Category Archives: குழந்தை வளர்ப்பு

கனி அப்டேட்ஸ் – 33

2015 Jan எங்களுக்கு பண்டிகைகளில் பொங்கலும் திருவிழாக்களில் புத்தகக் கண்காட்சியும் முக்கியமானவை. கனி பிறந்த வருடம் கூட நான் புத்தக கண்காட்சியைத் தவற விட்டதில்லை. சென்ற வருடம் முதல் அவனையும் அழைத்துச் செல்ல ஆரம்பித்திருக்கிறோம். சென்ற வருடம் வெறுமனே நடந்தும், ஓடியும் களைத்துப் போனவனாக திரும்பினான். இந்த வருடமும் அப்படியே இருப்பான் என்று நினைத்துத்தான் அழைத்துப் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment

கனி அப்டேட்ஸ் – 32

2019, July எழுத்துக்களைப் போலவே எண்களின் மீதும் கனிக்கு பிரேமை அதிகம். இரண்டரை வயதிலேயே தமிழ் & ஆங்கிலம் இரண்டிலும் 1000 வரை எண்களின் பெயர்களைச் சொல்வான். எதைச் சொல்லித் தந்தாலும் பிடித்துக் கொள்கிறானே என்று ஏறுவரிசை போலவே இறங்கு வரிசையை சொல்லித் தந்ததும் அதையும் உடனே கற்றுக் கொண்டான். பிறகு எண்களின் மடங்குகளை அறிமுகம் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment

கனி அப்டேட்ஸ் – 31

2012 Dec கனிக்கு பேனா அல்லது பென்சில் பிடித்து எழுதுவதை இன்னும் ஒரு இரண்டு வருடத்துக்காவது தள்ளிப் போடும் எண்ணத்தில் இருக்கிறோம்.  வீட்டில் கரும்பலகையும் சாக்பீஸ்களும் உண்டு. வண்ணமடிக்க க்ரேயான்கள் உண்டு. இவற்றில் மட்டுமே அவனுக்கான எழுத்துப் பயிற்சிகள் – அவனுக்குமே புத்தகத்தை எடுத்து வைத்து படிப்பதில் அல்லது படம் பார்ப்பதில் உள்ள ஆர்வம் எழுதுவதில் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment

கனி அப்டேட்ஸ் – 28

2012 Oct நான்கு நாட்கள் பிறந்த ஊர் வாசம். மழையில் அங்கங்கே ஒழுகும் ஓட்டு வீடு. ஒவ்வொரு ஓட்டைக்கும் ஒரு பாத்திரம் என வீடு முழுக்க பரத்தியதில் வீட்டுக்குள் ஒரு பாத்திரக் கடை ஃபீல். பிரம்மாண்டமான முற்றத்திலிருந்து தெறிக்கும் சாரலில் நின்று கொண்டு மழையை காணாதது கண்டாற் போல் வேடிக்கை பார்க்கும் கனியை கண்காணிப்பதே எனக்கு … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு, Uncategorized | Tagged , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 27

2015 Oct நீண்ட விடுமுறைக்குப் பின் முதல் நாள் பள்ளிக்கு அனுப்புவதற்காக கனியைத் துயிலெழுப்புவது ஒரு பெரிய சாகசம். அவனது மூட் எப்படியும் மோசமாகத்தான் இருக்குமென்பதால் அது மேலும் மோசமாகிவிடக் கூடிய எதையும் செய்யாமலிருக்க வேண்டும். மறந்தும் கூட எந்தவித கட்டளைச் சொற்களையும் பயன்படுத்திவிடக் கூடாது. அடுத்தடுத்து வேலைகளைச் செய்ய வைக்கக் கூடாது. ஒவ்வொரு வேலைக்கும் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment

கனி அப்டேட்ஸ் – 27

2016 March கனியை தினசரி எழுத வைப்பது என்பது கல்லில் இருந்து நார் உரிப்பது போன்ற வேலை. எழுத உட்கார்ந்ததும் அவனுக்கு மூச்சா வரும் அல்லது கக்கா வரும், யாராவது வாசலில் அழைத்தாலோ அல்லது என் கைபேசி அழைத்தாலோ அதை கவனிக்கச் சொல்லி மிகுந்த அக்கறையோடு எனக்கு கட்டளையிடுவான், கொசு கடிக்கிறது என்ற பாவனையில், ”அம்மா … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment

கனி அப்டேட்ஸ் – 26

2016 Jan கனி தினமும் காலையில் எழுந்து வந்தவுடன் தனது கஜானாவை சரி பார்ப்பார். அதாவது விளையாட்டு சாமான்கள் கொண்ட கூடையை தலைகுப்புறக் கவிழ்த்து எல்லாவற்றையும் கீழே கொட்டி அதிலிருந்து ஒரு சிறு பந்தையோ அல்லது பொம்மையையோ எடுத்து விளையாட்டை ஆரம்பிப்பார். அதன் பிறகு ஒரு போதும் அச்சாமான்களின் மீது பிற யாருடைய கையும் படவே … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | Leave a comment