Category Archives: கல்வி

அரும்புமொழி – பிபிசி செய்தி

இவ்வருட புத்தகத் திருவிழாவில் குக்கூவின் நாட்காட்டி கிடைத்தது. அதில், எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது படத்துடன் ஓர் அழகிய வாசகம் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. ‘அகப்பட்டுக் கொண்டுவிட்டோம். நின்று சாதிக்க வேண்டியதுதான்.’ எனும் அவ்வாசகம் எங்களுக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. இவ்வருடம் முடிந்ததும் அப்படத்தை மட்டும் தனியே எடுத்து சட்டமிட்டு வைத்துக் கொள்ள எண்ணியிருக்கிறோம். கனிக்கு … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், எழுதாப் பயணம், கல்வி, சிறப்பியல்புக் குழந்தைகள், மலரும் நினைவுகள் | Tagged , , , , , | 1 Comment

கல்விப் புரட்சியாளர் – மரியா மாண்டிசோரி

மரியா மாண்டிசோரி(August 31, 1870 – May 6, 1952) உலகம் முழுவதிலும் மரபான கல்வி முறைகள் மனப்பாடத் திறனையும், அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்ற கொள்கையையும் மட்டுமே நம்பி செயல்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அந்நிலையில் கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலன்கள் வழியே குழந்தையின் அறிவுத் … Continue reading

Posted in அரசியல், கல்வி, குழந்தை வளர்ப்பு, மாண்டிசோரி | Tagged , , | 1 Comment

ராஜாராம் மோகன் ராய்

”ஒரே கடவுள்தான், உருவ வழிபாடு கூடாது” – ஹீரோ ”வீட்ட விட்டு வெளில போடா நாயே..” – ஹீரோ ஃபேமிலி ”ஆஹா, என் இனமடா நீ… எங்க மதத்துக்கு வந்துரு ராசா” – பாதிரியார்கள் ”பலவீனமான என் மதத்தை விட்டு, இன்னொரு பலவீனமான உங்க மதத்துக்கு நான் ஏன் வரணும்” – ஹீரோ ”ஆஹா, மதவெறியண்டா … Continue reading

Posted in அரசியல், கட்டுரை, கல்வி, பெண்ணியம் | Tagged , , , | Leave a comment

உதிரிப்பூக்கள் 26, ஜூன் 2011

கனிவமுதனை மாலையில் ஒரு சின்ன நடை அழைத்துப் போனேன். தெருவில் இரண்டொரு வீடுகள் தள்ளி ஒரு ஃப்ளாட் உண்டு. அதன் கீழ் தளத்தில் கனியின் வயதொத்த மூன்று குழந்தைகளும் உண்டு. அங்கே போனதும் தோழர்களைப் பார்த்த கனி சத்யாக்ரகம் செய்யவே அங்கே உள்ளே நுழைது குழந்தைகளை விளையாட விட்டு விட்டு பெரியவர்கள் நாங்கள் ஓரமாய் நின்று … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கல்வி, குழந்தை வளர்ப்பு | Tagged , | 3 Comments

அவசரப் பட்டு கல்யாணம் கட்டிட்டோமோ??!!??!!

ஆமாங்க, ஒரு வாரமா நினைப்பு இப்படித்தான் ஒடுது. கல்யாணம் கட்டாம சேர்ந்து வாழறது பத்தி நம்ம சட்டத்துக்கு ஒரு அபிப்ராயமுமே இல்லையாம், அதுனால அப்படி வாழும் உரிமைய தப்புன்னு சொல்ல முடியாதுன்னு உச்ச நீதிமன்றம் குஷ்பு அக்கா வழக்குல நச்சுனு சொல்லியிருக்கு. இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு மட்டும் ரெண்டு வருஷம் முன்னாடியே வந்திருந்தா… … Continue reading

Posted in இலக்கியம், உதிரிப்பூக்கள், கல்வி, சமூகம் | Tagged , , , , , , | 6 Comments

அபத்த களஞ்சியம்

தோழி ஒருத்தி முதுகலை பட்டப் படிப்பு முடித்தவள். ஆரம்பத்திலிருந்தே வேலைக்குச் செல்லும் எண்ணம் அதிகமில்லாதவள். தெரிந்தவர் ஒருவர் மூலம் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் பயிற்சி மையம் ஒன்றில் சமூகவியல் வகுப்புகளை எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும்,  சொற்ப சம்பளமே என்றாலும் சனி ஞாயிறு மட்டும் அதுவும் குறிப்பிட்ட சில வாரங்களில் மட்டும்தான் என்பதால் கமிட்மெண்ட் குறைவு … Continue reading

Posted in கல்வி, சமூகம் | Tagged , , , | 7 Comments

மங்களம்

இது யாரோ ஒரு பெண்ணின் பெயரல்ல. மங்களம் என்பது கச்சேரிகளில் கடைசியாக பாடப்படும் பாடல். மோகன்தாஸுக்கும் எனக்கும் இடையில் நடக்கும் என்னுடைய சிவாஜி பட விமர்சனத்தின் மீதான விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பதிவு. அதுதான் இந்த தலைப்புக்கு காரணம். மோகன் தனது கடைசி பதிவில் ஏதோ தனக்கு வலுச்சண்டைக்கு விருப்பமில்லாதது போலவும் தன் … Continue reading

Posted in அனுபவம், எண்ணம், கல்வி, சமூகம், பதிவர்கள், விமர்சனம் | Tagged , , , | Leave a comment

நம்பிக்கை – 2

தொண்டையை வறளச்செய்யும் இந்த தாகம் பயமுறுத்தினாலும் தூரத்தில் தெரியும் நீர்பரப்பு கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாய் உயிர் தரித்திருக்கிறேன் இன்னமும். தயவு செய்து அது கானல் நீராயிருப்பினும் என்னிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள். இன்னும் சற்று நேரமேனும் நான் உயிர் வாழ விரும்புகிறேன்.

Posted in கல்வி | Tagged | 9 Comments