Monthly Archives: November 2019

ராம ஜனார்த்தன

கனிக்கு நோட்டு ஸ்வர வரிசையில் உள்ள பாடல்கள் ரொம்ப பிடித்தம். ராம ஜனார்த்தன எனும் இந்தப் பாடலை கீ போர்டில் வாசித்ததோடு தொடர்ந்து பாடவும் செய்தான்.

Posted in ஆட்டிசம், கனி இசை | Tagged | Leave a comment

வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி

ஓய்வு பெற்றபோது கிடைத்த தொகை முழுமையும் போட்டு ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கினார் அப்பா. உடைமையாளர்கள் தவிர குத்தகைதாரரிடமும் முறைப்படி பணம் தந்து, பதிவும் செய்து முடித்திருந்தார். நடுவில் எப்போதோ சில வருடங்கள் உள்குத்தகைக்கு எடுத்த ஒருவர் சட்டென்று இடையில் புகுந்து அந்த நிலத்தின் குத்தகைதாரர் நான்தான், என்னிடம் தெரிவிக்காமல் நடந்திருக்கும் விற்பனை செல்லாது என்று … Continue reading

Posted in அப்பா, எண்ணம் | Tagged , | Leave a comment

கலௌ ஸங்கீர்த்ய கேசவம்

கலியில் நாம சங்கீர்த்தனமே மோட்ச சாதனம் என்பர். பக்தி இயக்கத்தின் முக்கிய வடிவமான பஜனைப் பாடல்களில் ஒன்று கனியின் குரலில்

Posted in இசை, கனி இசை | Tagged , | Leave a comment

ராமபத்ர ராரா

நம் மாணிக்கவாசகரின் வரலாற்றோடு நிறைய ஒற்றுமைகள் கொண்டது பத்ராசலம் ராமதாசரின் வாழ்வு. கோபண்ணாவாக இருந்து ராமனுக்கு தாசராக மாறி பத்ராசலத்தில் கோவில் கட்டி, அதன் பொருட்டு 12 வருடம் சிறையில் வாடியவர். சிறையிருந்த போதும், பின்னரும் இவர் இயற்றிய பாடல்கள் ஏராளம். அதிலொன்று கனியின் குரலில்

Posted in இசை, கனி இசை | Tagged , , | Leave a comment

அன்னையின் அருள் வேண்டி

உலக அன்னையின் கருணையை வேண்டும் ஒரு பாடல் கனியின் குரலில்

Posted in கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , | Leave a comment

குருவே துணை

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவர் இவ்வுலகில் குருவன்றி வேறு யார்? குருவருளின் பெருமை பேசும் பாடல் ஒன்று கனியின் குரலில்

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , | Leave a comment

பாற்கடல் வாசனைப் பாடிடுவோம்

மேலும்  ஒரு பஜனைப் பாடல் கனியின் குரலில்

Posted in ஆட்டிசம், இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , | Leave a comment

பாண்டுரங்க விட்டலனை பாடிடுவோம்

பொதுவாக பஜனைப் பாடல்களில் ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று நாமாவளிகளே அதிகம் இருக்கும். அதற்கான பெரிய சொற்களஞ்சியம் ஒன்று எல்லா மொழிகளிலும் உண்டு. கோபாலா என்று வருமிடத்தில் கோவிந்தா என்றாலும் சிக்கலிருக்காது. எனவே ஆற்றொழுக்கு போல எல்லோருமே பாடிவிட முடியும். ஆனால் விதிவிலக்காக சில பஜனைப் பாடல்களிளோ வரிகளை லாவகமாகப் பாட வேண்டியிருக்கும். அப்படியானதொரு பாடல் … Continue reading

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , , | Leave a comment

சங்கீதமே சன்னிதி

கனிக்கு வந்தே குரு பரம்பரா தொடரில் வரும் எல்லாப் பாடல்களும் மிகவும் பிடிக்கும். குறிப்பாக சூர்ய காயத்ரியின் பாடல்களின் தீவிர ரசிகன் அவன். ராகுலின் பாடல்கள் தனக்கு சரியாகப் பொருந்தும் என்று அவனாகவே முடிவு செய்து கொண்டு அப்பாடல்களை பிரதியெடுக்க முயற்சிப்பதும் உண்டு. அவர்கள் இருவருமே சென்னைக்கு கச்சேரிக்கு வருகிறார்கள் என்றதும் நிச்சயம் இவனை அழைத்துப் … Continue reading

Posted in ஆட்டிசம், கனி அப்டேட்ஸ், சின்னச் சின்ன ஆசை | Tagged , , | Leave a comment

ஹரிவராசனம்

கனியை பாட வைத்து, அதை பதிவு செய்வதே ஒரு பெரிய சாகச முயற்சிதான். முழுப்பாடலையும் ஒரே ஒலி அளவில் பாட மாட்டான். மூச்சுப் பயிற்சி எதுவும் இல்லாததால் சீரான குரலில் பாட முடியாது. மூச்சிழுப்பதும் வெளி விடுவதும் பாட்டை அலையடிக்க வைக்கும். நடுவில் கொட்டாவி விடுவான். இதெதுவும் நடக்காவிட்டாலும் நடுவில் சில வார்த்தைகளை மனதுக்குள்ளேயே பாடிக்கொள்வான், … Continue reading

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , | Leave a comment