பொதுவாக பஜனைப் பாடல்களில் ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று நாமாவளிகளே அதிகம் இருக்கும். அதற்கான பெரிய சொற்களஞ்சியம் ஒன்று எல்லா மொழிகளிலும் உண்டு. கோபாலா என்று வருமிடத்தில் கோவிந்தா என்றாலும் சிக்கலிருக்காது. எனவே ஆற்றொழுக்கு போல எல்லோருமே பாடிவிட முடியும்.
ஆனால் விதிவிலக்காக சில பஜனைப் பாடல்களிளோ வரிகளை லாவகமாகப் பாட வேண்டியிருக்கும். அப்படியானதொரு பாடல் இது. விட்டலனாகிய பாண்டுரங்கன் பக்தி இயக்கத்தின் முக்கியப் புள்ளிகளில் ஒன்றான தெய்வம். தமிழ்ப்பாடல் என்பதால் வழக்கம் போல உற்சாகமாகப் பாடி விட்டான் கனி. இருந்தாலும் சில இடங்களில் மழலை தொனிக்கவே செய்கிறது.