Category Archives: குழந்தை வளர்ப்பு

கனி அப்டேட்ஸ் – 41

கனியோடு செல்வதென்றால் பொதுப் போக்குவரத்துகளில்  ரயில் பயணம் மட்டுமே முன்பெல்லாம் என் தேர்வாக இருந்தது. சமீப காலமாக பேருந்திலும் அவனை ஏற்றி இறக்க ஆரம்பித்திருக்கிறேன். அதில் ஏற்படும் ஆரம்பகட்ட அல்லல்கள் கொஞ்சநஞ்சமல்ல. வேகமாக வாசிப்பவன் என்பதால் பேருந்தின் படிக்கட்டில் பின்புறம் ’ஏறும் வழி’என்றும், முன்புறம் ’இறங்கும் வழி’ என்றும் எழுதப்பட்டிருப்பதை ஆரம்பத்திலேயே படித்துவிட்டான். பொதுவாகவே ஆட்டிச … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 40

முன்பெல்லாம் கனி ஏதேனும் தவறு செய்துவிட்டால் நாம் அதைப் பற்றி ஏதும் பேசுவதற்கு முன்னரே ஃபினிஷ்டு என்பான். அதன்பிறகு அப்படி சொல்வது என் கோபத்தை அதிகரிக்கிறது என்று புரிந்து கொண்டவனாக சாரி அம்மா என்று சொல்ல ஆரம்பித்தான். ஆனால் சாரி சொல்லி முடிக்கும் முன்னரே நாம் ‘இட்ஸ் ஒகே’ என்று சொல்லி அதை ஏற்றுக் கொண்டாக … Continue reading

Posted in ஆட்டிசம், கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , , | 1 Comment

கனி அப்டேட்ஸ் – 39

ஒரு படத்தில் செந்தில் எதோ சொல்லிவிட கவுண்டர் இதை அப்படியே போய் தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வச்சுட்டு, பக்கத்துலயே நீயும் உக்காந்துக்க ராசான்னுவார் நக்கலா. விடுமுறை நாளின் வழக்கமான ஆசாரப்படி காலையில் எழுந்ததுமே கனி எங்க போறோம்னு ஆரம்பித்தான். மழை இல்லாம இருந்தா மைலாப்பூர் போறோம்னு ரொம்ப கவனமா பதில் சொன்னேன். உடனே அதை நானோ/அவனோ … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 38

Aug, 2019 குடும்பமாக பயணிக்கும் பொழுதுகளில் யாராவது ஒரு பெரியவர் மொத்தப் பொதிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதை பார்த்திருப்போம். பை, பெட்டி, தட்டுமுட்டு சாமான்களோடு குட்டிக் குழந்தைகளையும் சேர்த்தே கணக்கில் வைத்திருந்து, ஒவ்வொரு இடத்திலும் ஏறும்போதும், இறங்கும்போதும் எண்ணிக் கொண்டே இருக்கும் உறவுக்காரர்கள் எல்லாருக்கும் வாய்த்திருப்பார்கள். கடந்த சிலவருடங்களாகவே எங்கள் வீட்டில் அந்தப் பொறுப்பை கனி ஏற்றுக் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 37

2019, Aug ஒரு நாளை என்ன செய்வது என்பது கனிக்கு தினமும் எழும் பெரிய வினா. ஏதேனும் ஒரு விஷயத்திற்குள் மூழ்குவது, ஒரே மாதிரியான நிகழ்வுகளின் அட்டவணைகளை தினந்தோறும் கடைபிடிப்பது போன்றவை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கனிக்கு பயணங்களும் முக்கியம். ஒவ்வொரு நாளும் கொஞ்ச தூரமாவது பயணித்தே ஆக வேண்டும் அவனுக்கு. மழை நாட்கள் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment

கனி அப்டேட்ஸ் – 36

Nov 2017 எவ்வளவு தூரத்துக்கு தகவல் தொடர்பாற்றல் வளர்கிறதோ அவ்வளவுக்கு இந்தப் பயலுக்கு ஞாபக மறதி கூடி வருகிறது. எதோ இந்த மட்டுக்கும் கூடுதலாக நான்கு வார்த்தை பேசுகிறானே என்று மகிழ்வதா,  அல்லது இருந்த வெகுசில வலிமைகளில் ஒன்றான நினைவாற்றல் மட்டுப் படுவதை நினைத்து கவலைப்படுவதா என்று குழம்பித் திரிந்து கொண்டிருந்தோம். ஆனால் கட்டாயம் அதெல்லாம் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 35

2014 Feb பக்கத்து கோவிலில் ராகுகால பூஜைக்கென ஒரு மகளிர் மண்டலி ஒன்று உண்டு. செவ்வாய் & வெள்ளிக் கிழமைகளில் விஸ்தாரமான ஸ்லோக பாராயணங்கள் நடக்கும். ராகு காலத்திற்கான ஸ்லோகங்கள் மட்டுமல்லாமல் லலிதா சகஸ்ரநாமம் தொடங்கி பல்வேறு பாடல்கள் பாடுவார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாகவே பாடல்கள் போகும். பாடல் முடியப் போகும் நேரத்தில் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment

கனி அப்டேட்ஸ் – 34

2013 Oct மடிக்கணிணியில் வேலையில் ஆழ்ந்திருந்த என்னிடம் பில்டிங்க் ப்ளாக் பையைக் கொண்டுவந்து கொடுத்து திறந்து கொடுக்க சொன்னான். கொடுத்துவிட்டு என் வேலையைத் தொடர்ந்தேன்.  ஐந்தே நிமிடத்தில் என்னிடம் வந்து ட்ரெயின் என்றான். நிமிர்ந்து பார்த்தால் இதை செய்து அடுக்கியிருக்கிறான்.

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 2 Comments

கனி அப்டேட்ஸ் – 33

2015 Jan எங்களுக்கு பண்டிகைகளில் பொங்கலும் திருவிழாக்களில் புத்தகக் கண்காட்சியும் முக்கியமானவை. கனி பிறந்த வருடம் கூட நான் புத்தக கண்காட்சியைத் தவற விட்டதில்லை. சென்ற வருடம் முதல் அவனையும் அழைத்துச் செல்ல ஆரம்பித்திருக்கிறோம். சென்ற வருடம் வெறுமனே நடந்தும், ஓடியும் களைத்துப் போனவனாக திரும்பினான். இந்த வருடமும் அப்படியே இருப்பான் என்று நினைத்துத்தான் அழைத்துப் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment

கனி அப்டேட்ஸ் – 32

2019, July எழுத்துக்களைப் போலவே எண்களின் மீதும் கனிக்கு பிரேமை அதிகம். இரண்டரை வயதிலேயே தமிழ் & ஆங்கிலம் இரண்டிலும் 1000 வரை எண்களின் பெயர்களைச் சொல்வான். எதைச் சொல்லித் தந்தாலும் பிடித்துக் கொள்கிறானே என்று ஏறுவரிசை போலவே இறங்கு வரிசையை சொல்லித் தந்ததும் அதையும் உடனே கற்றுக் கொண்டான். பிறகு எண்களின் மடங்குகளை அறிமுகம் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment