கனி அப்டேட்ஸ் – 33


2015 Jan

எங்களுக்கு பண்டிகைகளில் பொங்கலும் திருவிழாக்களில் புத்தகக் கண்காட்சியும் முக்கியமானவை. கனி பிறந்த வருடம் கூட நான் புத்தக கண்காட்சியைத் தவற விட்டதில்லை. சென்ற வருடம் முதல் அவனையும் அழைத்துச் செல்ல ஆரம்பித்திருக்கிறோம். சென்ற வருடம் வெறுமனே நடந்தும், ஓடியும் களைத்துப் போனவனாக திரும்பினான். இந்த வருடமும் அப்படியே இருப்பான் என்று நினைத்துத்தான் அழைத்துப் போனோம்.

ஒவ்வொரு கடையிலும் நாங்கள் தேடியெடுத்து புத்தகங்கள் வாங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென நடைபாதையில் ஓரிடத்தில் சத்தியாகிரகம் பண்ண ஆரம்பித்தான். அது குழந்தைகளுக்கான புத்தகக் கடை வாசல். ஆனால் வருடம் முழுவதுமே அவனுக்குத் தேவைக்கு மேல் புத்தகங்கள் வாங்கி அடுக்கியிருக்கிறோம் என்பதால் எங்களுக்கு அங்கே ஒன்றும் வாங்க வேண்டியிருக்கவில்லை. கடை வாசலில் என் கையைப் பிடித்து இழுத்து பிரேக் அடித்து நிற்க வைத்ததோடு உயிர்மெய்யெழுத்து புக் என்று வேறு சொன்னான். அதாவது அவனுக்கு எழுத்துக்கள் கொண்ட புத்தகம் வேண்டுமாம். அவன் கேட்ட மகிழ்விற்காகவே ஏற்கனவே வீட்டில் எக்கச்சக்க எழுத்துப் புத்தகங்கள் இருந்தாலும் பரவாயில்லை என்று ஆங்கிலம் தமிழ் இரண்டிலுமே ஒவ்வொரு புத்தகத்தை வாங்கி அவன் மாட்டியிருந்த சிறு பைக்குள்ளேயே வைத்து விட்டோம். பின்னே அவங்கவங்களுக்கு வேண்டியதை அவங்கவங்களாத்தானே வாங்கிக்கணும்?

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு and tagged , . Bookmark the permalink.

1 Response to கனி அப்டேட்ஸ் – 33

  1. Revathi Narasimhan says:

    நீங்க மட்டும் இத்தனாம் புத்தகம் வாங்கும்போது
    அவனுக்கு என்று ரெண்டே ரெண்டு தானே கேட்கிறான் மா.
    பெரிய மனுஷனாயிட்டான். அவன் சொல்றதை நீங்க செய்யணும்.அவ்வளவு தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s