கனி அப்டேட்ஸ் – 32


2019, July

எழுத்துக்களைப் போலவே எண்களின் மீதும் கனிக்கு பிரேமை அதிகம். இரண்டரை வயதிலேயே தமிழ் & ஆங்கிலம் இரண்டிலும் 1000 வரை எண்களின் பெயர்களைச் சொல்வான். எதைச் சொல்லித் தந்தாலும் பிடித்துக் கொள்கிறானே என்று ஏறுவரிசை போலவே இறங்கு வரிசையை சொல்லித் தந்ததும் அதையும் உடனே கற்றுக் கொண்டான். பிறகு எண்களின் மடங்குகளை அறிமுகம் செய்தேன். 2, 4, 6 என்று முதல் முறை சொன்னதுமே கிடு கிடுவென 1000 வரை இரட்டை எண்களைச் சொன்னான். 5, 10 கூட பரவாயில்லை, எல்லோருக்குமே எளிதுதான். 3, 7 என்றெல்லாம் வரிசையை ஆரம்பித்தால் கூட வெகு லாவகமாய் அதைத் தொடர்வான். எனக்குத்தான் ஒரு கட்டத்திற்கு மேல் அவன் சொல்வதை சரி பார்க்கக் கூட முடியாது – பின்னே நமக்கு எல்லா வாய்ப்பாட்டிலும் 16 வரைதானே தெரியும்?

ஆனாலும் இந்த மாதிரியான திறன்களை பெரிதாக்கிக் காட்டி, அவனை ஒரு காட்சிப் பொருளாக்குவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஆட்டிச நிலையாளர்களுக்கு வகை மாதிரி(Pattern) புரிந்து கொள்வதிலும், அவற்றைப் பின்பற்றுவதிலும் அபார உற்சாகம் இருக்கும். அதனால்தான் இதையெல்லாம் செய்கிறான் என்பதை உணர்ந்திருந்ததால் நாங்கள் அவனிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளவில்லை. என்றாலும் மொழி போலவே கணிதமும் அவனுக்கு நன்றாக வரும் என்ற சின்ன நம்பிக்கை எனக்கு இருந்தது – அவ்வளவு கூட மூட நம்பிக்கை இல்லாவிட்டால் அம்மாவாக வாழ்வது எப்படி?

கூட்டல் வரை நன்றாகச் செய்தவன் ஒரு சடன் பிரேக் போட்டான். திடீரென கணக்கு, பிணக்கு, ஆமணக்கு என்றடுக்கும் சுப்பைய்யாவின் பேரன் அவதாரத்திற்கு மாறிவிட்டான். சரி, மற்ற நான்கு பாடங்களையும் எழுத வைக்கவே நுரை தள்ளுகிறதே, இது போகட்டும் என்று இரண்டொரு வருடங்கள் விட்டுவிட்டேன். இனி பொறுப்பதில்லை என்று சென்ற கோடை விடுமுறையில் முழுமூச்சாக கணக்கு போட்டே ஆக வேண்டும் என்று அவனோடு மல்லுக்கு நின்றதில் இப்போது பெருக்கல், கழித்தல் என ஒரளவு வண்டி மீண்டும் வேகம் பிடித்திருக்கிறது.

இப்போதும் கணக்கில் இருக்கும் எரிச்சலை விதம் விதமாகக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறான். நான் தமிழில் சொன்னால் அவன் ஆங்கிலத்தில் சொல்வது, நான் ஆங்கிலத்தில் சொன்னால் அவன் தமிழில் பதில் சொல்வது என்பதெல்லாம் எப்போதுமே அவன் வெறுப்பேற்றச் செய்வதுதான். அதாவது நான் Two Twos are என்றால் அவன் நான்கு என்பான். அல்லது ரெண்டு ரெண்டு நாலு என்று சொல்வான். ஏழெட்டு என்று நான் கேட்டா seven eights are fifty six என்பான். ஒரு சில மைக்ரோ நொடிகள் செலவிட்டுத்தான் அவன் சொல்வதை சரிபார்க்கவே முடியும். சரி, இது போன்ற சில்லரை விஷயங்களுக்கெல்லாம் கோபப் படக் கூடாது என்று எனக்கு நானே நல்லபுத்தி சொல்லிக் கொண்டு சாந்த சொரூபியாய் வேலையைத் தொடர்வேன்.

போன வாரத்தில் இரண்டு இலக்கப் பெருக்கலில் carry over அறிமுகப் படுத்தினேன். ஏற்கனவே ரெண்டு இலக்கம் பெருக்கணும், இதில் இன்னொரு எண்ணை ஞாபகம் வச்சு கூட்ட வேறு சொல்கிறாளே இந்த இரக்கமற்றவள் என்று நினைத்தான் போல. ஏழு எட்டூஸ் ஆர் ஐம்பத்தி ஆறு என்றான். என்ன சொல்கிறான் இவன் என்று ஒரு நிமிடம் தலை சுற்றிப் போனேன். ஆனாலும் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தயளாக கணக்கை போட வைத்து முடித்தேன் – அடேஏஏஏஏய், உனக்கு கணக்கு சொல்லித் தரதுக்குள்ள எனக்கு தமிழ், இங்கிலீஷ் எல்லாத்தையுமே மறக்க வச்சுருவ போலிருக்கே ராசா என்று மனதுக்குள் கதறிக் கொண்டேதான்.

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு and tagged , . Bookmark the permalink.

1 Response to கனி அப்டேட்ஸ் – 32

  1. Revathi Narasimhan says:

    லக்ஷ்மி… ,பொறுமையின் வடிவமேன்னு சிவாஜி ஸ்டைல்ல பாடலாமான்னு யோசனை. வருகிறது. ஏழு எட்டூஸ் ஆர் ஐம்பத்தாறா.
    கடவுளே. நினைவிருக்கட்டும் ஒரு ஐன்ஸ்டீன் உங்க வீட்டில வளருகிறார்.

    கனி செல்லம் அம்மாவைப் படுத்தாமல் படிப்பியாம்.
    எப்பவும் நன்றாக இருக்கணும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s