வழக்கம். பஸ்ஸுக்கு அவசரம் இல்லையென்றால் “அவனுக்கு டிக்கெட் நான் வாங்கணுமா, இல்ல அவனே பாத்துப்பானா” என்று கேட்டு அம்மாவின் வாயைக் கிளறி கிளம்பும் நேரத்தில் ஸ்பெஷல் அர்ச்சனைகளைப் பெற்றுக் கொண்டு கிளம்புவது எனக்கு பிரியமான பொழுது போக்கு.

இதெல்லாம் இப்ப ஏன் திடீர்னு எனக்கு நினைவுக்கு வரணும்? எங்கள் வீட்டருகில் ஒரு சின்ன அம்மன் கோவில் உண்டு. ஆரம்பத்தில் ஏரிக்கரை வேப்பமரத்தினடியில் சில நாகப் பிரதிஷ்டைகளும், கழுத்து வரையிலான அம்மன் சிலையும் மட்டும் இருந்தது. நூலகம் செல்லும் போதுகளில் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு போனதுண்டு. இப்போது நாகப்பிரதிஷ்டைகள் எல்லாம் அப்படியே இருக்க, அம்மனை மட்டும் பக்கத்தில் சின்ன கான்கீரிட் கட்டத்தில் டைல்ஸ் புடைசூழ குடியமர்த்தியிருக்கிறார்கள். கூடுதலாக முழு உருவச் சிலையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். முன்பு பெயர்ப் பலகை எதுவும் இருந்ததில்லை. இப்போதோ ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் என்று அந்த ஸ்தலம் அழைக்கப் படுகிறது.

கனியை அந்த வழியாகத்தான் தினமும் பள்ளியில் கொண்டு போய் விடுகிறேன். சமீபமாக இரண்டொரு நாளாகத்தான் எனக்கே உரைக்கிறது – அந்த இடத்தை தாண்டும் போதெல்லாம் ”அம்மா கருமாரித் தாயே, குழந்தைய காப்பத்தும்மா” என்ற வேண்டுதல் என் மனதில் எழுவதை. அம்மா போல வாய்விட்டு வேண்டி இந்த குட்டிப் பயலிடம் மாட்டிக் கொண்டு விடக் கூடாது என்று மட்டும் மனதுக்குள் முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டேன். பின்னே, அப்பனுக்கு இட்ட சட்டி தொங்குதடி அவரைப் பந்தலிலே என்றொரு பழமொழி இருக்கிறதல்லவா? செய்வினையெல்லாம் செயப்பாட்டு வினையாக மாறாதிருக்குமா என்ன? பீ கேர்ஃபுல்னு எனக்கு நானே சொல்லிகிட்டேன்.

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to கனி அப்டேட்ஸ் – 30

  1. Revathi Narasimhan says:

    ஆஹா.வசம்மா ம்ம்ம்மாட்டிக்கினான்னு ஒரு வசனம் வரும் நினைவிருக்கா.
    கனி செல்லம் உன்னால தான் அம்மாவை இப்படி எல்லாம்
    எழுத வைக்க முடிகிறது. வாழ்க நீ எம்மான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s