Category Archives: சிறுகதை

ஜெயமோகனின் நூறு கதைகள் – 2

இந்தக் கதைகளின் வரிசையில் முதல் கதையும், கடைசிக் கதையும் தற்கொலை எண்ணத்தை மையப்படுத்தியவை.  கவிதை, கட்டுரை, மேடைப்பேச்சு, அரசியல் என பலதளங்களிலும் இயங்கிய எம்.கே எனும் மாமனிதரின் இறப்புக்குப் பின் அவர் கேரள அறிவியக்கத்தில் ஏற்படுத்திய புத்தெழுச்சியைப் பற்றியும், அவரது வாழ்வைப் பற்றியும் சில அறிவுஜீவிகள் கூடிப் பேசிக் கொள்ளும் உரையாடலாக ஆரம்பிக்கிறது அவரது முதல் … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, சிறுகதை, ஜெயமோகன், விமர்சனம் | Tagged , , , | 3 Comments

பிறப்பொக்கும்

முதல் டிகாஷனின் கசப்பும், வீட்டுப் பசுவின் பாலின் சுவையுமாக அம்மா தந்த அந்தக் காலை காபி அமர்க்களமாக இருந்தது. “ஏ ஒன் காபிம்மா. அதெப்பெடிம்மா உன் கைக்கு மட்டும் இப்படி ஒரு ருசியும், மணமும் வாய்க்குது?” சப்புக் கொட்டிக் கொண்டே அம்மாவிடம் கேட்டேன். “சரிதான் போடா… எதையாவது உளறாதே…” என்று செல்லமாய் சொல்லிவிட்டு காலி டம்ப்ளரை … Continue reading

Posted in சிறுகதை | Tagged | 3 Comments

ஒரு கோழியும் சில குஞ்சுகளும் – சிறுகதை

இரவு ஆஃப்ஷோர் டீமுடன் பேசி முடித்துவிட்டுப் படுக்க ரொம்பவுமே நேரமாகியிருந்தது. அதனால் காலையில் ரேவதிக்கு கண்ணே திறக்க முடியாத அளவு எரிச்சல். இருந்தாலும் காலை ஒன்பது மணிக்கு இருந்த கிளையண்ட்டுடனான மீட்டிங்க் நினைவு அவளை படுக்கையிலிருந்து பிடுங்கி எழுப்பி கிளம்பச் சொன்னது. கார்ன் ஃபேளக்சை பால் விட்டு சாப்பிட்டுவிட்டு இரவு சமைத்ததில் மீதமிருந்ததை மதியத்துக்கு பேக் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment

புரிதல்!

(சிறுகதை) கல்யாணமான இந்த நான்கு வருடங் களில், நானூறு முறை கேட்ட வார்த்தைகள் தான் என்றாலும் கூட, முதல் தடவை போலவே, ஒவ்வொரு முறை அந்த வார்த்தை களைக் கேட்கும் போதும், மிளகாயை அரைத்துப் பூசினாற் போலத் தான் பானுவுக்கு எரிகிறது; இன்றும் எரிந்தது. ஏழரை மணிக்கு அலுவலக பஸ்சை பிடிப்பதற்கு முன்னரே காலைச் சிற்றுண்டி, … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , | 10 Comments