பொதுவாகவே நமக்கு நம்மருகில் இருக்கும் அதிசயங்களை விட தொலைவிலிருக்கும் அதிசயங்களே அதிக ஈர்ப்பை உண்டாக்குகின்றன. ஆக்ராவிலிருக்கும் தாஜ்மகால் ஒரு காதல் சின்னம் என்பதை நாமறிவோம். ஆனால் தஞ்சையிலிருந்து சேதுக்கரை(ராமேஸ்வரம்) செல்லும் வழியில் ஒரத்தநாட்டிலிருக்கும் முக்தாம்பாள் சத்திரம் கூட ஒரு காதல் நினைவுச் சின்னம்தான் என்பதை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்க மாட்டோம்.
அச்சத்திரத்தின் நுழைவாயிலில் உள்ள கல்வெட்டு இது.
ஸ்ரீமத் போஸல வம்சோத்தம இந்தரபதி ச்ரேஷ்ட ப்ரஸாத ஜனித ப்ரதாப ஸ்வீக்ருத தில்லீ வானுபாக ஸ்வாதந்த்ரய விபக்ஷ்ருத தில்லீராஜ்ய ஸார்வ பௌம க்ஷோணீச குலலலாம சோணாவனீ நாயக தஞ்சபுராதீச ஸ்ரீமந்த மஹாராஜா சத்ரபதீ சரபோஜி ராஜே ஸாஹேப யானீ ஸ்திரீ ஸௌபாக்யவதி முக்தாபாயி அம்மாசே நாவே ஸ்ரீசேது மார்கீந்த தஞ்சபுரவ பட்டுக்கோட்டை யாதீனிஸ்தலாஸ மத்யபூபீந்த அன்னஸ்த்ரவ அக்ரஹாரவ சிவாலயவ விஷ்ணுஸ்தல இத்யாதி அமோகதர்ம ப்ரதிஷ்டில தாரீக – சாலிவாகன சகம் 1723 துர்மதி நாம சம்வத்ஸரம் புஷ்ய சுத்த த்ரயோதசி ஸ்திரவாஸரதிகனீ தைமாஸம் தேதி பாஞ்சு(ஆங்கிலம் 16-1-1802)
ஓர் அன்னசத்திரம் எப்படி காதல் சின்னமானது என்பதை அறிய, இந்த கல்வெட்டைப் படித்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம்.வரும்29ந்தேதி தக்கர் பாபா ஹாலுக்கு வாருங்கள். ஆனந்தவல்லி நாவல் வெளியீட்டு விழாவில் தெரிந்து கொள்ளலாம்.
