தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மனச்சிதைவு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: கவிதை
தேடல்
இந்த முறை ஊருக்கு போகும் போது அவசியம் தேட வேண்டும் விடுமுறைக்கு முந்தைய நாளின் பின்மதியப் பொழுதொன்றில் முன்னறிவிப்பின்றி இறங்கத்தொடங்கிய மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில், நெடுஞ்சாலையின் ஒரத்திலிருக்கும் பாழடைந்த கிணற்று மேடையில், ஊருக்கு வெளியிலிருக்கும் முந்திரித்தோப்பில், கல்லூரிக்கு எதிரிலிருக்கும் உடையார் கடையில், இன்னும் நினைவடுக்கில் தட்டுப்படும் எல்லா இடங்களிலும். எங்கேனும் ஒரு இடத்திலாவது இல்லாமலா போய்விடும் … Continue reading
ஏமாற்றம்
கைநிறைய நீரள்ளி வைத்து அதில் நிலவை பார்த்து ரசித்திருக்கும் சிறு குழந்தையென வாழ்ந்து வந்தேன் விரலிடுக்கில் நீர் நழுவுவதறியாமல். நிலவை காணோமென்று காலுதைத்து அழும் குழந்தை போலானேன் இன்று.
முற்றுப்புள்ளி
வாரந்தோறும் வந்து போகும் வெள்ளி மாலை குதூகலமும் திங்கள் காலை சிடுசிடுப்பும் போல நம் உறவும் பிரிவும் நம்மை சுற்றியிருப்பவர்களின் பிரக்ஞையில் பதிந்து போயாகிவிட்டது. பிரியப்போகிறோமென்றோ இணைந்துவிட்டோமென்றோ நண்பர்களிடை சொல்கையில் அவர்களின் இதழோரத்தில் நெளியும் குறுநகையில் தெரிக்கும் ஏளனம் என்னுள் இறக்கும் ஊசிகளின் வலியறிவாயா நீ? இந்த சுழற்சி உனக்கு பிடித்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் … Continue reading
நம்பிக்கை
எழுப்பிய தாயின் மேல் எரிந்து விழுந்துவிட்டு போர்வைக்குள் புதைந்துகொண்டு கலைந்த கனவை தொடர எண்ணுதல் போல் இன்னமும் நம்புகிறேன் நீ மீண்டும் வருவாயென.
கையெட்டும் தூரம்
உதிரத்தொடங்கிவிட்ட சுவற்றுச்சுண்ணாம்பு காட்டுகின்ற தெளிவற்ற ஓவியமாய் மாறியபடியிருக்கின்றன என் முடிவுகள். பெரியதொரு பந்தில் விழுந்த ஊசித்துளை வழி ஒரு சீராய் குறைகின்ற காற்றுப்போல் இறங்கியே வருகிறது என் மனவுறுதி. உன் பார்வை எறும்புகள் ஊர்ந்ததில் நம்மிடையிலான பாறைத்தடைகள் தகர்கின்றன. நம்மிருவருக்கும் இப்போது அப்படியொன்றும் இடைவெளி அதிகமில்லை.
அடுத்தது?
பனிப்புகை மூடிய பாதை போல, மறைந்த எழுத்தாளர் பாதியில் நிறுத்திப்போன தொடர்கதை போல, வாழ்வின் எல்லா திசைகளிலும் மறைக்கும் திரைகள் தொங்குகின்றன. காற்று அசைவற்று நிற்கையில் சலனமற்றிருக்கும் பாய்மரக்கப்பலொன்றின் பயணி போல்திசையறியாது திணறுகிறேன். அடுத்த நொடி பற்றிய யூகங்களும் பயங்களுமாய் கழிகிறதென் வாழ்வு.