Category Archives: சமூகம்

உறவுகள் தொடர்கதை

இதோ வந்துவிட்டது பொங்கல் திருநாள். தமிழர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானதும், உன்னதமானதும் இந்த பொங்கல் திருவிழாதான். முன்பெல்லாம் விரிவாக நான்கு நாட்களுக்கு வெவ்வேறு கருத்துக்களில் அடிப்படையில் கொண்டாடப் பட்ட விழா இன்று சுருங்கி ஒரு நாள் பண்டிகையாக மாறிவிட்டது. பொங்கல் என்பது விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடும் பண்டிகை என்பது … Continue reading

Posted in எண்ணம், கட்டுரை, காணும் பொங்கல், சமூகம், செல்லமே | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

பார்த்துப் பகிருங்கள்

கல்லூரி முடியும் நேரம் நெருங்க நெருங்க, புவனாவின் முகம் இறுக்கமாகிக் கொண்டிருந்தாலே அவள் தோழியருக்கு விஷயம் புரிந்துவிடும். “என்னடி! உங்க அணைக்கரை மாமா வந்திருக்காராக்கும்?” என்று கேட்டால், சங்கடமாக ‘ஆம்’  என்று தலையசைப்பாள். மிகவும் நெருங்கிய சொந்தக்காரர். அவள் மீது கொள்ளை அன்பும் அக்கறையும் உள்ளவரும் கூட! ஆனாலும் அவரது வருகை எப்போதும் புவனாவுக்கு எரிச்சலையே … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

முன்னுதாரணம்

மகாபாரதத்தில் ஒரு இடம். குக்ஷேத்திர யுத்தத்தில் கௌரவர்களின் சேனாதிபதியாக முதலில் பதவியேற்பவர் பீஷ்மர். அவரது தலைமையில் யுத்தம் நடந்தபோதுதான் அபிமன்யு கொல்லப்பட்டது போன்ற அதர்மங்கள் நடந்தன. அதன்பின் துரோணரும், அவருக்குப் பின் கிருபரும் சொற்பநாட்களுக்கு கௌரவ சேனாதிபதியானார்கள். அவர்களின் தலைமையின் கீழும் சில விதிமீறல்கள் நடக்கவே செய்தன. பாண்டவர்தரப்பில் 18 நாளுமேஅதர்மயுத்தம்தான். அதே சமயம் கிருபருக்குப் … Continue reading

Posted in அரசியல், எண்ணம், சமூகம் | Tagged , , | 1 பின்னூட்டம்

இல்லத்தரசர்கள் ஏன் உருவாவதில்லை?

எழுத்தோ இசையோ சிற்பமோ கலை எதுவாயினும் கலைஞன் என்பவன் ஒரு விசேஷமான பிறவிதான். எந்தக் கலையும் மறையாத நுண்ணுர்வையும், தீராத படைப்பூக்கத்தையும் கோருவது. ஒரு மனிதன் கலையை ரசிக்கவே நுண்ணுர்வோடும், ரசனையோடும் அதற்கென தனிப்பட நேரம் செலவிடத் தயாராகவும் வேண்டுமென்றால் கலைஞன் அக்கலைப் படைப்புகளை படைக்க எவ்வளவு நேரம் செலவிட வேண்டியிருக்கும்? அப்படி தன் உணர்வுகளையும், … Continue reading

Posted in இலக்கியம், எண்ணம், கட்டுரை, சமூகம் | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

உதிரிப்பூக்கள் 2 – ஜன-2011

எனது வலைப்பதிவுகளை தூசி தட்டிப் பார்க்கும் போது தெரியும் ஒரு விஷயம் – திருமணத்திற்கு முன்பு வரை நான் ஒரளவுக்கேனும் அவ்வப்போது கதை,கவிதையென பத்திரிக்கைகளுக்கு எழுதுவதும், வலைப்பதிவில் புத்தக விமர்சனப் பதிவுகள் போட்டும் வந்திருக்கிறேன். திருமணத்திற்குப் பின் படிப்பது ஒன்றும் குறைந்துவிடவில்லை – சொல்லப் போனால் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஏன் எழுதுவதில்லை என்று யோசித்துப் பார்த்தால்.., … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், சமூகம், பதிவர்கள் | Tagged , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

உதிரிப்பூக்கள் – 23 அக்டோபர் 2010

கனிவமுதனுக்கு இன்று முதல் ஹேர் கட். நேற்றிலிருந்தே பாலா கிலி ஏற்படுத்தியிருந்தார். தான் முடிவெட்டிக் கொள்ள போன சமயங்களில் குழந்தைகளை கூட்டி வந்து திணறிப் போன பெற்றோர்களைப் பற்றிய கதையாகவே நேற்று முதல் அவர் பேச்சில் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு திகிலுடன் தான் சலூனுக்குள் நுழைந்தோம். பாலா வழக்கமாகப் போகும் கடைதான் என்பதால் முடிதிருத்துபவர் வாங்க … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, சமூகம், மூட நம்பிக்கை | Tagged , , , | 7 பின்னூட்டங்கள்

உதிரிப்பூக்கள்- 29-ஆகஸ்ட்-2010

சமீப காலங்களில் அவ்வப்போது பார்க்கும் டிவி நிகழ்சிகள் மூலம் தங்கலீஷில் பேசுவதில் ஏற்பட்டிருக்கும் ஒரு முன்னேற்றம் கண்ணில் பட்டது. முன்பெல்லாம் தமிழ் வாக்கியங்களின் நடுவே ஆங்கில வார்த்தைகள் கலந்து பேசுவார்கள். இது ’பண்ணி’ மொழி என்று அறியப்படும் – நிச்சயமாக மூன்று சுழி ‘ண’தான் உபயோகிக்க வேண்டும், இரண்டு சுழி ‘ன்’ வரக்கூடாது. “நான் நல்லா … Continue reading

Posted in உதிரிப்பூக்கள், எண்ணம், சமூகம், பதிவர்கள் | 3 பின்னூட்டங்கள்