கனி அப்டேட்ஸ் – 31


2012 Dec

கனிக்கு பேனா அல்லது பென்சில் பிடித்து எழுதுவதை இன்னும் ஒரு இரண்டு வருடத்துக்காவது தள்ளிப் போடும் எண்ணத்தில் இருக்கிறோம்.  வீட்டில் கரும்பலகையும் சாக்பீஸ்களும் உண்டு. வண்ணமடிக்க க்ரேயான்கள் உண்டு. இவற்றில் மட்டுமே அவனுக்கான எழுத்துப் பயிற்சிகள் – அவனுக்குமே புத்தகத்தை எடுத்து வைத்து படிப்பதில் அல்லது படம் பார்ப்பதில் உள்ள ஆர்வம் எழுதுவதில் இல்லையென்றே சொல்லவேண்டும்.

ஆனால் எழுத்துக்களை புரிந்து கொள்ளவும் படிக்கவுமாக மரப்பலகையில் பதித்தது போன்ற ஏபிசிடி கேப்பிட்டல் மற்றும் சின்ன எழுத்துக்கள் கொண்டது ஒன்றும், ப்ளாஸ்டிக்கிலான ஏபிசிடி செட் இரண்டும் வாங்கிப் போட்டிருக்கிறோம்.அவற்றால் அவருக்கு பரிச்சயமான எல்லா வார்த்தைகளையும் அடுக்கிப் பார்ப்பார். ஏற்கனவே சொன்னது போல் மிகக் கறாரான செம்மையாளர்(perfectionist) என்பதால் ப்ளாஸ்டிக் எழுத்துக்களையும், மர எழுத்துக்களையும் கலந்து அடுக்க மாட்டார். எனவே நிறைய வார்த்தைகளை அடுக்கும் போது எழுத்துக்கள் பற்றாக்குறையாகும். முடிந்த அளவு சில தந்திரங்கள் மூலம் சமாளிப்பார். ரொம்ப முடியாத பட்சத்தில் மட்டும் எழுத்துக்களை கடன் வாங்கிக் கொள்வார். அவர் செய்யும் சில சமாளிப்புகள் எனக்கு எப்போதும் ஆச்சரியம் தருவன.

குறிப்பு: இவை மறுதலை(vice versa)யாகவும் பயன்படுத்தப்படும் என்று அறிக.

1. M தேவைப்படும் இடங்களில் W வைத் தலைகீழாக வைத்துக் கொள்வார்.
2. N தேவைப்படும் இடங்களில் Z ஐ பக்கவாட்டில் வைத்துக் கொள்வார்.
3. ஸ்மால் லெட்டர் q, b போன்றவற்றைத் திருப்பி போட்டு p செய்வார்.
4.கேப்பிடல் ஐ – I ஸ்மால் லெட்டரில் வரும் எல் – l ஆக உபயோகிக்கப்படும்.
5. எண்களில் 2 க்குபதில் எழுத்திலிருந்து Z உபயோகிப்பார். அது போலவெ 3 ற்கு மாற்றாக இடவலமாக மாற்றப் பட்ட E, பக்கவாட்டில் அடுக்கப்பட்ட W போன்றவை உபயோகிக்கப் படும். 5 ற்கு S பயன்படும்.

நாங்களிருவருமே SAMSUNG மொபைல்தான் உபயோகிக்கிறோம். ஒரு முறை சாம்சங் என்பதை படித்துக் காண்பித்து ஸ்பெல்லிங்கும் சொன்னதும் விறுவிறுவென தன் எழுத்துக்களால் அடுக்கத் தொடங்கினான். சரியாக அடுக்கியிருந்தான் என்றாலும் ஏதோ ஒரு வேறுபாடு இருப்பதாக தோன்றிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்தே அது என்னவென புரிபட்டது. SAMSUNG கம்பெனி தன் பெயரை பெரும்பாலும் A வில் வரும் நடு இணைப்பு இல்லாமலே எழுதும் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். எனவே கனி தானும் அப்படியே எழுதியிருந்தான் – எப்படியெனில் Aவிற்கு பதிலாக Vஐத் தலைகீழாக வைத்து அதே வார்த்தையை உருவாக்கியிருந்தான்.

Hospital-லில் பிள்ளையை மாற்றிவிட்டார்களோ என்ற எண்ணம் மட்டும் அடிக்கடி வருவதை தடுக்க முடியவில்லை )))

 

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு and tagged , . Bookmark the permalink.

1 Response to கனி அப்டேட்ஸ் – 31

  1. Revathi Narasimhan says:

    எத்தனை புத்திசாலி இந்தப் பிள்ளை.என் கண்ணா. செல்லம்.
    அதெல்லாம் மாத்தவில்லை. சரியான இடம் பார்த்து வந்திருக்கிறான்

    மீண்டும் பேரண்,பேத்தி ப்ளாக்ஸ் அடுக்கின காலத்துக்கு
    என்னைக் கொண்டு போய்விட்டீர்கள். நன்றி லக்ஷ்மி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s