Category Archives: ஆட்டிசம்

கருட கமன – 08-செப்-2019

இன்று என்னவோ காலையிலேயே பாடும் மனநிலையில் இருந்தான் கனி. இப்போதெல்லாம் ஒரு பாடலை அவன் ஆரம்பிக்கும் விதத்திலேயே அதை முழுமையாகப் பாடுவானா மாட்டானா என்று என்னால் கணித்துவிட முடிகிறது. இரண்டு வரிகள் சென்றபின்னர்தான் இதை சட்டென காணொளி ஆக்கிப் பார்க்கலாமே என்று தோன்றியது. இதுவரை வந்தே மாதரம் கீ போர்ட் தவிர்த்து பிற எல்லாப் பாடல்களுமே … Continue reading

Posted in ஆட்டிசம், இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , | Leave a comment

நானென்பதும் நீயென்பதும் அதுவென்பதும் – கமல தேவி

நூல்: எழுதாப்பயணம் ஆசிரியர்: லஷ்மி பாலகிருஷ்ணன் ஆற்றோரமாக இருந்த மரங்களை தழையுரத்துக்காகக் கழிக்கும் போது அடிமரத்திலிருந்து வளைந்து நெளிந்து கோணலாக வளர்ந்த தென்னங்கன்றை வெட்டிவிடலாம், நாளைக்கு விலைபோகாது, காய்ப்பு எப்படின்னு சொல்லமுடியாது என்று மரமேறி சொன்னார்.பின்நாட்களில் அந்த மரத்தைப் பார்ப்பவர்கள் தாத்தாவிடம், “பொழுதுக்கும் உத்துஉத்து பாத்துக்கிட்டிருக்காம தட்டிவிடுங்க கெண்டியாரே..” என்று சொல்லுவார்கள். பத்துஆண்டுகளாக சரியாக மழையில்லாத பச்சைமலை அடிவாரத்தின் … Continue reading

Posted in ஆட்டிசம், எழுதாப் பயணம், விமர்சனம் | Tagged , , | Leave a comment

எழுதாப் பயணம் – எழுத்தாளர் ஜெயமோகனின் நூலறிமுகம்

எழுதாப்பயணம் நூல் வாங்க   ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை அவர்கள் அடித்திருக்கிறார்கள். அடி என்னும் சொல்லுடன் … Continue reading

Posted in ஆட்டிசம், விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

மௌனம் கலைத்தல்

ஆட்டிசம் என்பது ஒரு குழந்தையின் முதல் மூன்று வருடங்களுக்குள் உருவாகி, வாழ்நாள் முழுமைக்கும் நீடித்து இருக்கக் கூடிய ஒரு வளர்ச்சி நிலைக் குறைபாடு. புறஉலகைப் புரிந்து கொள்ளும் விதம், தகவல் தொடர்பு, கற்பனை வளம் ஆகியவற்றை பாதிக்கும் இக்குறைபாட்டினை குழந்தையின் 18வது மாதத்திலிருந்து கண்டுபிடிக்க முடியும். இவர்களுக்கு பார்த்தல், கேட்டல், தொடு உணர்ச்சி போன்ற உணர்வுகளின் … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், கட்டுரை, சிறப்பியல்புக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் | Tagged , , , , , | Leave a comment

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்

குழந்தைப் பருவத்தில் நம் அனைவருக்கும் மாயாஜாலக் கதைகள் மிகவும் பிடிக்கும்தான். பௌதீக விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் இந்த உலகின் பிடிவாதமான உண்மைகளை ஒரு சூ மந்திரகாளி அல்லது அண்டாகா கசம் போன்ற மந்திர வார்த்தைகளின் மூலம் ஒரு நொடியில் மாற்றியமைக்க முடியுமென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? விளக்கை தேய்த்ததும் வந்து நிற்கும் பூதம் எதை வேண்டுமானாலும் வரவழைத்துக் … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம், கட்டுரை, சமூகம், சிறப்பியல்புக் குழந்தைகள், மாற்று மருத்துவம், மாற்றுத் திறனாளிகள் | Tagged , , , , | 1 Comment

விசாரணைகள்

ஒரு தந்தை தனது விவரமில்லாத மகனை நடைமுறை வாழ்கைக்குத் தயார் செய்ய முடிவு செய்தார். முதல் முயற்சியாக உடல்நலமில்லாது இருந்த பெரியவர் ஒருவரைக் கண்டு நலம் விசாரித்து வரச் சொல்லி தன் மகனை அனுப்பினார். முன் அனுபவம் இல்லாத மகனுக்கு நலம் விசாரித்தல் எனும் சம்பிரதாயச் சந்திப்பில் கேட்க வேண்டிய கேள்விகள் குறித்து கொஞ்சம் சொல்லிக் … Continue reading

Posted in ஆட்டிசம் | Tagged , | 1 Comment